Advertisment

கோவையில் சுவர் இடிந்து உயிரிழந்த 17 பேர் குடும்பத்தினரின் பரிதாப நிலை; யார் பொறுப்பு?

கோவை மேட்டுப்பாளையத்தில் தடுப்புச்சுவர் இடிந்து விழுந்ததால் 4 வீடுகள் இடிந்து விழுந்ததில் 17 பேர் பரிதாபமாக பலியான சம்பவம் பல பிரச்னைகளை விவாதாமாகியுள்ளது. கடந்த இரண்டு நாட்களாக தமிழகம் முழுவதும் பெய்த தொடர்மழை கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே உள்ள நடூர் கிராமத்தில் 4 தலித் குடும்பங்களுக்கு தீராத கண்ணீரை கொண்டுவந்துள்ளது.

author-image
Balaji E
புதுப்பிக்கப்பட்டது
New Update
Mettupalayam wall collapse incident

17 dalit people dead near Mettupalayam in Coimbatore, wall collapse due heavy rain,வீடுகள் இடிந்து விழுந்து விபத்து, 17 பேர் பலி, கோவை மேட்டுப்பாளையம், நடூர் கிராமம், houses collapse 17 people dead,17 தலித்துகள் பலி, 17 people dead in Coimbatore, houses collapse Nadur Village, heavy rain in Coimbatore Mettupalayam, who is responsible for thi tragedy, 17 dalit people dead, 17 dalit people dead in mettupalayam

கோவை மேட்டுப்பாளையத்தில் தடுப்புச்சுவர் இடிந்து விழுந்ததால் 4 வீடுகள் இடிந்து விழுந்ததில் 17 பேர் பரிதாபமாக பலியான சம்பவம் பல பிரச்னைகளை விவாதாமாகியுள்ளது.

Advertisment

கடந்த இரண்டு நாட்களாக தமிழகம் முழுவதும் பெய்த தொடர்மழை கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே உள்ள நடூர் கிராமத்தில் 4 தலித் குடும்பங்களுக்கு தீராத கண்ணீரை கொண்டுவந்துள்ளது.

மேட்டுப்பாளையம் அருகெ உள்ள நடூர் கிராமத்தில், தலித் மக்களான அருந்ததியர்கள் வீடுகளும், பிற்படுத்தப்பட்டவர்களின் வீடுகளும் அருகருகே உள்ளது. அந்த கிராமத்தின் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த பங்களாவீட்டின் உரிமையாளர் சிவசுப்பிரமணியம், அருந்ததியர்களின் வீடுகளுக்கும் தனது வீட்டுக்கும் இடையே 20 அடி உயரம் 2 அடி அகலம் அளவுள்ள 80 அடி நீளம் கொண்ட கருங்கல்லால் ஆன தடுப்புச் சுவரை பல ஆண்டுகளுக்கு முன்பு கட்டினார்.

மெரினாவில் நுரை தள்ளியதற்கு அரசு அலட்சியம் காரணமா?

கடந்த இரண்டு நாட்களாக பெய்த தொடர் மழைக் காரணமாக அந்த சுவர் திங்கள்கிழமை அதிகாலை பராமரிப்பு இல்லாத அந்த சுவர் தீடீரென இடிந்து அருகிலுள்ள தலித்துகளின் 4 வீடுகள் மீது விழுந்தது. அதிகாலை நேரம் என்பதால் அனைவரும் வீடுகளுக்குள் உறங்கிக்கொண்டுருந்ததால் அனைவரும் இடிபாடுகளில் சிக்கிக்கொண்டு படுகாயம் அடைந்தனர். இதில், 10 பெண்கள், 3 ஆண்கள், 4 குழந்தைகள் உள்பட 17 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

சுவர் இடிந்து விழுந்து 17 பேர் பலியான சம்பவம் நாடு முழுவதும் பெரிய அதிச்சியை ஏற்படுத்தியது. உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு மீட்பு படையினர் இடிபாடுகளில் சிக்கிய 17 உடல்களை மீட்டனர். படுகாயம் அடைந்தவர்கள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

இதற்கு முன்பு அந்த சுவரிலிருந்து பெயர்ந்த ஒரு கருங்கல் அருகிலுள்ள வீட்டின் மீது விழுந்ததால் இந்த சுவரை அகற்ற வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்தது தெரியவந்துள்ளது. ஊர் பொதுக்கூட்டத்தில் அந்த சுவரை அகற்றவேண்டும் என்று தலித் மக்கள் வலியுறுத்தியபோது, சிவசுப்பிரமணியம் இந்த சுவர் அகற்றப்பட்டால் தனது சுய கௌரவம் பாதிக்கப்படும் என்று கூறி சுவரை அகற்ற மருத்துள்ளார். அது மட்டுமில்லாமல், சுவரை அகற்றக் கோரி அப்பகு குடியிருப்பு வாசிகள் பலமுறை புகார் தெரிவித்தும் நில உரிமையாளர் மற்றும் நகராட்சி நிர்வாகத்தின் அலட்சியத்தால் இந்த துயர சம்பவம் நடந்துள்ளதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

இதனிடையே, உயிரிழப்புக்கு காரணமான சுவரின் உரிமையாளர் சிவசுப்பிரமணியத்தை கைது செய்ய வேண்டும் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் அவர்களின் வீட்டில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி, சுவர் இடிந்து விழுந்ததில் பலியான 17 பேர் குடும்பத்தினர், உறவினர்கள், பொதுமக்கள், திமுக கோவை வடக்கு மாவட்ட செயலாளர் சி.ஆர்.ராமச்சந்திரன், நகரச் செயலாளர் முகமது யூனுஸ், தமிழ்ப் புலிகள் அமைப்பின் தலைவர் நாகை.திருவள்ளுவன், விடுதலை சிறுத்தைகள் கட்சி, சிஐடியு உள்ளிட்ட அரசியல் கட்சியினர், மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனை முன்பு சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.

இதையடுத்து, சம்பவ இடத்துக்கு விரைந்துவந்த போலீசார் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியதில் உடன்பாடு ஏற்படாததைத் தொடர்ந்து, அவர்களைத் தடியடி நடத்தி கலைத்தனர். மறியலில் ஈடுபட்ட 50 பேரை போலீசார் கைது செய்தனர். அப்போது, அவர்கள் இந்த சுவரும் ஒருவகையான தீண்டாமைச் சுவர்தான் என்று வலியுறுத்தினர். கைது செய்யப்பட்டவர்களில் 24 பேரை நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்த நிலையில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மேட்டுப்பாளையத்தில் உள்ள நடூர் கிராமத்திற்கு நேரில் சென்று சுவர் இடிந்து விழுந்து பலியான குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார். இது குறித்து அவருடைய டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிடுகையில், “மேட்டுப்பாளையத்தில் சுவர் இடிந்து பலியானோரின் குடும்பத்தினரைச் சந்தித்து ஆறுதல் கூறினேன். இதயம் கனத்தது. 4 குடும்பங்கள் நிர்மூலமாகி உள்ளன. மாவட்ட ஆட்சியரிடம் பாதிப்புகள் குறித்துப் பேசினேன். பாதிக்கப்பட்ட குடும்பத்தினரின் கோரிக்கைகளை நிறைவேற்ற ஆவன செய்ய வலியுறுத்தி உள்ளேன்.” என்று குறிப்பிட்டார்.

இதையடுத்து, முதல்வர் எடப்பாடி பழனிசாமி மேட்டுப்பாளையத்துக்கு நேரில் சென்று சுவர் இடிந்து விழுந்து பலியான குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.

பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் பழனிசாமி, “வீடுகளை இழந்தவர்களுக்கு புதிய வீடுகள் கட்டித்தரப்படும். அந்த பகுதியில் பாதுகாப்பற்ற முறையில் உள்ள வீடுகளில் வசிப்போருக்கும் புதிய வீடுகள் கட்டித்தரப்படும். இந்த விவகாரத்தில் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். இந்த சம்பவத்தை வைத்து அரசியல் செய்ய வேண்டாம். குடும்பத்தில் ஒருவருக்கு தகுதிக்கேற்ப அரசு வேலை வழங்கப்படும். சுவர் இடிந்து விழுந்து உயிரிழந்த 17 பேரின் குடும்பத்திற்கு தலா ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்கப்படும்” என்று கூறினார்.

இதற்கு முன்னதாக, 17 பேரின் உயிரிழப்புக்கு காரணமான சுவரின் உரிமையாளர் சிவசுப்பிரமணியம் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டார்.

இதனிடையே, சுவர் இடிந்து விழுந்ததில் பலியானவரின் மகள், ஊடகங்களிடம் கூறியது பலரின் மனதை உலுக்கியுள்ளது.

செய்தியாளர் அந்த சிறுமியிடம், உங்களுடைய வீடு இடிந்துவிட்டது, புத்தகம் இல்லை. அப்பா இறந்துவிட்டார். அப்பா இல்லாமல் ரொம்ப கஷ்டப்படுகிறீர்கள். உங்களுக்கு என்ன தேவை என்று கேட்கிறார். அதற்கு அந்தச் சிறுமி அழுதுகொண்டே, “நான் அஞ்சாவது படிக்கிறேன். எனக்கு புக், நோட்டு, துணி மணி தந்தால் நான் எங்கம்மாவை காப்பாற்றிவிடுவேன். எங்கப்பாதான் மேல போயிட்டாங்க..” என்று அந்த சிறுமியின் வார்த்தைகள் மனதை உலுக்கும்படியாக உள்ளது.

இந்த விபத்தில் செல்வராஜின் மகள், நிவேதாவும் மகன் ராமநாதனும் பரிந்தாபமாக உயிரிழந்தனர். நிவேதா கல்லூரியிலும், ராமநாதன் 11 ஆம் வகுப்பும் படித்துவந்தார்கள். டீக்கடை நடத்திவந்த செல்வராஜ், தனது வீட்டில் போதிய இடம் இல்லாததால், அவருடைய மகளும் மகனும் அருகே உள்ள உறவினர் பழனிசாமி வீட்டில் வழக்கம் போல தூங்கியபோதுதான் சுவர் இடிந்து விழுந்து உயிரிழந்தார்கள்.

உயிரிழந்த இவர்கள் இருவரும் இளம் வயதினர் என்பதால் அவர்களுடைய கண்கள் தானம் செய்தால் யாருக்காவது பார்வை கிடைக்க உதவும் என்று மருத்துவர்கள் செல்வராஜிடம் கூறியுள்ளனர். மருத்துவர்களின் வார்த்தைகளைக் கேட்டுக்கொண்ட அவர் இந்த மாபெரும் துயரத்திலும் அவர்கள் கண்களை தானம் செய்ய ஒப்புக்கொண்டார். இதனால், அவர்களின் கண்களை அறுவைசிகிச்சை மூலம் மருத்துவர்கள் எடுத்தனர். இந்த சம்பவர் பலரின் மனதை கரைய வைத்துள்ளது.

தொடர் மழை காரணமாக இந்த சுவர் இடிந்து விழுந்து இருந்தாலும், தலித் மக்களின் குடியிருப்புகளுக்கு மத்தியில் 20 அடி உயரத்தில் 80 அடி நீளத்துக்கு தடுப்புச்சுவர் எழுப்பியதன் நோக்கம் பலரும் தீண்டாமைச் சுவர் என்று கூறி கேள்விக்குள்ளாக்கி உள்ளனர். சுவாரால் ஆபத்து ஏற்படும் என்பதாலும் அந்த சர்சைக்குரிய சுவரை அகற்ற வேண்டும் என பலமுறை புகார் தெரிவித்தும் சுவரை அகற்ற மறுத்துள்ளார் உரிமையாளர் சிவசுப்பிரமணியம். நகராட்சி நிர்வாகமும் நடவடிக்கை எடுக்காமல் அலட்சியம் காட்டியுள்ளது. இதனால், பராமரிப்பு இல்லாத அந்த மிகப்பெரிய சுவர் இடிந்து விழுந்து 17 பேர் பலியாகி 4 குடும்பங்கள் நிர்மூலமாகி உள்ளது.

தமிழக முதல்வர் பழனிசாமி இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு இழப்பீட்டை உயர்த்தி வழங்கி, குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை, புதிய வீடு என்று அறிவித்திருப்பது என்றாலும் இந்த மாபெரும் துயர சம்பவத்திற்கு யார் பொறுப்பேற்பது?

Tamilnadu Coimbatore
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment