பாஜக-வை குறிப்பிடவில்லை… அரசியலாக்க வேண்டாம் : ராகவா லாரன்ஸ் விளக்கம்

தயவுசெய்து என் பேச்சில் அரசியல் சேர்க்காதீர்கள் என நடிகர் ராகவா லாரன்ஸ் கேட்டுக்கொண்டுள்ளார்.

Raghava-lawrence,BJP,

தனக்கும் அரசியலுக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை என்றும், தன்னை அரசியலுடன் தொடர்பு படுத்த வேண்டாம் என நடிகர் ராகவா லாரன்ஸ் விளக்கம் அளித்துள்ளார். இது தொடர்பாக ராகவா லாரன்ஸ் இன்று(திங்கள் கிழமை) வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: ”நேற்று எனது ‘முனி 4’ படத்திற்கு பூஜை போடுவதற்காக திருப்பதி சென்றிருந்தேன். தரிசனம் முடித்து வரும் போது மீடியா நண்பர்கள் சிலர் படம் பற்றி கேட்டார்கள். சிலர் அம்மாவுக்கான கோயில் பற்றி கேட்டார்கள். கோயில் திறந்து ஒரு மண்டலம் முடிந்தது பற்றி சொன்னேன்.

நீட் விவகாரம் பற்றி கேட்டார்கள். நான் ‘காலம் பதில் சொல்லும்’ என்று ஒற்றை வரியில் பதில் சொன்னேன். ஆனால் வெளியிடப்பட்ட செய்தியில் பாஜக-வுக்கு காலம் பதில் சொல்லும் என்று நான் சொன்னதாக வெளியிட்டுள்ளார்கள். சேவையும் ஆன்மீகமும்தான் எனக்குப் பிடித்த விஷயம். அரசியல் அல்ல. அப்படி இருக்க நான் எப்படி பாஜக பெயரை குறிப்பிடுவேன்.

அனிதா குடும்பத்திற்கு 15 லட்சம் நிதி கொடுத்தீர்களா? என்றும் கேட்டார்கள். அது கடவுளுக்கும் எனக்கும் அனிதா குடும்பத்திற்கும் மட்டும் தெரிந்தால் போதும் என்று சொன்னேன். தயவுசெய்து என் பேச்சில் அரசியல் சேர்க்காதீர்கள்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Get the latest Tamil news and Tamilnadu news here. You can also read all the Tamilnadu news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Actor ragava lawrence said dont make any political agenda on him

Next Story
நதிகளை மீட்போம்… பாடல் இயற்றி பாட்டு பாடிய நடிகர் விவேக்! வீடியோActor vivek, Jaggi Vasudev, Rally for River
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com