Advertisment

போர் யானை பொறித்த கொடி, சமூக நீதி பேசும் பாடல்... தீவிர அரசியலை நோக்கி நகரும் விஜய்!

கட்சித் தொண்டர்களுக்கு விஜய் ஆற்றிய உரையில், ‘தோழர்கள்’ என்று அவர் குறிப்பிடும் போது, கட்சியின் சின்னமாக மட்டுமல்லாமல், தமிழ்நாட்டின் வருங்கால சந்ததியினருக்கான நம்பிக்கைக் கலங்கரை விளக்கமாகவும் தெரிகிறார்.

author-image
Arun Janardhanan
புதுப்பிக்கப்பட்டது
New Update
actor politician TVK vijay unveils party flag 2026 assembly polls Tamil News

விஜய் வெள்ளித்திரையில் இருந்து அரசியல் களத்திற்கு மாறுவது அவரது ரசிகர் மன்றமான விஜய் மக்கள் இயக்கத்தை (வி.ம.க) மாற்றுவதன் மூலம் சாத்தியமாகியுள்ளது.

தமிழ் சினிமாவின் உச்சநட்சத்திரமாக வலம் வரும் நடிகர் விஜய், தனது புதிய கட்சியான தமிழக வெற்றிக் கழகத்தின் (டி.வி.கே) கொடி மற்றும் பாடலை சென்னை அருகே உள்ள பனையூரில் உள்ள கட்சியின் தலைமையகத்தில் நேற்று வியாழக்கிழமை வெளியிட்டார். இதன் மூலம் அவர் தீவிர அரசியலை நோக்கி நகர உறுதியான படியை எடுத்து வைத்துள்ளார். 

Advertisment

ஆங்கிலத்தில் படிக்கவும்: A flag and an anthem mark Vijay’s definitive entry into Tamil politics

அரசியலில் அவர் களமிறங்குவதற்கான தொடக்கத்தைக் குறிக்கும் இந்த நிகழ்வில், நடிகர் தனது கட்சியின் சின்னங்களை தனது ஆதரவாளர்களுக்கு முறையாக அறிமுகப்படுத்தினார். மேலேயும் கீழேயும் சிவப்பு மற்றும் நடுவில் மஞ்சள் என இரண்டு வண்ணங்களைக் கொண்ட இந்த கொடியை விஜய்யே ஏற்றினார். கொடியின் மையத்தில் இரண்டு எக்காளம் ஊதும் யானைகள் சூழ வாகை மலர் உள்ளது. தமிழ் வரலாற்றில் ஆழமாக வேரூன்றிய வாகைப் பூ, பண்டைய போர்வீரர்கள் தங்களது வெற்றியின் அடையாளமாக அணிந்திருந்தார்கள். 

இது பற்றி த.வெ.க-வின் அலுவலக நிர்வாகி ஒருவர் கூறுகையில், மக்கள் சக்தியை அடையாளப்படுத்தும் யானைகள், கொடியின் படத்திற்கு வலிமையையும் நெகிழ்ச்சியையும் சேர்க்கும் வகையில் பூ வடிவமைக்கப்பட்டுள்ளது.  

கட்சித் தொண்டர்களுக்கு அவர் ஆற்றிய உரையில், ‘தோழர்கள்’ என்று அவர் குறிப்பிடும் போது, கட்சியின் சின்னமாக மட்டுமல்லாமல், தமிழ்நாட்டின் வருங்கால சந்ததியினருக்கான நம்பிக்கைக் கலங்கரை விளக்கமாகவும் கொடியை அறிமுகப்படுத்திய பெருமையை வெளிப்படுத்தினார். "நாங்கள் இதுவரை எங்களுக்காக உழைத்தோம். இனிவரும் காலங்களில் அனைவரும் கட்சியாக இணைந்து தமிழகத்திற்காகவும், மக்களின் முன்னேற்றத்திற்காகவும் பாடுபடுவோம்,'' என்று அவர் கூறினார். 

இந்த நிகழ்வில் கட்சியின் கொடிப் பாடலான 'தமிழன் கொடி பறக்குது' ஜனநாயகக் கொள்கைகள், சமத்துவம் மற்றும் சமூக நீதிக்கான கட்சியின் உறுதிப்பாட்டை கோடிட்டுக் காட்டுவதாக அமைந்துள்ளது. 

விஜய்யின் நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட அரசியலில் அடியெடுத்து வைப்பது, இந்த ஆண்டின் தொடக்கத்தில் உறுதிப்படுத்தப்பட்டது. அவர் கடந்த பிப்ரவரியில் த.வெ.க உருவாக இருப்பதை வெளியுலகிற்கு அறிவித்தார். மேலும், 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் பங்கேற்க விருப்பம் தெரிவித்து, 2024 மக்களவைத் தேர்தலில் இருந்து விலகி இருக்க அக்கட்சி முடிவு செய்தது.

நேற்றைய நிகழ்வின் போது, ​​விஜய்யின் பெற்றோர்களான திரைப்பட இயக்குனர் எஸ்.ஏ சந்திரசேகர் மற்றும் ஷோபா சந்திரசேகர் ஆகியோரும் உடன் இருந்தனர். சமீபத்தில் விஜய்க்கும் அவரது தந்தைக்கும் இடையே ஏற்பட்ட மோதலைச் சுற்றி சர்ச்சைகள் இருந்தபோதிலும், அவர்கள் கட்சியின் பாடல் இசைக்கப்பட்டபோது கட்சியின் பொதுச் செயலாளர் என்.ஆனந்திற்கு கட்டை விரலைக்காட்டி தம்ஸ்அப் கொடுத்தனர். 

“நான் அதை ஒரு கட்சியின் கொடியாக மட்டும் பார்க்கவில்லை. மாறாக, தமிழ்நாட்டின் வருங்கால சந்ததியினரின் வெற்றிக் கொடியாகவே இதைப் பார்க்கிறேன்” என்று கூறிய விஜய், தன்னைப் பின்பற்றுபவர்களை தங்கள் வீடுகளில் மட்டுமின்றி நெஞ்சிலும் ஏற்றி வைக்குமாறு கேட்டுக் கொண்டார்.

விஜய் வெள்ளித்திரையில் இருந்து அரசியல் களத்திற்கு மாறுவது அவரது ரசிகர் மன்றமான விஜய் மக்கள் இயக்கத்தை (வி.ம.க) மாற்றுவதன் மூலம் சாத்தியமாகியுள்ளது. வி.ம.க-வின் தலைவரான ஆனந்த், விஜய்யைத் தவிர, அவரது கட்சியின் மிகவும் அடையாளம் காணக்கூடிய முகமாகத் தொடர்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

Tamil Nadu Politics Actor Vijay Tamilaga Vettri Kazhagam Politics
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment