ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் முடிவுகள் இன்று அறிவிக்கப்பட்டு வருகின்றன. வாக்கு எண்ணிக்கை துவங்கப்பட்ட நேரத்திலிருந்தே, சுயேட்சை வேட்பாளராக களமிறங்கிய டிடிவி தினகரன் முன்னிலையிலேயே இருக்கிறார். இரண்டாவதாக, அதிமுக வேட்பாளர் மதுசூதனன், மூன்றாவதாக திமுக வேட்பாளர் மருது கணேஷ், நான்காவதாக நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கலைக்கோட்டுதயம் உள்ளிட்டோர் இடம் பெற்றுள்ளனர். பாஜக, நோட்டாவைவிட குறைவான வாக்குகளையே பெற்றுள்ளன.
இந்நிலையில், ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் திமுக தோல்விக்கு காரணம், அக்கட்சிக்கு மதிமுக பொதுச் செயலாளர் வைகோ ஆதரவளித்தது தான் என சிலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
அழகிரியின் மகனும், திரைப்பட தயாரிப்பாளருமான தயாநிதி அழகிரி, அதே கருத்தை முன்னிறுத்தி, வைகோவை கேலி செய்யும் விதமாக மீம்ஸ் ஒன்றை தன் ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்தார்.
அதேபோல், நடிகை கஸ்தூரியும் தன் ட்விட்டர் பக்கத்தில் வைகோ நடந்து செல்லும் புகைப்படத்தை வெளியிட்டு, “இந்தியாவின் மிகவும் சக்திவாய்ந்த அரசியல்வாதி”, என குறிப்பிட்டுள்ளார்.
The most powerful politician in India Today.#RKNagar #DMK #parithabangal pic.twitter.com/Sq3uchn97N
— kasturi shankar (@KasthuriShankar) 24 December 2017
"Ada angethaanpa kalla otte pottom!" Moment ???????????????????????? https://t.co/6AIBT2JVJ4
— kasturi shankar (@KasthuriShankar) 24 December 2017
நடிகை கஸ்தூரி அண்மை காலமாக தமிழக அரசியல் குறித்து தன் ட்விட்டர் பக்கத்தில் தொடர்ந்து கருத்து தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.