கரூரில் நடந்த கோர விபத்து: 7 பேர் பலி!

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த அனைவரும் இந்த விபத்தில் பலியாகியிருப்பது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது....

கேரளாவை சேர்ந்த 11 பேர் ஒரு காரில் வேளாங்கண்ணிக்கு சென்று விட்டு சொந்த ஊர் திரும்பினர். அப்போது கரூர் மாவட்டம் குளித்தலை அருகே திம்மாச்சிபுரம் எனும் பகுதியில் வந்த போது, மணல் ஏற்றி வந்த லாரி மீது கார் நேருக்கு நேர் மோதியது.

இதில், சம்பவ இடத்திலேயே 2 பெண்கள் உட்பட 6 பேர் பலியாகியுள்ளனர். காயமடைந்த 5 பேரில் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மேலும் இருவர் கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதையடுத்து, விபத்து குறித்து வழக்குப் பதிவு செய்த போலீஸார், உயிரிழந்தவர்களின் சடலங்களை பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த அனைவரும் இந்த விபத்தில் பலியாகியிருப்பது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

×Close
×Close