அரசு பேருந்து டிரைவரின் சாமர்த்தியத்தால் 41 பேர் உயிர்தப்பினர். இந்த சம்பவம் மேல்மருவத்தூரில் நடந்துள்ளது.
அரசு பேருந்து ஒன்று விழுப்புரத்தில் இருந்து சென்னை நோக்கி வந்து கொண்டு இருந்தது. மேல்மருத்தூர் அருகே வந்த போது, பஸ் இன்ஜினில் தீ பிடித்தது. இதையறித்த டிரைவர் உடனடியாக பஸை நிறுத்தினார்.
அப்போது பஸ்சில் 41 பேர் இருந்தனர். உடனடியாக அவர்களை பஸ்சில் இருந்து பத்திரமாக இறக்கிவிட்டார். சாலையின் நடுவே பஸ் நின்றதால் அதனை ஓரமாக நிறுத்த முயற்சித்தார். பஸ் மளமளவென தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது. உடன் அந்த முயற்சியை கைவிட்டுவிட்டு, அவரும் தூரமாக நின்று கொண்டார்.
/tamil-ie/media/media_files/uploads/2017/06/bus-fire-1-300x181.jpg)
பயணிகள் அனைவரும் பத்திரமாக கீழே இறங்கியதால் ஒருவருக்குக் கூட காயம் இல்லை. டிரைவரின் சாமர்த்தியத்தை பயணிகள் பாராட்டினார்கள்.