scorecardresearch

நதிகளை மீட்போம்… பாடல் இயற்றி பாட்டு பாடிய நடிகர் விவேக்! வீடியோ

நதிகளை மீட்போம்-பாரதம் காப்போம் விழிப்புணர்வு நிகழ்ச்சியின்போது, நடிகர் விவேக் நதிகளை பாதுகாப்பதன் அவசியம் குறித்து பாடல் பாடினார்.

Actor vivek, Jaggi Vasudev, Rally for River

ஜக்கி வாசுதேவ் முன்னெடுத்திருக்கும் நதிகளை மீட்போம் திட்டத்திற்கு ஆதரவாக பல்வேறு தரப்பினரும் ஆதரவு தெரிவித்துள்ளனர். அழிந்து வரும் நிதிகளை மீட்கவும், நிதிகளை பாதுகாப்பதன் அவசியம் குறித்தும் ஈகா யோகா மைய நிறுவர் ஜக்கி வாசுதேவ் கடந்த செம்படம்பர் 3-ம் தேதி கோவையில் நதிகளை மீட்போம் என்ற பேரணியை தொடங்கினார். மத்திய அமைச்சர் ஹர்ஷவர்தன் இந்த பேரணியை தொடங்கிவைத்தார். இந்த பேரணி அக்டோபர் 2-ம் தேதி டெல்லியில் முடிவடைகிறது.

இந்த நிலையில், சென்னையில் நடைபெற்ற நதிகளை மீட்போம்-பாரதம் காப்போம் விழிப்புணர்வு நிகழ்ச்சியின்போது, நடிகர் விவேக் நதிகளை பாதுகாப்பதன் அவசியம் குறித்து பேசினார். அப்போது, அவர் நதிகளை மீட்பது குறித்து பாடல் இயற்றி பாடல் ஒன்றையும் பாடினார்.

Stay updated with the latest news headlines and all the latest Tamilnadu news download Indian Express Tamil App.

Web Title: Actor vivek sings song for jaggi vasudevs rally for river