தி.மு.க-வில் இணைந்த ஓ.பி.எஸ் ஆதரவாளர் மனோஜ் பாண்டியன்: அ.தி.மு.க எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா

ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளரும், ஆலங்குளம் சட்டமன்றத் தொகுதி உறுப்பினருமான பி. எச். மனோஜ் பாண்டியன் இன்று தி.மு.க-வில் தன்னை இணைத்து கொண்டார்.

ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளரும், ஆலங்குளம் சட்டமன்றத் தொகுதி உறுப்பினருமான பி. எச். மனோஜ் பாண்டியன் இன்று தி.மு.க-வில் தன்னை இணைத்து கொண்டார்.

author-image
Nagalekshmi Rajasekar
New Update
manooj

ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளரும், ஆலங்குளம் சட்டமன்றத் தொகுதி உறுப்பினருமான பி. எச். மனோஜ் பாண்டியன் இன்று தி.மு.க தலைவரும் தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் தன்னை இணைத்துக் கொண்டார். இன்று மாலை அ.தி.மு.க எம்.எல்.ஏ பதவியை மனோஜ் பாண்டியன் ராஜினாமா செய்தார். அவர் தி.மு.க-வில் இணைந்துள்ளது அரசியல் வட்டாரத்தில் பேசுப்பொருளாகியுள்ளது. 

Advertisment

திமுகவில் இணைந்த ஆலங்குளம் அதிமுக எம்.எல்.ஏ மனோஜ் பாண்டியன் தனது பதவியை ராஜினாமா செய்தார். சட்டப்பேரவையில் சபாநாயகர் அப்பாவுவை இன்று மாலை நேரில் சந்தித்து ராஜினாமா கடிதத்தை வழங்கினார். 

தி.மு.க-வில் இணைந்த பின்னர் மனோஜ் பாண்டியன் பேசியதாவது, இன்று திராவிடக் கொள்கையை பாதுகாக்கின்ற தலைவராக, போராட்டக் கொள்கையை எங்கும் அடகு வைக்காத ஒரு தலைவராக, எவ்வளவு சோதனை வந்தாலும் முயற்சிகளைச் சிறப்பாக செய்யக்கூடிய தலைவராகப் பார்த்து சிந்தித்து எடுத்த தீர்க்கமான முடிவுதான் தற்போது தி.மு.க-வில் இணைந்துள்ளது என்றார்.

மேலும், அ.தி.மு.க-வை தோற்றுவித்த தலைவரான எம்.ஜி.ஆரும், அதன்பின்னால் கட்சியை வழி நடத்திய ஜெயலலிதாவும் எந்த சூழலிலும் கட்சியை எந்த கட்சிக்கும் அடகு வைக்கவில்லை. அ.தி.மு.க என்பது அவர்கள் காலத்தில் இருந்த மாதிரி இல்லை. வேறு ஒரு கட்சியை நம்பி தற்போது இருக்கக்கூடிய  சூழ்நிலையில் இருக்கிறது. கட்சிக்கான விதிகள், கொள்கைகளை காற்றில் பறக்கவிட்டு அ.தி.மு.க, பா.ஜ.க-வின் கிளைக் கழகமாக செயல்படக்கூடிய நிலைக்கு சென்று விட்டதாக அவர் விமர்சித்ததாக கூறப்படுகிறது.

Advertisment
Advertisements

யார் இந்த மனோஜ் பாண்டியன்?

மறைந்த அ.தி.மு.க-வின் முன்னாள் சபாநாயகர் பி.எச்.பாண்டியனின் மகனான மனோஜ் பாண்டியன் தற்போது திருநெல்வேலி ஆலங்குளம்  சட்டமன்ற தொகுதி அ.தி.மு.க எம்.எல்.ஏ-வாக இருந்தார்.  அடிப்படையில் வழக்கறிஞரான அவர், ஜெயலலிதா மறைவுக்குப் பின் அ.தி.மு.க இரண்டாக பிரிந்தபோது ஓ.பன்னீர்செல்வம் தரப்பு ஆதரவாளராக தொடர்ந்து வந்தார். கட்சியில் இருந்து நீக்கப்பட்ட பிறகும் ஓ.பி.எஸ் தரப்பில் தான் இருந்து வந்தார். எனினும் சசிகலாவை தீவிரமாக மனோஜ் பாண்டியன் எதிர்த்து வந்த நிலையில், சமீபத்தில் ஓ.பன்னீர்செல்வம் சசிகலாவை சந்தித்ததால் அதிருப்தியில் தி.மு.க-வில் இணைந்திருக்கலாம் என கூறப்படுகிறது.

P H Manoj Pandian Cm Mk Stalin

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: