Advertisment

ஐ.டி. வேட்டையில் 15 கிலோ தங்கம், ரூ1000 கோடி சொத்து ஆவணங்கள் : பட்டியல் போடும் பணி தீவிரம்

3-வது நாளாக சசிகலா தரப்பிடம் வருமான வரித் துறையினர் சோதனை நடத்துகிறார்கள். 60 போலி நிறுவனங்கள் விவகாரத்தில் இளவரசி மகள் சிக்குவதாக தெரிகிறது.

author-image
selvaraj s
புதுப்பிக்கப்பட்டது
New Update
vk Sasikla, TTV Dhinakaran, Income tax department, IT raids,Jayalalitha, Kodanad estate, jeya tv

3-வது நாளாக சசிகலா உறவினர்கள் தொடர்பான இடங்களில் வருமான வரித் துறையினர் சோதனை நடத்துகிறார்கள். 60 போலி நிறுவனங்கள் விவகாரத்தில் இளவரசி மகள் சிக்குவதாக தெரிகிறது.

Advertisment

வி.கே.சசிகலா, சொத்துக் குவிப்பு வழக்கில் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் இருக்கிறார். ஆனால் கடந்த 9-ம் தேதி முதல் சசிகலாவின் உறவினர்கள், நண்பர்கள், வழக்கறிஞர்கள் ஆகியோரின் வீடுகள், அலுவலகங்களில் வருமான வரித்துறையினர் புகுந்து ‘விளையாடி’ வருகிறார்கள்.

பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜாவின் இன்றைய ட்வீட்...

சசிகலா மற்றும் உறவினர்கள் வீட்டில் 3-வது நாளாக இன்று(11-ம் தேதி) வருமான வரித்துறை சோதனை தொடர்கிறது. மொத்தமுள்ள 187 இடங்களில் 43 வீடு, அலுவலகங்களில் மட்டும் தான் சோதனை நிறைவடைந்துள்ளது. எஞ்சிய 144 வீடு, அலுவலகங்களில் மேலும் பல அறைகளில் ஆய்வு செய்ய வேண்டியுள்ளதாக அதிகாரிகள் கூறியுள்ளனர். சோதனை முடியும்வரை கைப்பற்றப்பட்ட ஆவணங்கள், பொருட்களின் விவரங்கள் வெளியிடப்படாது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சென்னையில் ஜெயா டிவி அலுவலகம், ஜெயா டிவி தலைமை செயல் அதிகாரி விவேக் ஜெயராமன் வீடு, அலுவலகத்தில் சோதனை 3-வது நாளாக நீடிக்கிறதுய். ஏராளமான வங்கிக் கணக்குகளையும் ஆராய வேண்டியுள்ளதால் ரெய்டு நீடிக்கும் என அதிகாரிகள் கூறுகின்றனர்.

3-வது நாள் ரெய்டு live updates:

பகல் 2.00 : 3 நாள் சோதனையில் மொத்தம் ஐந்தரை கோடி ரூபாய் ரொக்கம், 15 கிலோதங்கம் பறிமுதல் செய்யப்பட்டதாக வருமான வரித்துறை தரப்பில் கூறப்படுகிறது. தவிர, 150 வங்கி கணக்குகள் முடக்கப்பட்டதாகவும், ரூ.1000 கோடி சொத்து ஆவணம் பறிமுதல் செய்யப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

போலி நிறுவனங்கள் மூலம் ரூ.150 கோடி மதிப்புள்ள 40 சொத்துக்கள் வாங்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. அதிகாரபூர்வ அறிவிப்பை வருமான வரித்துறை வெளியிடும்போது முழுமையான விவரங்கள் தெரியவரும்.

பகல் 1.15 : இந்த ரெய்டு தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர், ‘ஜெயலலிதா இருக்கும்போது இந்த ரெய்டை நடத்தியிருந்தால் கூடுதலாக கிடைத்திருக்கும். அதிமுக.வின் அத்தனை அணிகளையும் மிரட்டி பணிய வைக்கவே இந்த ரெய்டு’ என்றார்.

பகல் 12.30 : பாண்டிச்சேரி லட்சுமி ஜூவல்லர்ஸ் நிறுவனத்தில் ரெய்டு நடத்தி வரும் வருமான வரித்துறை, அங்கு 10-க்கும் மேற்பட்ட ஊழியர்களிடம் விசாரித்து வருகிறார்கள். இந்த நிறுவனத்தின் உரிமையாளர்கள் நவீன் பாலாஜிக்கும், டிடிவி தினகரனுக்கும் இடையிலான போன் தொடர்புகளை வைத்து இந்த ரெய்டு நடப்பதாக கூறப்படுகிறது.

பகல் 12.00 : தமிழகத்தில் கடந்த இரண்டரை நாட்களாக நடந்த ரெய்டுகளில் கிடைத்த ஆவணங்கள், பொருட்கள் குறித்து வருமான வரித்துறையின் டெல்லி தலைமையகத்திற்கு அறிக்கை தொகுப்பு ஒன்றை அனுப்பியிருக்கிறார்கள். இந்த ரெய்டு அரசியல் ரீதியான விமர்சனங்களை கிளப்பியிருப்பதால் இன்று மாலை அல்லது இரவில் டெல்லியில் வருமான வரித்துறை தலைமை அலுவலகத்தில் இருந்து விளக்க அறிக்கை வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

காலை 11.30 : சென்னை பெசன்ட் நகர் இல்லத்தில் நிருபர்களை சந்தித்த டிடிவி தினகரன், ‘எங்கள் குடும்பத்தினர் இல்லங்களில் உள்நோக்கத்துடன் நடைபெறும் ஐடி ரெய்டுக்கு எதிராக குரல் கொடுத்த அத்தனை தலைவர்களுக்கும் நன்றி. எனது பாண்டிச்சேரி பண்ணை வீட்டில் பாதாள அறை இருந்ததாக மீடியாவில் வெளியான செய்திகள் தவறானவை. நான் காந்தியின் பேரன் இல்லை. என்னை குற்றம் சாட்டுகிறவர்கள் காந்தியின் பேரன்களா?’ என கேள்வி எழுப்பினார்.

 காலை 11.00 : கோடநாடு, கர்சன் எஸ்டேட்களில் வருமான வரித்துறை சோதனை நிறைவு பெற்றிருக்கிறது. அங்கு கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் குறித்து உயர் அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்பட்டிருக்கிறது. உயர் அதிகாரிகளின் வழிகாட்டுதலுக்கு அதிகாரிகள் காத்திருக்கிறார்கள்.

காலை 10.30 : கடலூர் மஞ்சக்குப்பத்தில் லட்சுமி ஜூவல்லர்ஸ் மேலாளர் தென்னரசு இல்லத்தில் வருமான வரித்துறை ரெய்டு நடக்கிறது. பாண்டிச்சேரியில் டிடிவி தினகரன் பண்ணை வீட்டில் சோதனை நடத்திய அதிகாரிகளே இங்கு ரெய்டுக்கு வந்ததாக தெரிகிறது.

காலை 10.00 : நாமக்கல்லில் சசிகலாவின் வழக்கறிஞர் செந்தில் இல்லத்தில் 3-வது நாளாக ஐடி ரெய்டு நடக்கிறது. செந்தில் வீட்டில் இல்லாததால், அவரது தந்தையிடம் அதிகாரிகள் விசாரித்து வருகிறார்கள்.

காலை 9.30 : நாமக்கல் காந்தி நகரில் தமிழ்நாடு அரசு தேர்வாணைய உறுப்பினர் பாலுச்சாமி வீட்டில் இன்று 3-வது நாளாக அதிகாரிகள் சோதனை நடத்தினர். அங்கு ஒரு அறையை திறந்து பார்க்க வீட்டில் உள்ளவர்கள் அனுமதி கொடுக்காத காரணத்தால் அந்த அறைக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர்.

காலை 9.00 : சென்னை ஈக்காட்டுத்தாங்கலில் உள்ள ஜெயா டிவி அலுவலகத்தில் 3-வது நாளாக சோதனை தொடர்கிறது. இங்கு இதுவரை ஆவணங்கள் எதுவும் சிக்கியதாக தகவல் இல்லை.

காலை 8.30 : சசிகலாவின் கொடநாடு டீ எஸ்டேட் ஊழியர்கள் 800 பேரிடம் தலா 2 லட்சம் ரூபாயை கொடுத்து ‘வெள்ளை’யாக்கியது குறித்தும் வருமான வரித்துறை ஆதாரங்களை திரட்டி விட்டது. அங்கு நூற்றுக்கணக்கான தொழிலாளர்களை இதில் சாட்சியாக முன்னிறுத்துகிறார்கள். அவர்களிடம் இன்றும் விசாரணை தொடர்கிறது.

காலை 8.00: 2-வது நாள் சோதனை முடிவில் சசிகலா குடும்பத்தினரின் 60 போலி நிறுவனங்களை அதிகாரிகள் கண்டு பிடித்திருப்பதாக கூறினர். இவற்றில் பல நிறுவனங்களில் இளவரசியின் மகள் கிருஷ்ணபிரியா பங்குதாரராக இருக்கிறாராம்.

பண மதிப்பிழப்பு நடவடிக்கைக்கு பிறகு இந்த போலி நிறுவனங்கள் மூலமாக பெரும் தொகை வெள்ளையாக்கப்பட்டதாக அதிகாரிகள் கூறுகின்றனர். இந்த விவகாரம் கிருஷ்ணபிரியாவுக்கு சிக்கலை ஏற்படுத்தும் என்கிறார்கள். 3-வது நாளான இன்று அதிகாரிகளின் விசாரணை வளையம் கிருஷ்ணப் பிரியா, விவேக் ஆகியோரைச் சுற்றியே சுழல்கிறது.

காலை 7,30: கடலூர் மாவட்டம் திருப்பாதிரிபுலியூரில் டிடிவி தினகரனின் ஜோதிடர் சந்திரசேகர் இல்லத்தில் 3-வது நாளாக அதிகாரிகள் உலுக்கி எடுத்தனர். மறைமுகமாக சசிகலா குடும்பத்தினர் சேர்த்த சொத்து விவரங்களை அவரிடம் அதிகாரிகள் கேட்டு வருவதாக கூறப்படுகிறது.

காலை 7.00 : சென்னையில் சசிகலா குடும்பத்தினருக்கு சொந்தமான ஜாஸ் சினிமா நிறுவனத்தில் காலையிலேயே ஐடி அதிகாரிகள் சோதனையை தொடர்ந்தனர். இதனால் 3-வது நாளாக அங்கு சினிமாக் காட்சிகள் ரத்து செய்யப்பட்டன.

 

Income Tax Department Ttv Dhinakaran Vk Sasikala Jeya Tv
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment