பழம்பெரும் நடிகை வாணிஸ்ரீயின் மகன் வெங்கடேஷ் கார்த்தி (32) நேற்று திருக்கழுக்குன்றம் அருகே அவர்களுடைய பூர்வீக வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். அவருடைய தற்கொலைக்கு காரணம் என்ன என்று புதிய தகவல்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பழம்பெரும் நடிகை வாணிஸ்ரீயின் மகன் வெங்கடேஷ் கார்த்தி (32) நேற்று திருக்கழுக்குன்றம் அருகே அவர்களுடைய பூர்வீக வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். அவருடைய தற்கொலைக்கு காரணம் என்ன என்று புதிய தகவல்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Advertisment
தமிழ் சினிமாவின் பழம்பெரும் நடிகை வாணிஸ்ரீ. இவர் நடிகர் திலகம் சிவாஜிகணேசனுடன் வசந்த மாளிகை படத்தில் ஜோடியாக நடித்தவர். நிறைய தமிழ், தெலுங்கு சினிமாக்களில் நடித்த வாணிஸ்ரீ கருணாகரன் என்பவரை திருமணம் செய்துகொண்டு, செங்கல்பட்டு மாவட்டம், திருக்கழுக்குன்றம் அருகே உள்ள ஆனூர் கிராமத்தில் உள்ள பழமையான பங்களாவில் வசித்து வந்தார். இந்த வீடு 1800-களில் கட்டபட்ட அந்த காலத்து பழமையான பங்களா வீடு.
வாணிஸ்ரீ - கருணாகரண் தம்பதிக்கு வெங்கடேஷ் கார்த்தி என்ற ஒரு மகனும் ஒரு மகளும் பிறந்தபின், வாணிஸ்ரீ அவரது கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, பிரிந்து வாழ்கிறார். வாணிஸ்ரீ உடன் மகளும், தந்தையுடன் மகன் வெங்கடேஷ் கார்த்தியும் வசித்த்து வந்தனர். இதில் மகன் கார்த்தி வெங்கடேஷ் படித்து மருத்துவரானார். அவர் கர்நாடகாவில் உள்ள அரசு மருத்துவமனையில் உதவிப் பேராசிரியராக பணியாற்றி வந்தார். வெங்கடேஷ் கார்த்திக்கு மனைவி மற்றும் 2 குழந்தைகள் உள்ளனர். இவரது மனைவி சென்னையில் உள்ள ஒரு பிரபல தனியார் மருத்துவமனையில் பணியாற்றி வருகிறார். இவர் சென்னை நுங்கம்பாக்கத்தில் வசித்து வருகிறார்.
Advertisment
Advertisements
இந்த நிலையில்தான், செங்கல்பட்டு மாவட்டம், திருக்கழுக்குன்றம் அருகே ஆனூர் கிராமத்தில் உள்ள பூர்வீக வீட்டில், பராமரிப்பு இல்லாத பகுதியில் வாணிஸ்ரீ மகன் வெங்கடேஷ் கார்த்தி நேற்று தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.
இது குறித்து தகவல் அறிந்து விரைந்து சென்ற காவல்துறையினர் சடலத்தைக் கைப்பற்றி வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
பெங்களூருவில் அரசு மருத்துவமனையில் உதவிப் பேராசிரியராக பணியாற்றி வந்த வெங்கடேஷ் கார்த்தி, ஊரடங்கு காரணமாக பெங்களூருவிலேயே இருந்தார். இதையடுத்து, அவரது தந்தை கருணாகரன் பெங்களூரு சென்று தனது மகன் வெங்கடேஷ் கார்த்தியை வீட்டுக்கு அழைத்து வந்துள்ளார்.
வெங்கடேஷ் கார்த்தி, தனக்கு தெரியாமல் தன்னிடம் இருந்து கொரோனா நோய் தொற்று மனைவி மற்றும் குழந்தைகளுக்கு சென்றுவிடக் கூடாது என்று முன் எச்சரிக்கை காரணமாக சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள தனது வீட்டிற்கு செல்லாமல்வெங்கடேஷ் கார்த்தி கடந்த மே 6-ம் தேதி ஆனூரில் உள்ள பங்களா வீட்டு வந்து தங்கியுள்ளார்.
பெங்களூருவில் இருந்து வந்த அவர் தன்னை தனிமைப்படுத்திக்கொண்டு இருந்துள்ளார். ஏற்கெனவே, தாய் வாணிஸ்ரீயுடன் சொத்து பிரச்னை உள்ள நிலையில் இரண்டு மாதங்களாக மனைவி மற்றும் குழந்தைகளைப் பார்க்க முடியாத ஏக்கம் மற்றும் பணிச்சுமை என்று மன அழுத்தத்தில் இப்படி ஒரு விபரீத முடிவை எடுத்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.
மேலும், வெங்கடேஷ் கார்த்தி தற்கொலை செய்துகொள்வது பற்றி அவர் கைப்பட எழுதிய கடிதம் எதுவும் கிடைக்காததால் அவரை யாராவது தற்கொலை செய்துகொள்ள தூண்டினார்களா என்ற கோணத்தில் அவரது செல்போனில் பதிவான அழைப்புகளைக் கொண்டு போலீசார் விசாரித்து வருகின்றனர்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil"