தமிழகத்தில் உள்ள 19 மாவட்டங்களில் இன்று மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வடகிழக்கு பருவமழை தொடங்கி இருக்கும் நிலையில் தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி மாநிலங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருக்கும் என்ற இந்தியா வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. இந்நிலையில் இன்று தமிழ்நாட்டில் உள்ள 19 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி கடலூர், அரியலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
மேலும் புதுக்கோட்டை, சிவங்கை, திண்டுக்கல், மதுரை, ராமநாதபுரம், கோயம்புத்தூர் உள்ளிட்ட மாட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது. திருச்சி, தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
தீவிர புயலான ஹாமூன், புயலாக வலுவிழந்து வங்கதேசம் அருகே கரையை கடந்தது. அடுத்த 6 மணி நேரத்தில் ஆழந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“