அதிமுக அம்மா அணிக்குள் பிளவு? 8 எம்.எல்.ஏக்கள் போர்க்கொடி!

மொத்தம் 11 எம்.எல்.ஏ.க்கள் ரகசிய ஆலோசனை நடத்தினார்கள். இது தமிழக அரசியலில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது.

முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க அரசுக்கு 122 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு உள்ளது. ஆட்சி நடத்துவதற்கு தேவையான பெரும்பான்மை பலத்தை விட கூடுதலாக 5 எம்.எல்.ஏ.க்களையே கொண்டதாக இது இருக்கிறது.

இந்நிலையில், அ.தி.மு.க. அம்மா அணியை சேர்ந்த ஒரு சில எம்.எல்.ஏ.க்கள் திடீரென போர்க்கொடி தூக்கினார்கள். தங்கள் தொகுதி பிரச்சினையை தீர்க்க அரசு முன்வரவில்லை என்று குற்றம்சாட்டினார்கள்.

சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.எல்.ஏ.க்கள் விடுதியில், முன்னாள் அமைச்சர் தோப்பு வெங்கடாசலம் தலைமையில், முன்னாள் அமைச்சர்கள் செந்தில் பாலாஜி, பழனியப்பன் உள்பட மொத்தம் 11 எம்.எல்.ஏ.க்கள் ரகசிய ஆலோசனை நடத்தினார்கள். இது தமிழக அரசியலில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் இன்று அவர்கள் 3 பேரும் தலைமை செயலகத்துக்கு வந்தனர். அவர்களுடன் மேலும் 5 அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் வந்திருந்தனர். அவர்கள் முதல்வர் எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்து பேசினர்.

அப்போது, அவர்கள் அ.தி.மு.க எம்.எல்.ஏக்கள் கூட்டத்தை உடனடியாக கூட்ட வேண்டுமென முதல்வர் எடப்பாடி பழனிசாமியிடம் கோரிக்கை வைத்துள்ளனர் என தகவல் வெளியாகி உள்ளது.

×Close
×Close