தமிழக மீனவர்கள் 5 பேர் கைது… இலங்கை கடற்படையினர் அட்டூழியம்!

எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி தமிழக மீனவர்கள் 5 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ள சம்பவம் தமிழக மீனவர்கள் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் தங்கச்சிமடம் மீனவர்கள் மீன்பிடி தடைகாலம் முடிந்துகடலுக்கு மீன்பிடிக்க சென்ற நிலையில், இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. மீனவர்கள் நேற்றிரவு கடலுக்கு மீன் பிடிக்க சென்றனர். நெடுந்தீவு அருகே அவர்கள் மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி மீன்படித்ததாக கூறி 5 […]

rameshwaram, chennai high court, firing on tamilnadu fishermen, inquiry by DSP, indian coast guard, tamilnadu government, tamilnadu fishermen

எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி தமிழக மீனவர்கள் 5 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ள சம்பவம் தமிழக மீனவர்கள் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

ராமநாதபுரம் மாவட்டம் தங்கச்சிமடம் மீனவர்கள் மீன்பிடி தடைகாலம் முடிந்துகடலுக்கு மீன்பிடிக்க சென்ற நிலையில், இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. மீனவர்கள் நேற்றிரவு கடலுக்கு மீன் பிடிக்க சென்றனர். நெடுந்தீவு அருகே அவர்கள் மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி மீன்படித்ததாக கூறி 5 மீனவர்களை கைது செய்தனர்.

பின்னர் கைது செய்யப்பட்ட மீனவர்கள்உஅனைவரும் இலங்கையில் உள்ள காங்கேசன் துறை முகத்திற்கு கொண்டு செல்லப்பட்டனர். அவர்களது படகையும் இலங்கை கடற்படையினர் பறிமுதல் செய்துள்ளனர். மீன்பிடி தடைகாலம் முடிவடைந்து கடலுக்கு மீன்பிடிக்க சென்ற தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ள சம்பவம் மீனவர்கள் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

Get the latest Tamil news and Tamilnadu news here. You can also read all the Tamilnadu news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: 5 tamil fishermen arrrested while they fishein by srilanka navy

Next Story
தீபாவளிக்கு முன்பதிவு… தென்மாவட்டங்களுக்கான ரயில் டிக்கெட்டுகள் அரை மணி நேரத்தில் காலி!Railway,Special trains, Chennai and Tirunelveli,
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com