Advertisment

துபாயில் ‘செட்டில்மென்ட்’ நடந்து ஓ.பி.எஸ் - ஈ.பி.எஸ் அணி இணைகிறது: டிடிவி தரப்பு பகீர் குற்றச்சாட்டு

ஈ.பி.எஸ் தலைமையிலான அரசு ஊழல் செய்வதாக கூறிய ஓ.பி.ஸ், அதில் பங்குபோடவே அணிகள் இணைப்பு என்ற பெயரில் ஒன்றிணைகிறார் என டிடிவி தரப்பு குற்றச்சாட்டு

author-image
Ganesh Raj
புதுப்பிக்கப்பட்டது
New Update
TTV Dinakaran - Common Symbol

TTV Dinakaran - Common Symbol

ஈ.பி.எஸ் தலைமையிலான அரசு ஊழல் செய்வதாக கூறிய ஓ.பி.ஸ், அதில் பங்குபோடவே அணிகள் இணைப்பு என்ற பெயரில் ஒன்றிணைகிறார் என டிடிவி தினகரன் தரப்பு எம்.எல்.ஏ வெற்றிவேல் குற்றம்சாட்டியுள்ளார்.

Advertisment

சென்னையில் டிடிவி தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ வெற்றிவேல் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறும்போது: எடப்பாடி பழனிசாமி, ஓ பன்னீர் செல்வம் அணி இணைப்பதை 98 சதவீத அதிமுக தொண்டர்கள் எதிர்க்கின்றனர். பல முத்த கட்சித் தலைவர்கள் எல்லாம் ஓ பன்னீர் செல்வத்தை நம்பி, அவருடன் சென்றிருந்தனர். ஆனால், ஓ பன்னீர் செல்வம் தனது சுய லாபத்திற்காக, அவர்களை கைவிட்டுவிட்டார். ஒருவர் அல்லது இரண்டு பேருக்கு பதவிகளை வாங்கிக் கொடுத்துவிட்டு, ஓ பன்னீர் செல்வம் செட்டில் ஆக நினைத்துக் கொண்டிருக்கிறார்.

OPS, EPS,

கிணற்றை விட்டுக் கொடுக்காத ஓபிஎஸ்

ஒரு சட்டமன்ற உறுப்பினராக இருக்கும் ஓ பன்னீர் செல்வம், ஒரு கிணற்றைக் கூட மக்களுக்காக விட்டுக் கொடுக்கவில்லை. மக்கள் போராட்டம் நடத்தியும், ஊடகங்களில் செய்தி வெளிவந்த பின்னரும் தான், இது குறித்து ஏததோ நடப்பது போல தோன்றுகிறது. இப்படி ஒரு எண்ணம் கொண்ட ஓ பன்னீர் செல்வம், எப்படி தர்மயுத்தம் என கூறிக் கொண்டு பிரிந்து சென்றார் என்பது தெரியவில்வை.

நம்பிக்கையில்லா தீர்மானம்

கூவத்தூரில் இருந்த போது, முதலமைச்சராக எடப்பாடி பழனிசாமியை தேர்ந்தெடுத்தது சசிகலா. சட்டமன்றத்தில் நடைபெற்ற வாக்கெடுப்பின் போது எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக வாக்களித்த துரோகி தான் ஓ பன்னீர்செல்வம். அதுமட்டுமல்லாமல், திமுக சொல்வதன்படி தான் ஓபிஎஸ்-ன் நடவடிக்கை இருந்தது. ஆர்.கே நகர் இடைத்தேர்தலையொட்டி, தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்து அதிமுக சின்னமான இரட்டை இலையை முடக்குதல் உள்ளிட்ட பல்வேறு துரோகங்களை ஓபிஎஸ் செய்துவிட்டார்.

ஓபிஎஸ் மிரட்டல் விடுத்தார்

கூவத்தூரில் சட்டமன்ற உறுப்பினர்கள் இருந்தபோது, ஓ பன்னீர் செல்வம் ஐடி குழுவை வைத்திருந்தார். அவர்கள் மூலமாக வெளிநாட்டு நம்பர்களில் இருந்து எங்களுக்கு தினமும் மிரட்டல் வந்தன. தற்போது, ஓபிஎஸ் அணியில் இருந்து ஆறுக்குட்டி, பிரிந்து வந்துவிட்டார்.

மக்களை சந்தித்துவிட்டா முடிவு எடுத்தார்?

கூவத்தூரில் இருந்த போது எங்களை மக்களை சந்தியுங்கள் என்று கூறிவந்த ஓ பன்னீர் செல்வம் அணியிர், தற்போது மக்களை சந்தித்துவிட்டா எடப்பாடி அணியுடன் இணைய திட்டமிட்டுள்ளனர்? இந்த கட்சியை காப்பாற்றுவதற்கு டிடிவி திகனரன் இருக்கிறார் என்று தொண்டர்கள் முடிவு செய்துவிட்டார்கள். இதனை யாரலும் செய்ய முடியாது.

publive-image

ஜெயலலிதா மரணத்தில் நீதி விசாரணை... வேதா இல்லம் குறித்து ?

ஜெயலலிதாவின் மரணத்தில் நீதி விசாரணை வைக்க வேண்டும் என்பதை நாங்கள் வரவேற்கிறோம். இந்த விசாரணைக்கு ஓய்வுபெற்ற நீதிபதியை அமர்த்தாமல், தற்போது பணிபுரிந்து வரும் மூத்த நீதிபதிகளை அமர்த்த வேண்டும்.

ஆர்.கே நகர் தொகுதியில் ஜெயலலிதாவின் பிறந்தநாள் கூட்டம் நடைபெற்றது. அந்த கூட்டத்தில் நீதி விசாரணை ஏன் கூடாது என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசினார். அது தொடர்பான வீடியோவும் இருக்கிறது. ஆனால், தற்போது, ஜெயலலிதா மரணத்தில் நீதி விசாரணை நடைபெறும் என்று அறிவித்திருக்கிறார். திடீரென, நீதி விசாரணை ஏன் வேண்டும் என்பதை அவர் தெரிவிக்க வேண்டும்.

பள்ளி மாணவர்களையும், கல்லூரி மாணவர்களை அழைத்து வந்து கட்சி நடத்துகின்றார்கள். மாணவர்கள் படிக்கும்போது, அதனை கெடுக்கும் வகையில் நலத்திட்டம் என்ற பெயரில் கூட்டத்திற்கு அழைத்து வருகிறார்கள்.

புகார் அளிப்பேன்

ஜெயலலிதா, சசிகலா, இளவசரசி ஆகியோருக்கு எதிரான நடைபெற்ற வழக்கில், அவர்களின் முகவரி எல்லாம் வேதா இல்லம் என்று தானே கூறப்பட்டுள்ளது. தற்போதைய நிலையில், சசிகலா மற்றும் இளவரசி ஆகியோர் சிறையில் இருக்கின்றனர். அதோடு மட்டுமல்லாமல், அந்த இல்லத்திற்கு வாரிசுகள் இரண்டு பேர் இருக்கின்றனர்.

சிறையில் இருப்பவர்களின், இருப்பிடமாக வேதா இல்லம் குறிப்பிடப்பட்டுள்ள நிலையில், அதிகாரிகள் எல்லாம் வேதா இல்லாத்தில் ஆய்வு செய்வது என்பது முறையாக இருக்காது. அப்படி நடந்தால், அது தொடர்பாக நான் காவல்துறையில் புகார் அளிப்பேன்.

அனுமதி கேட்க வேண்டும்

வேதா இல்லத்தை, அரசு நினைவிடமாக்க நான் தவறு என்று கூறவில்லை. அதற்கு முன்பாக வாரிசு தாரர்களிடம் அதற்கு அனுமதி கேட்க வேண்டும். அங்கு இருப்பவர்களை அப்புறப்படுத்த சட்டத்தில் இடம் இருக்கிறதா?

அரசு நினைத்தால், வாடகை வீட்டில் இருப்பவர்களை காலி செய்துவிட முடியுமா? சசிகலாவும், இளவரசியும் வேதா இல்லத்தை காலி செய்துவிட்டா? சிறை சென்றனர். அவர்களின் உடைமைகள் வேதா இல்லத்தில் இருகின்றன. கட்டபஞ்சாயத்து நடத்துவது போல அரசு செயல்படக் கூடாது. வேதா இல்லத்தில் இருந்து ஒரு செருப்பு காணாமல் போனால் கூட நாங்கள் விட மாட்டோம். வேதா இல்லத்தை காலி செய்ய வேண்டும் என்றால், அவர்கள் அதனை செய்து குடுப்பார்கள். ஆனால், நீங்கள் அதற்கு கேட்க வேண்டும் அல்லவா.

மோசடி குழு

ஏற்கெனவே, மோசடி வேலையின் மூலமாக டிடிவி தினகரனை கட்சியில் இருந்து நீக்குவதாக தீர்மானம் நிறைவேற்றினார்கள். அதுபோல, தற்போது மோசடி குழுவை உருவாக்கியுள்ளனர். இரண்டு முறை முதமைச்சராக இருந்த ஓ பன்னீர் செல்வம், பொருளாளர் பதவியிலும் இருந்தார். ஆனால், 5-வது இடத்தில் இருக்கும் எடப்பாடி பழனிசாமியுடன், அணிகள் இணைவதாக தெரிவிக்கிறார். இதன் மூலம் தெரிவது என்னவென்றால், துபாயில் அவருக்கு கிடைக்க வேண்டிது கிடைத்து விட்டது. ஆதாயத்திற்காகவே இந்த அணிகள் இணைப்பு நடைபெறுகின்றன. தொண்டர்கள் அவர்களிடம் இல்லை. அரசு ஊழல் செய்வதாக கூறிய ஓ.பி.ஸ், அதில் பங்குபோடவே அணிகள் இணைப்பு என்ற பெயரில் ஒன்றிணைகிறார்.

ஸ்லீப்பர் செல்” கொடுத்த தகவல்

டிடிவி தினகரன் கூறியது போல அந்த அணியில் எங்களுக்கு ஸ்லீப்பர் செல் இருக்கின்றனர். அவர்கள் கொடுத்த தவலின்படி, அடுத்ததாக சசிகலாவை பொதுச்செயலாளர் பதவியில் இருந்து நீக்க திட்டமிட்டுள்ளனர். எங்கள் கூட்டத்திற்கு வருகை தராமல், தொலைபேசி மூலமாக ஆதரவு தராமலும் பல எம்.எல்.ஏ-க்கள் இருக்கின்றனர். எனவே, நாங்கள் என்ன செய்யப் போகிறோம் என்பதை பொறுத்திருந்து பாருங்கள்.

TTV Dinakaran

அம்மா உணவகம் செயல்படவில்லை

ஜெயலலிதாவால் ஆரம்பிக்கப்பட்ட அம்மா உணவகம் இப்போது சரிவர செயல்படவில்லை. பல விஷயங்ளை நாங்கள் வெளிப்படுத்துவோம், அதற்கான ஆதாரங்கள் எங்களிடம் உள்ளது. அவர்கள், ஜெயலலிதா ஆட்சியை நடத்தாமல், கொள்ளைக் கூட்டக் கூடரமாக செயல்படுகின்றனர்.

டிடிவி தினகரன் இருந்தால் ஊழல் நடக்காது

நாங்கள் இருந்தால், அவர்களை திருந்த வைத்துவிடுவோம். இதுபோன்று ஊழல் செய்ய அனுமதிக்க மாட்டோம். அதனால் தான் துணைப்பொதுச்செயலாளர் வேண்டாம் என அவர்கள் தெரிவித்தனர். டிடிவி தினகரன் இருந்தால் ஊழல் நடக்காது. அவர்களுடைய நடவடிக்கைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக டிடிவி தினகரன் செயல்பட்டதற்காக தான், டிடிவி தினகரனை ஒதுக்கினார்கள். அடுத்தது, சசிகலாவை ஒதுக்க திட்டமிட்டுள்ளனர் என்று வெற்றிவேல் கூறினார்.

Sasikala
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment