Advertisment

ஜம்முவில் பனிச்சரிவு: அமர்நாத் யாத்திரை சென்ற 21 தமிழக பக்தர்கள் சிக்கித் தவிப்பு

அமர்நாத் யாத்திரைக்கு சென்ற தமிழக பக்தர்கள் 21 பேர் பனிமலையில் சிக்கி தவிப்பு. வீடியோ வெளியிட்டு மீட்க கோரிக்கை.

author-image
WebDesk
New Update
Amarnath Yatra

Amarnath Yatra

ஜம்மு - காஷ்மீரில் இமயமலை பகுதியில் உள்ள அமர்நாத் குகைக் கோவிலுக்கு நாடு முழுவதிலும் இருந்து ஆண்டுதோறும் ஏராளமான பக்தர்கள் சென்று சாமி தரிசனம் செய்வர். அங்கு இயற்கையாக தோன்றிய பனிலிங்கத்தை தரிசனம் செய்ய பக்தர்கள் யாத்திரையாக சென்று வருவர். அந்த வகையில் இந்தாண்டு அமர்நாத் புனித யாத்திரை கடந்த ஜூலை 1-ம் தேதி தொடங்கியது. யாத்திரை தொடங்கியதில் இருந்து அங்கு கனமழை பெய்து வருவதால் பனிச்சரிவு ஏற்பட்டுள்ளது. இதனால் பிரதான சாலையில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், யாத்திரைக்கு சென்ற தமிழக பக்தர்கள் 21 பேர் அங்கு பனிமலையில் சிக்கியுள்ளனர்.

Advertisment

சென்னை தாம்பரத்தைச் சேர்ந்த அமர்நாத் புனித யாத்திரை குழுவினர் மூலமாக கடந்த 4-ந் தேதி 21 பேர் கொண்ட குழுவினர் அமர்நாத் புனித யாத்திரை சென்றனர். இவர்கள் கடந்த 7-ந் தேதி காஷ்மீரில் உள்ள பால்டால் பகுதிக்கு சென்றனர். பின்னர் அங்கிருந்து 14 கி.மீ தூரமுள்ள அமர்நாத் கோவிலுக்கு சென்று மலைச்சாலையில் நடந்து சென்று பனி லிங்கத்தை தரிசித்தனர். அன்று இரவு கோவிலில் தங்கி மீண்டும் மறுநாள் நடந்தே பால்டால் பகுதிக்கு வந்தனர். அங்கிருந்து ஸ்ரீ நகருக்கு புறப்பட்ட போது நிலச்சரிவு ஏற்பட்ட நிலையில் சாலை போக்குவரத்து துண்டிக்கப்பட்டது.

இதையடுத்து அவர்கள் மணிக்காம்ப் என்ற முகாம் பகுதியில் பத்திரமாக தங்க வைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் கடந்த 4 நாட்களாக அப்பகுதியில் போதிய உணவு மற்றும் தண்ணீர் கிடைக்காமல் உள்ளது, வயதானவர்களும் இங்கு இருக்கின்றனர். தமிழக அரசு விரைவில் எங்களை மீட்க உதவ வேண்டும் என்று வீடியோ மூலம் கோரிக்கை வைத்துள்ளனர்.

இந்த குழுவில் தேனி மாவட்டம் சின்னமனூரைச் சேர்ந்த செந்தில்குமார், ராஜாங்கம், உத்தமபாளையத்தைச் சேர்ந்த செல்லப்பாண்டி, செல்வி, தஞ்சாவூரைச் சேர்ந்த கண்ணன் நெய்வேலியைச் சேர்ந்த சரவணன், சண்முகராஜ், நிரஞ்சன், சகுந்தலா, மணி என 21 பேர் சிக்கியுள்ளனர்.

இந்நிலையில், யாத்திரை சென்று சிக்கியுள்ள தமிழக பக்கதர்களை மீட்க நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் செஞ்சி மஸ்தான் கூறியுள்ளார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Jammu And Kashmir
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment