Advertisment

2019 மக்களவை தேர்தல் - கவனம் ஈர்த்த மோடி - திமுக மோதல்

MK Stalin vs Narendra Modi in Lok Sabha Election 2019: ஸ்டாலின் பேச்சிற்கு பதிலடிக்கும் வகையில், பிரதமர் மோடி, பாரதிய ஜனதா கட்சி தேசிய தலைவர் அமித் ஷா, தமிழக பா.ஜ. தலைவர் தமிழிசை சவுந்தர்ராஜன் பேச்சுக்களும் அமைந்திருந்தன.

author-image
kumaranbabu tk
புதுப்பிக்கப்பட்டது
New Update
election 2019, lok sabha election 2019, general election 2019, mk stalin, narendra modi, tamil nadu, tamil nadu mk stalin, pm narendra modi, stalin vs modi, mk stalin vs narendra modi, stalin vs modi in lok sabha election 2019

election 2019, lok sabha election 2019, general election 2019, mk stalin, narendra modi, tamil nadu, tamil nadu mk stalin, pm narendra modi, stalin vs modi, mk stalin vs narendra modi, stalin vs modi in lok sabha election 2019

PM Narendra Modi vs DMK President MK Stalin: மக்களவை தேர்தலையொட்டி, தமிழகத்தில் நடந்த தேர்தல் பிரசார கூட்டங்களில் அரசியல் கட்சி தலைவர்கள் ஒருவருக்கொருவர் மற்றவர்களை தாக்கிப்பேசுவது இந்த தேர்தல் பிரசார கூட்டங்களிலும் அதிகமாக காணப்பட்டது.

Advertisment

திமுக தலைவர் ஸ்டாலின், மத்தியில் ஆளும் பிரதமர் மோடி தலைமையிலான அரசு மற்றும் மாநிலத்தில் ஆளுங்கட்சியாக உள்ள அதிமுக அரசை கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்தார்.

MK Stalin vs Narendra Modi in Lok Sabha Election 2019: ஸ்டாலின் பேச்சிற்கு பதிலடிக்கும் வகையில், பிரதமர் மோடி, பாரதிய ஜனதா கட்சி தேசிய தலைவர் அமித் ஷா, தமிழக பா.ஜ. தலைவர் தமிழிசை சவுந்தர்ராஜன் பேச்சுக்களும் அமைந்திருந்தன.

சந்தர்ப்பவாத கூட்டணி

பிரதமர் மோடி : திமுக- காங்கிரஸ் கூட்டணி சந்தர்ப்பவாத கூட்டணி. காங்கிரஸ் அரசு, 356வது பிரிவை 100 முறைக்கு மேல் பயன்படுத்தியுள்ளது. இதில் இந்திரா காந்தி மட்டுமே 50 முறைக்கு மேல், அந்த பிரிவை பயன்படுத்தியுள்ளார். இந்த பிரிவை பயன்படுத்தி திமுக ஆட்சியும் கலைக்கப்பட்டுள்ளது. தற்போது திமுகவிற்கு,கட்சி கொள்கைகளை விட சந்தர்ப்பவாதம் முக்கியமானதாகிவிட்டது.

ஸ்டாலின் : திமுக - காங்கிரஸ் கூட்டணி, இன்று நேற்று ஏற்பட்டது அல்ல. இந்திரா காந்தி, சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி என்று காலங்காலமாக கூட்டணி வைத்துள்ளோம். இந்தநாட்டிற்கு, தமிழகத்திற்கு ஆபத்து வரும்போதெல்லாம் நாங்கள் கூட்டணி அமைத்துள்ளோம். எங்களை நீங்கள் சந்தர்ப்பவாத கூட்டணி என்றழைக்கிறீர்கள். நீங்கள் அமைத்துள்ள கூட்டணியை நாங்கள் என்னவென்று அழைப்பது. குட்கா ஊழல் ரகசியம், அமலாக்கத்துறை ஊழல் ரகசியம், வருமானவரித்துறை முறைகேடு, கோடநாடு விவகாரம் என பல்வேறு ஊழல்களில் சிக்கியுள்ள ஆளும் அதிமுக அரசை, நீங்கள் மிரட்டி, அச்சுறுத்தி அமைத்துள்ள கூட்டணி சந்தர்ப்பாதவாத கூட்டணியா... நாடு முன்னேற வேண்டும் என்ற உணர்வுடன் எங்கள் தலைமையில் அமைந்துள்ள கூட்டணி சந்தர்ப்பாதவாத கூட்டணியா என்பதை பிரதமர் மோடி விளக்க வேண்டும்.

பிரதமர் சேடிஸ்ட் விவகாரம்

ஸ்டாலின் : “கருணாநிதி சிலை திறப்பு விழாவிலே நான் போது, பிரதமர் மோடியை சேடிஸ்ட் என்று நான் சொன்னேன், அதை சொல்லலாமா சொல்லக் கூடாதா என்பது இன்றைக்கு ஒரு விவாத பொருளாகி இருக்கிறது. நான் சொன்னதில் என்ன தவறு? மோடி அவர்களை தனிப்பட்ட முறையில் நான் சேடிஸ்ட் என்று சொல்லவில்லை. அவர் பிரதமராக இருக்கிறார். பிரதமர் என்று சொன்னால் ஓட்டு போட்டவர்களுக்கும் அவர் தான் பிரதமர், ஓட்டு போடாதவர்களுக்கும் அவர் தான் பிரதமர். ஓகி புயலிலே வர்தா புயலிலே இப்பொழுது நடந்து இருக்கக்கூடிய கஜா புயலிலே தமிழ்நாட்டிற்கு எவ்வளவு பாதிப்புக்கள் ஏற்பட்டு இருக்கின்றது. தமிழ்நாட்டு மக்களை கேவலப்படுத்துகிற, தமிழ்நாட்டு மக்களைப் பற்றி கவலைப்படாத நிலையில் ஒரு பிரதமர் இருக்கிறார் என்று சொன்னால், நான் தனிப்பட்ட மோடியை அல்ல, பாஜக மோடியை அல்ல பிரதமராக இருக்கக்கூடிய மோடியை சொல்கிறேன். “சேடிஸ்ட் தான், சேடிஸ்ட் தான், சேடிஸ்ட் தான்” என நான் ஒரு முறை அல்ல பலமுறை சொல்வேன்’’ என பேசினார்.

தமிழக பா.ஜ. தலைவர் தமிழிசை சவுந்தர்ராஜன் : “தமிழகத்தில் இனிதான் பாஜக விஸ்வரூபம் எடுக்க உள்ளது. திமுகாவா, பாஜகவா என்று இனி பார்க்கலாம். நீங்களா, நாங்களா என பார்ப்போம். இனி அவர்களுடன்தான் எங்கள் போட்டி. கஜா புயலால் இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு பிரதமர் தனது இரங்கலை தெரிவித்துள்ளார். பிரதமர் இரங்கல் தெரிவிக்கவில்லை என திமுக தலைவர் கூறுவது தவறு. ஸ்டாலின் பொய்யான பிரச்சாரம் செய்து வருகிறார். சிறுபான்மை மக்களை பாஜக மதிக்கிறது. ஆனால் பிரிவினை ஏற்படுத்தும் வகையில் பேசுவதில்லை. பாஜக சிறுபான்மையினருக்கு எதிராக செயல்படுகிறது என்று கூறுவது சுத்த பொய். தமிழகம் மீது அக்கறை கொண்டவர் மோடி. தமிழகத்தை பற்றி என்னிடம் பிரதமர் அடிக்கடி விசாரித்து இருக்கிறார். மோடி போன்ற நல்லவர் மீண்டும் பிரதமராக வேண்டும் என்று மக்கள் விரும்புகிறார்கள். அது தேர்தலிலும் எதிரொலிக்கும். எதிர்க்கட்சிகளின் பிரச்சாரம் செல்லுபடியாகாது.

பிரதமர் மோடியை ‘சாடிஸ்ட்’ என கூறிவரும் ஸ்டாலின் கூறி வருகிறார். பிரதமர் மோடி சாடிஸ்ட் கிடையாது. மோடியை அப்படி கூறும் ஸ்டாலின் இனிமேல் ‘சாடஸ்ட் ஸ்டாலின்’ என அழைக்கப்படுவார்” என்று பதிலடி கொடுத்துள்ளார்.

காவலாளி - களவாணி விவகாரம்

ஸ்டாலின் : நாட்டின் காவலாளி என பிரதமர் மோடி கூறிக்கொண்டாலும், திமுகவே உண்மையான காவலாளியாக செயல்படுகிறது. பிரதமர் மோடி, நாட்டின் காவலாளியாக அல்ல, களவாணியாகவே செயல்படுவதாக திமுக தலைவர் ஸ்டாலின் மே தின பேரணியை தொடர்ந்து நடந்த கூட்டத்தில் பேசினார்.

தமிழிசை சவுந்தர்ராஜன் டுவிட்டர் பதிவில் கூறியுள்ளதாவது, நாட்டின் பிரதமரை களவாணி என தரம் தாழ்ந்து விமர்சிக்கும் ஸ்டாலினை கண்டிக்கிறோம். ஆட்சி அதிகாரத்தில் ஊழலையும், லஞ்சத்தையும் இரண்டற கலந்த விஞ்ஞானப்பூர்வ ஊழல் களவாணிகள், இத்தகைய விமர்சனம் செய்வதை மக்கள் ஏற்கமாட்டார்கள். மடியில் கனமிருப்பதால் தானே, காவலாளி, களவாணியாக உங்கள் கண்களுக்கு தெரிவதாக தமிழிசை குறிப்பிட்டுள்ளார்.

திங்கள் டூ சனி ஆறு பிரதமர்கள்: அமித்ஷா கிண்டல்

எதிர்க்கட்சிகள் ஆட்சிக்கு வந்தால் திங்கள் முதல் சனி வரை ஆறு பிரதமர்கள் பதவியில் இருப்பாரகள் என்று பாஜக தேசிய தலைவர் அமித்ஷா கிண்டலடித்துள்ளார்.

உபி மாநிலம் கான்பூர் நகரில் நடைபெற்ற பொதுக் கூட்டம் ஒன்றில் பாஜக தலைவர் அமித் ஷா கலந்துக் கொண்டு பேசுகையில் எதிர்க்கட்சிகளின் மெகா கூட்டணி ஆட்சிக்கு வந்தால் வாரத்தில் 6 நாட்களில் 6 பிரதமர்கள் பதவி ஏற்பார்கள் என்று கூறினார். அதாவது திங்கட்கிழமை அகிலேஷ் யாதவும், செவ்வாய்கிழமை மாயாவதியும், புதன்கிழமை மம்தா பானர்ஜியும், வியாழக்கிழமை தேவகவுடாவும், வெள்ளிக்கிழமை சந்திரசேகரராவும், சனிக்கிழமை ஸ்டாலினும் பிரதமராக இருப்பார் என்றும் ஞாயிற்றுக்கிழமை ஒட்டுமொத்த நாட்டுக்கும் விடுமுறை விடப்படும் என்றும் அமித் ஷா பேசினார்

ஸ்டாலின் பதிலடி : 'மெகா கூட்டணியின் ஒவ்வொரு நாளும் ஒவ்வொருவர் பிரதமராக இருப்பார் என அமித்ஷா கூறியுள்ளார். இதன்மூலம், எதிர்க்கட்சிகள்தான் ஆட்சிக்கு வரப்போகின்றன என்பதை அமித்ஷாவே ஒப்புக்கொண்டுள்ளார். மேலும் வாரத்தில் ஒருநாளாவது பிரதமர் மோடி இந்தியாவில் இருந்தது உண்டா என கேள்வி எழுப்பிய ஸ்டாலின், மோடி பிரதமராக இருக்கும் எல்லா நாளுமே விடுமுறைதான் என்றும் கூறியுள்ளார்.

Narendra Modi Tamilisai Soundararajan M K Stalin
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment