அல்லா ரக்கா ரகுமான்..... ஏ.ஆர் ரகுமானின் இந்த டுவீட் திடீர் வைரலானது ஏன்....

A R Rahman tweet : இசைப்புயல் ஏ ஆர் ரகுமான், தனது முழுப்பெயர் கொண்ட விமான டிக்கெட்டை டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். இந்த டுவிட், தற்போது நெட்டிசன்களால் சமூகவலைதளங்களில் வைரல் ஆக்கப்பட்டு வருகிறது.

A R Rahman tweet : இசைப்புயல் ஏ ஆர் ரகுமான், தனது முழுப்பெயர் கொண்ட விமான டிக்கெட்டை டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். இந்த டுவிட், தற்போது நெட்டிசன்களால் சமூகவலைதளங்களில் வைரல் ஆக்கப்பட்டு வருகிறது.

author-image
kumaranbabu tk
புதுப்பிக்கப்பட்டது
New Update
ar rahman, ar rahman twitter, allah rakka rahman, oscar winner, music director, citizenship amendment act, caa, assam, delhi, students protest, tamilnadu, twitter, viral, netizens

ar rahman, ar rahman twitter, allah rakka rahman, oscar winner, music director, citizenship amendment act, caa, assam, delhi, students protest, tamilnadu, twitter, viral, netizens, ஏ ஆர் ரகுமான், அல்லா ரக்கா ரகுமான், டுவிட்டர், குடியுரிமை திருத்த சட்டம், அசாம், டில்லி, மாணவர்கள் போராட்டம், வைரல்

இசைப்புயல் ஏ ஆர் ரகுமான், தனது முழுப்பெயர் கொண்ட விமான டிக்கெட்டை டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். இந்த டுவிட், தற்போது நெட்டிசன்களால் சமூகவலைதளங்களில் வைரல் ஆக்கப்பட்டு வருகிறது.

Advertisment

சர்வதேச அரங்கில் இசை உலகின் சக்கரவர்த்தியாக இருப்பவர் ஏ.ஆர். ரகுமான். இவரின் பெயரின் முன்னால் உள்ள ஏ.ஆர் என்ற இனிசியலுக்கு என்ன விளக்கம் என்று தெரியாதவர்களுக்கு இன்று விடை தெரிந்திருக்கும். ஆம். அல்லா ரக்கா ரகுமான் என்பதே. ஏ.ஆர். ரகுமானின் முழுப்பெயர்.

இந்தியாவின் அண்டைநாடுகளான பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம் உள்ளிட்ட நாடுகளிலிருந்து டிசம்பர் 31, 2014ம் ஆண்டுக்குள் இந்தியா வந்தவர் முஸ்லீம்கள் அல்லாதவர்களுக்கு இந்திய குடியுரிமை வழங்க வழிவகை செய்யும் குடியுரிமை சட்ட திருத்த மசோதா நாடாளுமன்றத்தின் இருஅவைகளிலும் நிறைவேற்றப்பட்டு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தும் அதற்கு ஒப்புதல் அளித்து, குடியுரிமை திருத்த சட்டம் அமலுக்கு வந்துள்ளது.

Advertisment
Advertisements

குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து அசாம் உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்களிலும், டில்லி, கோல்கட்டா உள்ளிட்ட வடமாநிலங்களிலும் மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். டில்லி ஜாமியா பல்கலைகழக மாணவர்கள் நடத்திய போராட்டத்தில், போலீசார் மாணவர்கள் மீது நடத்திய தாக்குதலை கண்டித்து தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் கல்லூரி மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

நாடு முழுக்க போராட்டம் நடைபெற்று வரும் நிலையில் ஏ.ஆர் ரகுமான் தான் லண்டன் செல்லும் விமான டிக்கெட்டின் போட்டோவை டுவீட் செய்துள்ளார். அதில் அவரின் முழுப்பெயர் இடம்பெற்றுள்ளது.

அவர் தன்னுடைய முழு பெயரின் அடையாளத்தை வேண்டும் என்று வெளியே கூறி அதன் மூலம் மறைமுகமாக போராடுகிறார் என்று கூறுகிறார்கள். மாணவர்கள் போராட்டத்திற்கு மறைமுகமாக ஆதரவு தருகிறார் என்று பலர் டுவீட் செய்து வருகின்றனர்.. ஏ.ஆர் ரகுமான் டுவீட்டுக்கு பலரும் ஆதரவாகவும், எதிராகவும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

A R Rahman Social Media Viral Twitter

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: