Advertisment

முதலமைச்சரை சந்தித்து பேசினார் நடிகர் விஜய்: ’மெர்சல்’ விவகாரம் குறித்து பேசினாரா?

தீபாவளியன்று வெளியாகுமா என்ற சந்தேகம் நிலவிவரும் நிலையில், நடிகர் விஜய் இன்று முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியை நேரில் சந்தித்து பேசினார்.

author-image
Nandhini v
புதுப்பிக்கப்பட்டது
New Update
, actor vijay, CM Edappadi Palanisamy, mersal movie, mersal issue

’மெர்சல்’ திரைப்படத்துக்கு சென்சார் போர்டு சான்றிதழ் அளிக்காததால், படம் திட்டமிட்டபடி தீபாவளியன்று வெளியாகுமா என்ற சந்தேகம் நிலவிவரும் நிலையில், நடிகர் விஜய் இன்று முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியை நேரில் சந்தித்து பேசினார்.

Advertisment

மெர்சல் திரைப்படத்திற்கு இன்னும் விலங்குகள் நல வாரியம் தடையில்லா சான்று அளிக்காததால், அப்படத்திற்கு தற்போதுவரை சென்சார் போர்டு சான்றளிக்கவில்லை. தீபாவளிக்கு இன்னும் இரண்டு நாட்களே உள்ள நிலையில், அதற்குள் சென்சார் போர்டு சான்றளித்து படம் வெளியாகுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

இந்நிலையில், நடிகர் விஜய் ஞாயிற்றுக்கிழமை சுமார் 12.30 மணியளவில், கிரீன்வேஸ் சாலையில் உள்ள முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி வீட்டுக்கு சென்று அவரை சந்தித்து பேசினார். விஜய் எதற்காக முதலமைச்சரை சந்தித்தார், அவர்கள் இருவரும் என்ன பேசினர் என்ற விவரங்கள் வெளியாகவில்லை. இந்த சந்திப்பின்போது செய்தி மற்றும் விளம்பர துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ உடனிருந்தார்.

கேளிக்கை வரியை 10 சதவீதத்திலிருந்து குறைத்ததற்காகவும், திரையரங்க கட்டண உயர்வுக்கு அனுமதியளித்ததற்காகவும், நடிகர் விஜய் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமிக்கு நன்றி தெரிவித்ததாக கூறப்படுகிறது. மேலும், நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன் ஆகியோர் தங்களின் அரசியல் வருகை குறித்து நேரடியாக பேசிவரும் நிலையில், முதலமைச்சருடனான சந்திப்பு அரசியல் சூழ்நிலையில் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.

Actor Vijay Mersal Movie
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment