தமிழகத்தில் 35 ஐபிஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்

ஐந்து ஐஜிக்கள் 5 பேர் ஏடிஜிபிக்களாக பதவி உயர்வு பெற்றுள்ளனர். ஆறு டிஐஜிக்கள் 6 பேர் ஐஜிக்களாக பதவி உயர்வு பெற்றுள்ளனர்.

By: June 30, 2017, 6:42:00 PM

தமிழகத்தில் 35 ஐபிஎஸ் அதிகாரிகள் அதிரடியாக மாற்றப்பட்டுள்ளனர். சட்டம் ஒழுங்கு ஏடிஜிபியாக ரவி ஐபிஎஸ் நியமிக்கப்பட்டுள்ளார். ஐந்து ஐஜிக்கள் 5 பேர் ஏடிஜிபிக்களாக பதவி உயர்வு பெற்றுள்ளனர். ஆறு டிஐஜிக்கள் 6 பேர் ஐஜிக்களாக பதவி உயர்வு பெற்றுள்ளனர்.

பதவி உயர்வு பெற்ற அதிகாரிகள்:

1. ஐஜியாக இருந்த கருணாநாசாகர் ஏடிஜிபியா பதவி உயர்வு பெற்று எஸ்டாபிளிஸ்மெண்ட் பிரிவில் நியமிக்கப்படுகிறார்.

2. ஐஜியாக இருந்த ராஜீவ் குமார் ஏடிஜிபியாக பதவி உயர்வு பெற்று, கவல்துறை நவீனமயமாக்கல் பிரிவில் நியமிக்கப்பட்டுள்ளார்.

3. ஐஜி சந்தீப் ராஜ் ரத்தோர் ஏடிஜிபியாக பதவி உயர்வு பெற்று, ஈரோடு எஸ்டிஎப் பிரிவில் நியமிக்கப்பட்டுள்ளார்.

4. ஐஜி அபய்குமார் சிங், ஏடிஜிபியாக பதவி உயர்வு பெற்று, தமிழ் நாடு நியூஸ் பிரிண்ட் லிமிடெட் நிறுவனத்தின் தலைமை விஜிலென்ஸ் அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

5. ஐஜி வன்னியபெருமாள், ஏடிஜிபியாக பதவி உயர்வு பெற்று, சென்னை பெருநகர போக்குவரத்து தலைமை விஜிலென்ஸ் அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

ஐஜிக்கள் இடமாற்றம்

1. சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐஜி, ஏஜி.பொன்மாணிக்கவேல் ரயில்வே ஐஜியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

2. திருப்பூர் கமிஷனராக இருந்த சஞ்சய் மாத்தூர் (ஐஜி), சிபிசிஐடி ஐஜியாக சென்னைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

3. சிபிசிஐடி ஐஜியாக இருந்த மகேஷ் குமார் அகர்வால், மதுரை போலீஸ் கமிஷனராக நியமிக்கப்பட்டுள்ளார்.

4. மதுரை போலீஸ் கமிஷனராக இருந்த சகிலேஷ் குமார் யாதவ், தென் மண்டல ஐஜியாக மாற்றப்பட்டுள்ளார்.

5. தென்மண்டல ஐஜியாக இருந்த டாக்டர் எஸ்.முருகன், லஞ்ச ஒழிப்புத்துறை இணை இயக்குநராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

6. லஞ்ச ஒழிப்புத்துறை இணை இயக்குநராக இருந்த ஜி.வெங்கட்ராமன், சிவில் சப்ளை சிஐடி ஐஜியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

7. திருச்சி ஆயுதப்படை ஐஜியாக இருந்த சண்முக ராஜேஸ்வரன், பயிற்சி கல்லூரி ஐஜியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

8. கரூர் தமிழ்நாடு நியூஸ் பிரிண்ட் பேப்பர் ஐஜியாக இருந்த சி.சந்திரசேகர், சென்னை ஆப்ரேஷன்ஸ் பிரிவு ஐஜியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

9. சென்னை மாநகர போக்குவரத்து தலைமை விஜிலென்ஸ் ஐஜியாக இருந்த சு.அருணாசலம், கடலோர காவல்படை ஐஜியாக மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

10. ஹோம் கார்ட் ஐஜி கே.பெரியய்யா, சென்னை மாநகர் போக்குவரத்து போலீஸ் கூடுதல் கமிஷனராக நியமிக்கப்பட்டுள்ளார்.

ஐஜியாக பதவி உயர்வு பெறும் டிஐஜிக்கள்

1. மதுரை டிஐஜியாக இருக்கும் ஆனந்த் குமார் சோமானி, ஐஜி பதவி உயர்வு பெற்று மத்திய அரசு பணிக்குச் செல்கிறார்.

2. சென்னை ஆயுதப்படை டிஐஜியாக இருந்த என்.ராஜசேகரன், ஐஜியாக பதவி உயர்வு பெற்று விஜிலென்ஸ் அண்டி கரப்ஷன்ஸ் (எஸ்.ஐ.சி) இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

3. சேலம் டிஐஜியாக இருந்த பி.நாகராஜன், ஐஜியாக பதவி உயர்வு பெற்று, திருப்பூர் நகர போலீஸ் கமிஷனராக நியமனம்.

4. வட சென்னை இணை கமிஷனராக இருந்த என். பாஸ்கரன், ஐஜியாக பதவி உயர்வு பெற்று, க்ரைம் ஐஜியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

5. விஜிலென்ஸ் அண்ட் கரப்ஷன்ஸ் டிஐஜியாக இருந்த ஆர்.சமுத்திரபாண்டி, ஐஜியாக பதவி உயர்வு பெற்று, ஹோம் கார்ட் ஐஜியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

6. வேலூர் சரக டிஐஜி ஆர்.தமிழ்சந்திரன், ஐஜியாக பதவி உயர்வு பெற்று சிலை தடுப்பு பிரிவில் நியமிக்கப்பட்டுள்ளார்.

டிஐஜியாக பதவி உயர்வு பெற்ற எஸ்பிக்கள் விபரம் வருமாறு:

1. புதுக்கோட்டை மாவட்ட எஸ்.பி டாக்டர் ஜெ.லோகநாதன் டிஐஜியாக பதவி உயர்வு பெற்று தஞ்சை சரக டிஐஜியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

2. காத்திருப்போர் பட்டியலில் இருந்த அமீத் குமார் சிங், டிஐஜியாக பதவி உயர்வு பெற்று, மத்திய அரசு பணிக்குச் செல்கிறார்.

3. தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி.யாக இருந்த அஸ்வின் எம். கோட்னிஸ், டிஐஜியாக பதவி உயர்வு பெற்று மத்திய அரசு பணிக்குச் செல்கிறார்.

4. சென்னை மயிலாப்பூர் துணை கமிஷனர் வி.பாலகிருஷ்ணன், டிஐஜியாக பதவி உயர்வு பெற்று விழுப்புரம் சரக டிஐஜியாக நியமிக்கப்படுகிறார்.

5. சென்னை அம்பத்தூர் துணை கமிஷனர் ஆர்.சுதாகர், டிஐஜியாக பதவி உயர்வு பெற்று, வட சென்னை இணை கமிஷனராக நியமிக்கப்பட்டுள்ளார்.

6. நெல்லை மாநகர சட்டம் ஒழுங்கு துணை கமிஷனர் பிரதீப் குமார், டிஐஜியாக பதவி உயர்வு பெற்று மதுரை சரகத்தில் நியமிக்கப்படுகிறார்.

இடமாற்றம் செய்யப்பட்டுள்ள டிஐஜிக்கள் விபரம்:

1. தஞ்சை சரக டிஐஜி தி.செந்தில்குமார், சேலம் சரக டிஐஜியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

2. காத்திருப்போர் பட்டியலில் இடம் பெற்றிருந்த தேன்மொழி, காஞ்சிபுரம் சரக டிஐஜியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

3. காஞ்சிபுரம் சரக டிஐஜியாக இருந்த நஜ்மல் ஹோடா, வட சென்னை இணை கமிஷனராக (போக்குவரத்து பிரிவு) நியமிக்கப்பட்டுள்ளார்.

4. வட சென்னை போக்குவரத்து போலீஸ் இணை கமிஷனராக இருந்த பிரேம் ஆனந்த் சின்ஹா, தென் சென்னை போக்குவரத்து பிரிவு இணை கமிஷனராக மாற்றப்பட்டுள்ளார்.

5. தென் சென்னை போக்குவரத்து போலீஸ் இணை கமிஷனராக இருந்த கே.பவானீஸ்வர், திருச்சி சரக டிஐஜியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

6. ரயில்வே டிஐஜியாக இருந்த வி.வனிதா, வேலூர் சரக டிஐஜியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

7. ராமநாதபுரம் சரக டிஐஜியாக இருந்த எஸ். கபில் குமார், திருநெல்வேலி சரக டிஐஜியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

8. விழுப்புரம் சரக டிஐஜி அனிஷா ஹூசைன், சென்னை மாநகர போலீஸ் தலைமையக இணை கமிஷனராக நியமிக்கப்பட்டுள்ளார்.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the Tamilnadu News by following us on Twitter and Facebook

Web Title:35 ips officers transfer in tamilnadu

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Advertisement

இதைப் பாருங்க!
X