/indian-express-tamil/media/media_files/2025/07/15/aadhav-arjuna-life-in-threat-complaint-to-chennai-alwarpet-police-tamil-news-2025-07-15-18-00-18.jpg)
மதுரை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் திமுகவைச் சேர்ந்த வக்கீல் கனகவேல் பாண்டியன் உள்ளிட்டோர் மனு ஒன்றை அளித்துள்ளனர். அந்த மனுவில் கரூரில் நடந்த தமிழக வெற்றிக் கழகம் தேர்தல் பிரச்சார கூட்டத்தில் 41 பேர் உயிரிழந்த நிலையில் இந்த விவகாரங்களில் சமூக வலைதளங்களில் தொடர்ந்து பல்வேறு தரப்பினரும் பல்வேறு கருத்துகளை வெளியிட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் தமிழக வெற்றிக் கழக தேர்தல் பிரச்சார மேலாண்மை பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் தமிழகத்தின் அமைதியை சீர்குலைக்கும் வகையிலும் கலவரத்தை தூண்டும் வகையிலும் அரசு மற்றும் காவல்துறைக்கு எதிராக அவதூறுகளை கருத்துக்களை பதிவிட்டு தாகவும் எனவே அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது. ஆதவ் அர்ஜூனா தனது எக்ஸ் பக்கத்தில் ஆதவ் அர்ஜுனா அரசுக்கு எதிராக பதிவிட்ட நிலையில் சிறிது நேரத்திலேயே இதனை நீக்கிவிட்டார்.
இந்த சர்ச்சைக்குரிய பதிவை தொடர்ந்து, கலவரத்தை தூண்டும் வகையில் கருத்து வெளியிட்டதாக, ஆதவ் அர்ஜுனா மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இளைஞர்கள் மத்தியில் கலவரத்தைத் தூண்டும் வகையில் இரவு 11.29 மணிக்கு ‘இலங்கை, நேபாளம் போல இளைஞர் புரட்சி எழுச்சிக்கான அறைகூவல்’ எனப் பதிவிட்ட ஆதவ் அர்ஜுனா, பின்னர் 12 மணிக்கு இலங்கை, நேபாளம் போன்ற சொற்களை நீக்கிவிட்டு பதிவிட்டுள்ளார். மேலும், சமூக ஊடகங்களில் எழுந்த எதிர்ப்புகளைத் தொடர்ந்து பதிவை நீக்கியுள்ளார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.