இதுகுறித்து உள்துறை செயலாளர் நிரஞ்சன் மார்டி வெளியிட்டுள்ள உத்தரவில், சென்னை பெருநகர முன்னாள் காவல்துறை ஆணையர் ஜார்ஜ், தீயணைப்புத் துறை மற்றும் மீட்பு பணித்துறை இயக்குநராகவும், தீயணைப்புத் துறை மற்றும் மீட்பு பணித்துறை இயக்குநராக இருந்த கூடுதல் டிஜிபி குடுவாலா, காவலர் பயிற்சி பள்ளி இயக்குநராகவும் மாற்றப்பட்டுள்ளனர்.
காவலர் பயிற்சி பள்ளி இயக்குநராக இருந்த மகேந்திரன் லஞ்சம் மற்றும் தமிழக மின்உற்பத்தி மற்றும் விநியோக துறைக்கும்(டான்ஜெட்கோ), காத்திருப்போர் பட்டியலில் இருந்த ஐஜி சாரங்கன் சென்னை அமலாக்கத்துறை ஐஜியாகவும் மாற்றப்பட்டுள்ளனர்.
அதேபோல், காத்திருப்போர் பட்டியலில் இருந்த செந்தாமரைக்கண்ணன், சென்னை காவலர் தொழில்நுட்ப பிரிவு ஐஜியாகவும், சென்னை நுண்ணறிவு பிரிவு கூடுதல் கமிஷ்னராக இருந்த தாமரை கண்ணன், சென்னை குற்றப்பிரிவு சிஐடி ஐஜியாகவும், காத்திருப்போர் பட்டியலில் இருந்த டிஐஜி ஜோஷி நிர்மல் குமார், உளவுத்துறை சிஐடி-யின் டிஜிபியாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
சென்னை நுண்ணறிவுப் பிரிவு டிஐஜியாகவும், காத்திருப்போர் பட்டியலில் இருந்த பிரேம் ஆனந்த சின்கா, சென்னை வடக்கு இணை கமிஷ்னராகவும், காத்திருப்போர் பட்டியலில் இருந்த ஜெயக்குமார் விழுப்புரம் மாவட்ட கண்காணிப்பாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
காத்திருப்போர் பட்டியலில் இருந்த செல்வகுமார் பூக்கடை துணை கமிஷ்னராகவும், காத்திருப்போர் பட்டியலில் இருந்த முத்தரசி சென்னை காவல் நிர்வாக துறை ஏஐஜியாகவும் மாற்றப்பட்டுள்ளனர்.
திருநெல்வேலி மாவட்ட கண்காணிப்பாளராக இருந்த விக்ரமன் சென்னை கியூ பிரிவு சிஐடியாகவும், மதுரை மாநகர சட்டம், ஒழுங்கு துணை கமிஷனராக இருந்த அருண் சக்தி குமார் திருநெல்வேலி மாவட்ட கண்காணிப்பாளராகவும், சென்னை சட்டம் ஒழுங்கு ஏஐஜியாக இருந்த திருநாவுக்கரசு சென்னை மாநகர நுண்ணறிவு பிரிவு துணை கமிஷ்னராகவும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
ஈரோடு சிறப்பு அதிரடிப்படை கணிகாணிப்பாளராக இருந்த சிபி சக்ரவர்த்தி திருவள்ளூர் மாவட்ட கண்காணிப்பாளராகவும், சென்னை சிறப்புப் பிரிவு எஸ்பி சிஐடி கண்காணிப்பாளராக இருந்த அர அருளரசு, நாமக்கல் மாவட்ட கண்காணிப்பாளராகவும், சென்னை சிபிசிஐடி கண்காணிப்பாளராக இருந்த ஓம் பிரகாஷ் மீனா, ராமநாதபுரம் கண்காணிப்பாளராகவும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
மதுரை அமலாக்கப்பிரிவு கண்காணிப்பாளராக இருந்த தேஷ்முக் சேகர் சஞ்சய் நாகப்பட்டினம் மாவட்ட கண்காணிப்பாளராகவும், ஈரோடு சிறப்பு அதிரடிப்படை ஏஎஸ்பியாக இருந்த அருண் பாலகோபாலன் திருநெல்வேலி மாவட்ட நாங்குநேரி, ஏஎஸ்பியாகவும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.