சென்னையில் சிக்கிய 71 கோடி மதிப்புள்ள போதைப் பொருள்!

செங்குன்றத்தில் இருக்கும் தனியார் ஆலையில் மத்திய வருவாய் புலனாய்வு அதிகாரிகள் இன்று சோதனை நடத்தினர். இதில், 71 கோடி ரூபாய் மதிப்பிலான போதைப் பொருட்கள் சிக்கியிருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. அங்கு அதிகாரிகளின் சோதனை தொடர்ந்து வருவதாகக் கூறப்படுகிறது.

இதனிடையே, பறிமுதல் செய்யப்பட்ட போதை மருந்துகளில், 90 கிலோ ஹெராயின், 11 கிலோ மெத்தா பெட்டமைன், 56 கிலோ சூடோ பெட்ரின் ஆகிய போதைப் பொருட்கள் இருந்ததாக முதல்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. சமீபத்தில் பறிமுதல் செய்யப்பட்ட போதை பொருட்களிலேயே, இது பெரிய அளவிலானது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக மத்திய வருவாய் புலனாய்வுத் துறையினர் 10 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். கைதானவர்களில் ஒருவர் மலேசியாவை சேர்ந்தவர் என கூறப்பட்டுள்ளது.

×Close
×Close