Advertisment

'அது வெட்டி ஒட்டப்பட்ட வீடியோ; முதல்வர் பிறப்பை கொச்சைப் படுத்தவில்லை': ஆ.ராசா விளக்கம்

முதல்வர் பழனிசாமியின் பிறப்பு குறித்து நான் கொச்சைப்படுத்தவில்லை. முதல்வர் குறித்து நான் பேசியததாக வெளியான வீடியோ வெட்டி ஒட்டி சித்தரிக்கப்பட்டது என்று ஆ.ராசா விளக்கம் அளித்துள்ளார்.

author-image
WebDesk
New Update
a raja clarification a raja say controversy video edited, ஆ ராசா, முதல்வர் பழனிசாமி, ஆ ராசா விளக்கம், dmk, a raja controversy speech, cm edappadi k palaniswami

திமுக முன்னணி தலைவர்களில் ஒருவரான ஆ.ராசா தேர்தல் பிரசாரத்தில், முதல்வர் பழனிசாமியை அவதூறாக பேசியதாக வெளியான வீடியோ சர்ச்சைய ஏற்படுத்திய நிலையில், முதல்வர் பழனிசாமியை நான் தனிப்பட்ட முறையில் விமர்சிக்கவில்லை. முதல்வர் குறித்து நான் பேசியது வெட்டி ஒட்டி சித்தரிக்கப்பட்டது” என்று விளக்கம் அளித்துள்ளார்.

Advertisment

திமுகவின் முன்னணி தலைவர்களில் ஒருவரும் முன்னாள் மத்திய அமைச்சரும் திமுக எம்.பி.யுமான ஆ.ராசா முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை அவதூறாக பேசியதாக ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது.



அந்த வீடியோவில் ஆ.ராசா, ‘பத்திரிக்கைகள் எல்லாம் எடப்பாடி பழனிச்சாமியை மிகப்பெரிய தலைவரைப் போல சித்தரிக்கிறார்கள் . பொதுவாழ்வில் அவர் எட்டியிருக்கும் உயரம் ஒன்றும் இல்லை. நல்ல உறவில் நல்ல முறையில் பிறந்த ஆரோக்யமான குழந்தைதான் ஸ்டாலின் என்றால், கள்ள உறவில் குறை பிரசவத்தில் பிறந்த குழந்தைதான் எடப்பாடி பழனிச்சாமி. ’ என்று பேசுவதாக உள்ளது.



இந்த வீடியோவில் இடம்பெற்ற ஆ.ராசாவின் பேச்சுக்கு சமூக ஊடகங்களில் பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்தனர். திமுக எம்.பி கனிமொழி, காங்கிரஸ் எம்.பி ஜோதிமணி இருவரும் பெயர் குறிப்பிடாமல் ட்விட்டரில் கண்டனம் தெரிவித்தனர்.



இவர்களைத் தொடர்ந்து, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், பரப்புரையில் ஈடுபடும்போது கழகத்தினர் உணர்ச்சிவசப்பட்டு, கண்ணியக் குறைவான சொற்களை வெளிப்படுத்திடக் கூடாது. அப்படிப்பட்ட சொற்கள் உதிர்த்திடுவதைக் கண்டிப்பாகத் தவிர்த்திட வேண்டும் என்பதையும், அத்தகைய பேச்சுகளைக் கழகத் தலைமை ஒருபோதும் ஏற்காது என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்.” என்று ஆ.ராசாவின் பெயர் குறிப்பிடாமல் அறிவுறுத்தி அறிக்கை வெளியிட்டு இருந்தார்.



மேலும், “திமுகவினரின் பேச்சுகளைத் திரித்து, வெட்டி - ஒட்டி, தவறான பொருள்படும்படி செய்து வெற்றியைத் தடுக்க நினைத்து மூக்குடைபட்டவர்கள், இப்போதும் தோல்வி பயத்தால் மீண்டும் அதே பாணியை மேற்கொண்டிருக்கிறார்கள்” எனக் குறிப்பிட்டு மு.க. ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டார்.



மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், “அன்புடைய கழக உறுப்பினர்களுக்கு, மக்களிடையே பரப்புரை செய்யும்போது நமது கழக மரபையும் மாண்பையும் மனதில் வைத்துச் செயல்படுமாறு கேட்டுக் கொள்கிறேன். வெற்றிக்கு முன், வெற்றிக்கான பாதையும் முக்கியமானது என்பதை அனைவரும் நினைவில் கொள்ள வேண்டும்.



பரப்புரையில் ஈடுபடும்போது கழகத்தினர் உணர்ச்சிவசப்பட்டு, கண்ணியக் குறைவான சொற்களை வெளிப்படுத்திடக் கூடாது. அப்படிப்பட்ட சொற்கள் உதிர்த்திடுவதைக் கண்டிப்பாகத் தவிர்த்திட வேண்டும் என்பதையும், அத்தகைய பேச்சுகளைக் கழகத் தலைமை ஒருபோதும் ஏற்காது என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்.



பேரறிஞர் அண்ணா வலியுறுத்திய கடமை - கண்ணியம் - கட்டுப்பாடு ஆகிய மூன்றில், பேச்சாளர்களின் முதன்மை அம்சமாக இருக்கவேண்டியது கண்ணியமாகும்! அதை நினைவில் கொண்டு பேச வேண்டும்.



திமுக கூட்டணியின் வெற்றி உறுதியாகவும் வலிமையாகவும் மக்களால் தீர்மானிக்கப்பட்டுவிட்ட நிலையில், கழகத்தினரின் பேச்சுகளைத் திரித்து, வெட்டி - ஒட்டி, தவறான பொருள்படும்படி செய்து வெற்றியைத் தடுக்க நினைத்து மூக்குடைபட்டவர்கள், இப்போதும் தோல்வி பயத்தால் மீண்டும் அதே பாணியை மேற்கொண்டிருக்கிறார்கள்.



அவர்களது எண்ணம் ஈடேறாத வகையில், கவனத்துடன் சொற்களைப் பயன்படுத்த வேண்டும் எனக் கழகத்தினரைக் கேட்டுக் கொள்கிறேன்.” என்று தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், முதல்வர் பழனிசாமியின் பிறப்பு குறித்து நான் கொச்சைப்படுத்தவில்லை. முதல்வர் குறித்து நான் பேசியததாக வெளியான வீடியோ வெட்டி ஒட்டி சித்தரிக்கப்பட்டது என்று ஆ.ராசா விளக்கம் அளித்துள்ளார்.



இது குறித்து ஆ.ராசா தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில், ““என்னுடைய தேர்தல் பிரச்சாரத்தில், திமுக தலைவர் ஸ்டாலினின் அரசியல் வளர்ச்சியும், இன்று அவர் பெற்றிருக்கிற இடத்தையும், அதேபோல தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி வந்த முறையையும், பெற்றிருக்கிற இடத்தையும் ஒப்பிட்டு நான் பேசிய சில வார்த்தைகளைக் கோர்த்து வெட்டியும், ஒட்டியும் சமூக வலைதளங்களில் வந்துள்ளதாக அறிகிறேன்.



அது முற்றிலும் தவறானது. நான் எடப்பாடி பழனிசாமியின் தனிப்பட்ட பிறப்பையோ, அவருடைய தனிப்பட்ட புகழையோ களங்கம் விளைவிக்கும் வகையில் பேச வேண்டிய எண்ணமில்லை. அரசியல் ஆளுமையை ஒப்பிட்டேன். ஸ்டாலின் முறையாக, படிப்படியாக வளர்ந்து தலைவராகியுள்ளார். குறுக்கு வழியில் நாங்கள் வரவில்லை என்று குறிப்பிட்டேன்.



எடப்பாடி பழனிசாமி குறுக்கு வழியில் வந்தவர் என்பதற்காக அப்படி ஒரு ஒப்பீடு செய்யப்பட்டது. அதை ஒட்டியும், வெட்டியும் சமூக வலைதளங்களில் பரப்பிக் கொண்டிருப்பதாக அறிகிறேன். அப்படிப்பட்ட உள்நோக்கத்துடன் எதையும் நான் குறிப்பிடவில்லை. இரண்டு பேரின் அரசியல் ஆளுமையைக் குறிப்பிட அப்படி ஒரு ஒப்பீடு செய்யப்பட்டது.



அதைத் தவறாகப் புரிந்துகொண்டால் அதற்கு நான் பொறுப்பேற்க முடியாது என்பதைப் பணிவன்புடன் தெரிவித்துக் கொள்கிறேன்.” என்று குறிப்பிட்டுள்ளார்.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Dmk Edappadi K Palaniswami A Raja
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment