Advertisment

எடப்பாடி பழனிசாமிக்கு மேலும் 3 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு வாபஸ் : என்ன செய்யப் போகிறார் கவர்னர்?

முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு மேலும் 3 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவை வாபஸ் பெற்றுள்ளனர். எனவே கவர்னர் வித்யாசாகர் ராவுக்கு நெருக்கடி அதிகரிக்கிறது.

author-image
selvaraj s
புதுப்பிக்கப்பட்டது
New Update
cm edappadi palaniswami, ttv.dhinakaran, ttv.dhinakaran faction mla's, 3 more mla's withdraw support to eps

முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு மேலும் 3 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவை வாபஸ் பெற்றுள்ளனர். எனவே கவர்னர் வித்யாசாகர் ராவுக்கு நெருக்கடி அதிகரிக்கிறது.

Advertisment

முதல்வர் எடப்பாடி பழனிசாமி, கடந்த பிப்ரவரி மாதம் முதல்வராக பதவியேற்றார். 233 சட்டமன்ற உறுப்பினர்களைக் கொண்ட (ஆர்.கே.நகர், காலியிடமாக இருப்பது குறிப்பிடத்தக்கது) தமிழக சட்டமன்றத்தில், அதிமுக.வின் பலம் 135 (சபாநாயகர், இரட்டை இலையில் ஜெயித்த கூட்டணி எம்.எல்.ஏ.க்கள் 3 பேர் உள்பட). கடந்த பிப்ரவரியில் எடப்பாடி அரசு நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தியபோது, ஓ.பி.எஸ். அணியின் 12 பேர் தவிர, எஞ்சிய எம்.எல்.ஏ.க்கள் அரசுக்கு ஆதரவாக வாக்களித்தார்கள்.

3 more mla's withdraw support to eps, ttv.dhinakaran faction mla's, aiadmk merger, aiadmk கருணாஸ் எம்.எல்.ஏ.

ஆனால் இப்போது டிடிவி.தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்களின் எண்ணிக்கை, முந்தைய ஓ.பி.எஸ். அணியின் எண்ணிக்கையைவிட அதிகம்! ஆகஸ்ட் 22-ம் தேதி டிடிவி.தினகரன் அணியை சேர்ந்த 19 எம்.எல்.ஏ.க்கள் கவர்னர் வித்யாசாகர் ராவை சந்தித்து, ‘முதல்வர் எடப்பாடி மீது நம்பிக்கை இழந்துவிட்டதாக’ தனித்தனியாக கடிதம் கொடுத்தனர். இதைத் தொடர்ந்து நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த கவர்னர் வித்யாசாகர் ராவ் உத்தரவிடுவார் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் தன்னை சந்தித்த ஜி.ராமகிருஷ்ணன், முத்தரசன், தொல்.திருமாவளவன், ஜவாஹிருல்லா உள்ளிட்ட எதிர்க்கட்சித் தலைவர்களிடம், ‘அதிமுக.வில் நடப்பது உள்கட்சிப் பிரச்னை. அதில் நான் எப்படி தலையிட முடியும்?’ என கவர்னர் கேட்டதாக தகவல் வெளியானது. எனவே திமுக தரப்பில் இந்தப் பிரச்னையை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தின் கவனத்திற்கு எடுத்துச் சென்றனர்.

3 more mla's withdraw support to eps, ttv.dhinakaran faction mla's, aiadmk merger, aiadmk ரத்தினசபாபதி எம்.எல்.ஏ.

இதற்கிடையே டிடிவி.தினகரன் தரப்பினர் கடந்த 22-ம் தேதி கொடுத்த மனுவை நினைவூட்டும் விதமாக இன்று (செப். 7) மீண்டும் கவர்னரை ராஜ்பவனில் சந்தித்தனர். இந்த சந்திப்பில் டிடிவி.தினகரனுடன் 7 எம்.பி.க்களும், 3 எம்.எல்.ஏ.க்களும் கலந்துகொண்டனர்.

அவர்களின் பட்டியல் இது.. 1.டிடிவி.தினகரன் (துணைப் பொதுச்செயலாளர், அதிமுக (அம்மா) அணி), 2.ரத்தினசபாபதி (அறந்தாங்கி எம்.எல்.ஏ), 3.கலைச்செல்வன் (விருத்தாசலம் எம்.எல்.ஏ.), 4.கருணாஸ் (திருவாடனை எம்.எல்.ஏ), 5.ஏ.பி.நாகராஜன் (கோவை எம்.பி.), 6.விஜிலா சத்யானந்த் (ராஜ்யசபா எம்.பி.), 7.செங்குட்டுவன் (வேலூர் எம்.பி.), 8.உதயகுமார் (திண்டுக்கல் எம்.பி.), 9.கோகுல கிருஷ்ணன் (ராஜ்யசபா எம்.பி.), 10.நவநீதகிருஷ்ணன் (ராஜ்யசபா எம்.பி), 11.ராதாகிருஷ்ணன் (விருதுநகர் எம்.பி.)

3 more mla's withdraw support to eps, ttv.dhinakaran faction mla's, aiadmk merger, aiadmk கலைச்செல்வன் எம்.எல்.ஏ.

இவர்களில் 3 எம்.எல்.ஏ.க்களுமே கடந்த 22-ம் தேதி கவர்னரை சந்தித்தவர்களின் பட்டியலில் இடம் பெறாதவர்கள்! அதாவது, புதிதாக டிடிவி.தினகரன் அணிக்கு திரும்பியிருப்பவர்கள். இவர்களும் தங்களுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி மீது நம்பிக்கை இல்லை என கவர்னரிடம் மனு கொடுத்தனர். எனவே கவர்னரிடம் மனு கொடுத்த அதிருப்தி எம்.எல்.ஏ.க்களின் எண்ணிக்கை 22 ஆனது.

ஆனால் இவர்கள் கவர்னர் மாளிகை சென்ற அதே நேரத்தில், கடந்த முறை மனு கொடுத்த 19 பேரில் ஒருவரான கம்பம் எம்.எல்.ஏ. ஜக்கையன், இபிஎஸ் அணிக்கு தாவினார். அவர் விரைவில் கவர்னரிடம் கொடுத்த மனுவை வாபஸ் பெற வாய்ப்பிருக்கிறது. எனவே எடப்பாடி பழனிசாமியின் அதிருப்தி எம்.எல்.ஏ.க்களின் எண்ணிக்கை 21 ஆகிறது. இதன் மூலமாக அதிமுக.வின் 135 எம்.எல்.ஏ.க்களில் 114 பேர் (சபாநாயகர் உள்பட) மட்டுமே எடப்பாடி பழனிசாமியை ஆதரிக்கும் சூழல் உருவாகியிருக்கிறது.

சட்டமன்றத்தில் நம்பிக்கை இல்லாத் தீர்மானத்தை திமுக கொண்டு வர, வருகிற நவம்பர் அல்லது டிசம்பர் வரை காத்திருக்க வேண்டியிருக்கலாம். ஏனெனில் அப்போதுதான் சட்டமன்ற குளிர்கால கூட்டத்தொடர் ஆரம்பமாகும். அந்த அவகாசத்தில் எடப்பாடி பழனிசாமி தனக்கான ஆதரவை அதிகப்படுத்தவும் வாய்ப்பு இருக்கிறது.

எனவே உடனடியாக நம்பிக்கை வாக்கெடுப்புக்கு உத்தரவிடும்படி கவர்னருக்கு எதிர்க்கட்சிகள் அழுத்தம் கொடுக்க முடிவு செய்திருக்கின்றன. இன்று (செப். 7) டிடிவி.தினகரன் அணியினர் தன்னை சந்தித்தபோது, ‘நிச்சயம் சட்டப்படியான நடவடிக்கை எடுப்பேன்’ என கவர்னர் கூறியதாக தெரிகிறது. இதனால் கவர்னரின் நடவடிக்கை அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

Ttv Dhinakaran
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment