chennai-flood | தமிழ்நாட்டில் டிசம்பர் மாத தொடக்கத்தில் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களை மிக்ஜாம் புயல் தாக்கியது.
இந்தப் புயல் ருத்ரதாண்டம் ஆடிய நிலையில் ஆந்திராவில் கரையை கடந்தது. இந்த நிலையில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசு ரூ.6 ஆயிரம் நிவாரணம் அறிவித்துள்ளது.
எனினும் சில இடங்களில் இன்னமும் மழை வெள்ளம் வடிந்த பாடில்லை. இதற்கிடையில் சென்னை எண்ணூரில் உள்ள பெட்ரோல் சுத்திகரிப்பு நிலையத்தில் இருந்து எண்ணெய் கசிந்தது.
இந்த எண்ணெய் கசிவுக்கு எதிராக மக்கள் போராட்டம் நடத்தினார்கள். தங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது எனக் கூறினார்கள்.
இந்த நிலையில் எண்ணெய் கசிவால் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்குக் கூடுதலாக தலா 12,500 ரூபாயும் படகுகளுக்கு தலா பத்தாயிரம் ரூபாயும் நிவாரணம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.
தொடர்ந்து, 12,500 ரூபாய் வழங்கக் கணக்கெடுக்கும் பணிகள் முடிந்துவிட்டன எனக் கூறப்படுகிறது. ஆக, சென்னை எண்ணூரில் எண்ணெய் கசிவால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு தலா ரூ.12500 வழங்கப்பட உள்ளது.
அதாவது, எண்ணெய் கசிவால் பாதிக்கப்பட்ட 22 மீனவ கிராமங்களைச் சேர்ந்த 2300க்கும் மேற்பட்ட குடும்பங்கள் மற்றும் 700 படகுகளுக்கு நிவாரணம் வழங்கப்பட உள்ளது. இந்தத் தகவலை சிறப்பு அதிகாரி கந்தசாமி ஐஏஎஸ் தெரிவித்துள்ளார். மேலும் பாதிக்கப்பட்ட மீனவர்களின் படகுகளுக்கு நிவாரணமாக ரூ.10 ஆயிரம் வழங்கப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“