நடிகர் கமல்ஹாசனுக்கு கொரோனா தொற்று உறுதி

Actor Kamalhassan tested corona positive: நடிகர் கமல்ஹாசனுக்கு கொரோனா தொற்று உறுதி; கொரோனா நீங்கவில்லையென்பதை உணர்ந்து அனைவரும் பாதுகாப்பாக இருங்கள் என ட்வீட்

நடிகரும் மக்கள் நீதி மய்யம் தலைவருமான கமல்ஹாசனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனை அவர் தனது ட்விட்டர் பக்கம் மூலம் தெரிவித்துள்ளார்.

இது குறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள கமல்ஹாசன், அமெரிக்கப் பயணம் முடிந்து திரும்பிய பின் லேசான இருமல் இருந்தது. பரிசோதனை செய்ததில் கோவிட் தொற்று உறுதியானது. மருத்துவமனையில் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளேன். இன்னமும் நோய்ப்பரவல் நீங்கவில்லையென்பதை உணர்ந்து அனைவரும் பாதுகாப்பாக இருங்கள் என பதிவிட்டுள்ளார்.

67 வயதான நடிகர் கமலஹாசன், நவம்பர் 7 ஆம் தேதி தனது பிறந்தநாளை கொண்டாடினார். கமல் சமீபத்தில் ஹவுஸ் ஆஃப் கத்தர் என்ற தனது ஃபேஷன் பிராண்டை தொடங்க அமெரிக்கா சென்றார். இந்த நிகழ்வு கடந்த வாரம் சிகாகோவில் நடந்தது.

இந்தியா திரும்பிய பிறகு, கமல்ஹாசனும் வார இறுதி எபிசோட்களை தொகுத்து வழங்குவதற்காக பிக் பாஸ் செட்டுகளுக்கு சென்றார். வார இறுதி எபிசோட்களில், வீட்டில் உள்ள போட்டியாளர்களுடனும், ஸ்டுடியோவில் பார்வையாளர்களுடனும் மிகுந்த ஆர்வத்துடன் ஈடுபட்ட கமலிடம் நோய்க்கான அறிகுறியே இல்லை. ஆனால் தற்போது தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கமலஹாசன், ஏற்கனவே கொரோனா தடுப்பூசி போட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. கமல்ஹாசனுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருப்பது இதுவே முதல் முறை.

இதனையடுத்து, கமலஹாசனின் ரசிகர்கள், அவர் விரைவில் குணமடைய வேண்டும் என சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Tamilnadu news here. You can also read all the Tamilnadu news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Actor kamalhassan tested corona positive

Next Story
மாணவர்கள் போராட்டம் எதிரொலி; மெரினா கடற்கரைக்கு பொதுமக்கள் இன்று செல்ல தடை
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com
Best of Express