Central Intelligence Agency Officer Jayasingh Case | Indian Express Tamil

கன்னியாகுமரி : உளவுத்துறை அதிகாரி மாயம்.. போலீஸ் விசாரணை

புகாரின் அடிப்படையில் ஜெயசிங்கை காவலர்கள் தேடிவருகின்றனர்.

A central government official has gone missing in Kanyakumari
மாயமான மத்திய உளவுத் துறை அதிகாரி ஜெயசிங்

கன்னியாகுமரி மாவட்டம் திருவட்டார் அருகே உள்ள காட்டாத்துறைகடை விளை பகுதியை சேர்ந்தவர் ஜெயசிங் (46). இவரது குடும்பம் சென்னையில் வசிக்கும் நிலையில், ஜெயசிங் மத்திய உளவுத் துறையில் அந்தமானில் இள நிலை அலுவலராக பணி புரிந்து வருகிறார்.

இந்த நிலையில், பொங்கல் விடுமுறைக்காக ஜெயசிங் தனது குடும்பத்தை பார்க்க சென்னை வந்தார். தொடர்ந்து தனது தாயை காண காட்டாத்துறைகடைக்கு வந்தார்.
பின்னர் அவரது தாயை பார்த்தவிட்டு திரும்பிவிட்டார். ஆனால் சென்னைக்கும் செல்லவில்லை. இதனால் பதறிப் போன ஜெயசிங்கின் மனைவி நிஷா குமாரி திருவட்டார் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

இந்தப் புகாரின் அடிப்படையில் ஜெயசிங்கை காவலர்கள் தேடிவருகின்றனர். ஜெயசிங் குடும்ப பிரச்னை காரணமாக மாயமானாரா? அல்லது வேறு ஏதேனும் பிரச்னையா? என்ற கோணத்தில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/

Stay updated with the latest news headlines and all the latest Tamilnadu news download Indian Express Tamil App.

Web Title: A central government official has gone missing in kanyakumari