Advertisment

பூச்சி மசாலா இல்லை; ஆச்சி மசாலாதான்: இணையத்தை உலுக்கும் சர்ச்சை

Controversy on Aachi Masala: ஆச்சி மசாலாவில் அனுமதிக்கப்பட்ட அளவைவிட பூச்சிக்கொல்லி மருந்து அதிக அளவு இருப்பதாக கூறி அது கேரளாவில் தடை செய்யப்பட்டதாக செய்தி வெளியானதைத் தொடர்ந்து சமூக ஊடகங்களில் ஆச்சி மசாலாவுக்கு ஆதரவாகவும் எதிராகவும் சர்ச்சை ஏற்பட்டுள்ளது.

author-image
Balaji E
புதுப்பிக்கப்பட்டது
New Update
Aachi Mala banned in Thrissur, Aachi Masala, Controversy on Aachi Masala, ஆச்சி மசாலா தடை, ஆச்சி மசாலா விவகாரம் சர்ச்சை, ஆச்சி மசாலா, Aachi Masala foods denied, not pesticide in Aachi Masal

Aachi Mala banned in Thrissur, Aachi Masala, Controversy on Aachi Masala, ஆச்சி மசாலா தடை, ஆச்சி மசாலா விவகாரம் சர்ச்சை, ஆச்சி மசாலா, Aachi Masala foods denied, not pesticide in Aachi Masal

Controversy on Aachi Masala: ஆச்சி மசாலாவில் அனுமதிக்கப்பட்ட அளவைவிட பூச்சிக்கொல்லி மருந்து அதிக அளவு இருப்பதாக கூறி அது கேரளாவில் தடை செய்யப்பட்டதாக செய்தி வெளியானதைத் தொடர்ந்து சமூக ஊடகங்களில் ஆச்சி மசாலாவுக்கு ஆதரவாகவும் எதிராகவும் சர்ச்சை ஏற்பட்டுள்ளது.

Advertisment

சென்னையை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டுவருகிறது ஆச்சி மசாலா ஃபுட்ஸ் நிறுவனம். இந்த நிறுவனத்தின் தயாரிப்பான ஆச்சி மசாலாவுக்கு தமிழகம் மட்டுமில்லாமல் அண்டை மாநிலங்களான கேரளா, ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களிலும் நல்ல வரவேற்பு உள்ளது. ஆச்சி மசாலாவைப் போல ‘ஆச்சி மசாலா ஒன்றே வைராக்கியம்’ என்ற அதன் விளம்பரமும் தொலைக்காட்சிகளில் பார்வையாளர்களின் கவனத்தை ஈர்த்து வரவேற்பு பெற்று வருகிறது.

இந்நிலையில், ஆச்சி மசாலாவில் அனுமதிக்கப்பட்ட அளவைவிட பூச்சிக்கொல்லி மருந்தின் அளவு அதிக அளவில் இருப்பதாகவும் அதனால் கேரளாவில் ஆச்சி மசாலா தடை செய்யப்பட்டுள்ளதாகவும் செய்தி வெளியானது. இதனைத் தொடர்ந்து சிலர் ஆச்சி மசாலா நிறுவனத் தலைவர் பத்மசிங் இசாக்கை விமர்சித்தும் இணையத்தில் டுவீட் செய்தனர். அவருக்கு ஆதரவாகவும் ஆச்சி மசாலாவை ஆதரித்தும் சிலர் டுவீட் செய்தனர்.

சிலர் ஆச்சி மசாலாவை பூச்சி மசாலா என்று கேலி செய்தனர். சிலர் இதனை எதிர்த்து ஆச்சி மசாலாவை ஆதரித்து பதிவிட்டனர். இதனால் ஆச்சி மசாலா விவகாரம் சமூக ஊடகங்களில் சர்ச்சையானது.

மேலும் சிலர், இதற்கு முன்பு தமிழகத்தில் இருந்து அனுப்பப்படும் காய்கறிகளில் பூச்சிமருந்தின் அளவு அதிகமாக இருப்பதாகக் கூறி கேரளா தடை செய்தது. அப்போது பல விவசாயிகள், வியாபாரிகள் பாதிக்கப்பட்டனர். பின்னர், அப்படி இல்லை என்று தெரியவந்ததால் தொடர்ந்து தமிழகத்தில் இருந்து காய்கறிகள் கேரளாவுக்கு அனுப்பப்படுகின்றன. இந்த பின்னணியில், ஆச்சி மசாலா நிறுவனத்தின் தலைவர் பத்மசிங் இசாக் திருநெல்வேலியைப் பூர்வீகமாகக் கொண்டவர். அவர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர் என்பதால் தமிழக நிறுவனத்தின் பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் விதமாக இப்படி வதந்தி பரப்பப்படுகிறது என்றும் ஒரு தரப்பினர் சமூக ஊடகங்களில் குற்றம் சாட்டினர்.

இதனைத் தொடர்ந்து, கடந்த 6 ஆம் தேதி ஆச்சி மசாலா ஃபுட்ஸ் நிறுவனம், ஆச்சி மசாலாவில் பூச்சிக்கொல்லி மருந்து அதிக அளவில் இருப்பதையும் கேரளாவில் தடை செய்யப்பட்டதையும் மறுத்து அறிக்கை வெளியிட்டது. அந்த அறிக்கையில், நாளிதழ் ஒன்றில் ஆச்சி நிறுவனத்தைப் பற்றிய வெளியான வதந்தி வேகமாக பரவி வருகிறது என்றும் அது முழுக்க தவறான தகவல் அதை யாரும் நம்ப வேண்டாம் என்று தெரிவித்திருந்தது. மேலும், இந்த சம்பந்தப்பட்டவர்கள் மீது சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்திருந்தது.

இதனிடையே, கேரளாவின் திருச்சூர் உணவு பாதுகாப்பு அதிகாரிகள், ஜூன் மாதம் தயாரிக்கப்பட்ட ஆச்சி மசாலா பாக்கெட்டை எடுத்து பரிசோதனைக்கு அனுப்பியதில் அதில் அனுமதிக்கப்பட்ட அளவான ஒரு கிலோவுக்கு 0.01 கிராம் என்ற அளவை விட அதிகமாக இருப்பதாக தெரியவந்ததால் ஆச்சி மசாலாவை திருச்சூரில் தடை செய்யப்பட்டுள்ளதாகவும் அதனை ஆச்சி மசாலா நிறுவனம் எதித்து முறையீடு செய்யலாம் என்றும் திருச்சூர் உதவி ஃபுட் கமிஷனர் அதிகாரி கூறியதாக தகவல் வெளியானது.

இது தொடர்பாக ஆச்சி மசாலா ஃபுட்ஸ் நிறுவனம் தரப்பில் கூறுகையில், “நாங்கள் ஏற்கெனவே இது தொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ளோம். அது போல தடை எதுவும் செய்யப்படவில்லை. அவர்கள் பரிசோதனை செய்யப்பட்டதாக கூறப்படுகிற அதே பேட்ச்சில் தயாரிக்கப்பட்ட ஆச்சி மசாலாவை பரிசோதனை செய்ததில் அப்படி பூச்சிக்கொல்லி மருந்து எதுவும் இல்லை என்று தெரியவந்துள்ளது. அதனால், அது போன்ற வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம்.” என்று தெரிவித்தனர்.

Tamilnadu Kerala
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment