Advertisment

நடிகர் சந்தானத்திற்கு முன் ஜாமீன் : இரு வாரங்கள் போலீஸ் நிலையத்தில் ஆஜராக வேண்டும்

நடிகர் சந்தானம், இரு வாரங்கள் வளசரவாக்கம் போலீஸ் நிலையத்தில் ஆஜராக வேண்டும் என்கிற நிபந்தனையுடன் சென்னை உயர்நீதிமன்றத்தில் முன் ஜாமீன் பெற்றார்.

author-image
selvaraj s
புதுப்பிக்கப்பட்டது
New Update
actor santhanam, chennai high court, criminal case against actor santhanam, anticipatory bail for actor santhanam

நடிகர் சந்தானம், இரு வாரங்கள் வளசரவாக்கம் போலீஸ் நிலையத்தில் ஆஜராக வேண்டும் என்கிற நிபந்தனையுடன் சென்னை உயர்நீதிமன்றத்தில் முன் ஜாமீன் பெற்றார்.

Advertisment

நடிகர் சந்தானம், தமிழ்த் திரையுலகின் முன்னணி நகைச்சுவை நடிகர்! 100 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கிறார் இவர். சென்னை வளசரவாக்கத்தில் உள்ள இன்னோவேட்டிவ் கன்ஸ்ட்ரக்சன் கம்பெனியுடன் சேர்ந்து குன்றத்தூர் அருகே திருமண மண்டபம் கட்ட, அந்நிறுவனத்திற்கு ரூ 3 கோடி முன்பணமாக கொடுத்துள்ளார்.

சந்தானத்திடம் பணத்தை பெற்றுக்கொண்ட அந்த நிறுவனம் திருமணம் மண்டபத்தை 3 ஆண்டுகளாக கட்டாமல் இழுத்தடித்ததாக கூறப்படுகிறது. இதனால் இருவருக்குமிடையே போடப்பட்ட ஒப்பந்தம் கேன்சல் செய்யப்பட்டது. எனவே அந்த நிறுவனம் பணத்தை திருப்பி கொடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.

சந்தானத்திற்கு திருப்பி கொடுத்த, 3 கோடி ரூபாயில் சில லட்சங்களை சம்பந்தப்பட்ட நிறுவனம் இன்னும் கொடுக்க வேண்டியுள்ளது. மீதி பணத்தை கேட்கச் சென்ற சந்தானத்துக்கும், இன்னோவேட்டிவ் கன்ஸ்டிரக்ஸன் நிறுவன சண்முக சுந்தரம், அவரது நண்பரும் வழக்கறிஞருமான பிரேம் ஆனந்துக்குமிடையே வாய் தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகின்றது. வாய் தகராறு முற்றி கைகலப்பானதாக தெரிகிறது.

இதையடுத்து நடுரோட்டில் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர். இதில் பிரேம் ஆனந்துக்கு மூக்கு உடைந்து ரத்தம் கொட்டியது. இந்த பிரச்னை தொடர்பாக சந்தானம் மீது பிரேம் ஆனந்த் வளசரவாக்கம் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

சந்தானம் இந்த விவகாரத்தில் தன்னை போலீஸ் கைது செய்யக்கூடும் என்று அஞ்சி சென்னை உயர்நீதிமன்றத்தில் முன் ஜாமீன் கேட்டு மனுதாக்கல் செய்துள்ளார். அதில், ‘இந்த தாக்குதல் நடவடிக்கைக்கும் எனக்கும் சம்மந்தம் இல்லை தவறாக என் மீது வழக்கு பதிவு செய்யபட்டுள்ளது. எனவே இந்த வழக்கில் எனக்கு முன் ஜாமின் வழங்க வேண்டும்’ என தெரிவித்துள்ளார்.

இந்த வழக்கு உயர்நீதிமன்ற நீதிபதி ஆதிநாதன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது காயமடைந்த வழக்கறிஞர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் நடிகர் சந்தானத்திற்கு முன் ஜாமின் வழங்க கூடாது என எதிர்ப்பு தெரிவித்தார். நேற்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, ‘காயமடைந்த வழக்கறிஞர் தற்போது எந்த நிலையில் உள்ளார்? அவர் மருத்துவமனையில் உள் நோயாளியாக சிகிச்சை பெற்று வருகின்றரா? அல்லது வீட்டுக்கு சென்று விட்டாரா? என்பது குறித்து போலீஸ் பதில் அளிக்க உத்தரவிட்டு’ விசாரணையை நீதிபதி ஒரு நாள் தள்ளிவைத்தார்.

அதன்படி இன்று (13-ம் தேதி) இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. நீதிபதி வழக்கை விசாரித்து, நடிகர் சந்தானத்திற்கு நிபந்தனை அடிப்படையில் முன் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார். அதன்படி, சென்னை வளசரவாக்கம் போலீஸ் நிலையத்தில் இரு வாரங்களுக்கு தினமும் நடிகர் சந்தானம் ஆஜராக வேண்டும் என உத்தரவிடப்பட்டது.

 

Chennai High Court Santhanam
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment