கடந்த மாதம் 31-ஆம் தேதி, சென்னை தி.நகரில் உள்ள சென்னை சில்க்ஸ் கட்டடத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. கட்டடம் முழுவதும் சேதம் அடைந்ததால், அதனை இடித்து தரைமட்டமாக்க தமிழக அரசு உத்தரவிட்டது. இதற்காக 'ஜா கட்டர்' என்ற ராட்சத இயந்திரம் மூலம், கட்டிடத்தை இடிக்கும் பணி 20 நாட்களுக்கும் மேலாக நீடித்து வந்தது.
இந்நிலையில், சென்னை சில்க்ஸ் கட்டடம் நேற்று முன்தினம் முற்றிலுமாக இடிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து இடிபாடுகளை அகற்றும் பணிகள் நேற்று முதல் தொடங்கி நடைபெற்று வந்தது. இன்றும் நடைபெற்ற இடிபாடுகளை அகற்றும் பணிகளின் போது, 2 பாதுகாப்பு பெட்டகங்கள் மீட்கப்பட்டுள்ளன. அதில் 400 கிலோ தங்க நகைகளும், 2 ஆயிரம் கிலோ வெள்ளியும் இருந்தது தெரியவந்துள்ளது. இதன் மதிப்பு 20 கோடி இருக்கும் என்று கூறப்படுகிறது.