சென்னை விமான நிலையத்தில் மூன்று 'மர்ம' பெட்டிகள்!

யாருமே அந்த சூட்கேஸ்களுக்கு உரிமை கோராததால், பாதுகாப்பு பணியாளர்கள் அச்சத்திற்கு உள்ளானார்கள்.

சனிக்கிழமை (இன்று) சென்னை விமான நிலையத்தில் 3 சூட்கேஸ்கள் கேட்பாரற்று கிடந்ததால், பெரும் பதற்றம் ஏற்பட்டது. கார் பார்க்கிங் உட்பட மூன்று வெவ்வேறு இடங்களில் கிடந்த அந்த மர்ம சூட்கேஸ்களை, பாதுகாப்புத்துறை அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர். யாருமே அந்த சூட்கேஸ்களுக்கு உரிமை கோராததால், பாதுகாப்பு பணியாளர்கள் அச்சத்திற்கு உள்ளானார்கள்.

இதையடுத்து, மத்திய தொழில்துறை பாதுகாப்புத் துறை அதிகாரிகள் அளித்த பேட்டியில், ‘வெடிகுண்டுகளை அகற்றும் நிபுணர்கள் மோப்ப நாய்களுடன் வந்து, அந்த சூட்கேஸ்களை பாதுகாப்பாக அப்புறப்படுத்தி, அதனை ஆய்வுக்காக எடுத்துச் சென்றுள்ளனர்” என கூறினர்.

இந்த சம்பவத்தால் விமான நிலையத்தில் கூச்சல், குழப்பம் நிலவியது.

×Close
×Close