Advertisment

டிடிவி தினகரன் அணியுடன் முதலமைச்சர் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்: தோப்பு வெங்கடாசலம்

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, டிடிவி தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ-க்களை அழைத்து பேச வேண்டும் என தோப்பு வெங்கடாசலம் தெரிவித்துள்ளார்.

author-image
Ganesh Raj
புதுப்பிக்கப்பட்டது
New Update
Tamil Nadu Chief Minister 'Edappadi' K Palaniswami

Chennai: Tamil Nadu Chief Minister 'Edappadi' K Palaniswami along with ministers during the swearing-in ceremony at Raj Bhavan in Chennai on Thursday. PTI Photo R Senthil Kumar(PTI2_16_2017_000191B)

அதிமுக ஆட்சி தொடர்ந்து நீடிக்க வேண்டும் என்பதை கருத்தில் கொண்டு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, டிடிவி தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ-க்களை அழைத்து பேச வேண்டும் என தோப்பு வெங்கடாசலம் தெரிவித்துள்ளார்.

Advertisment

ஜெயலலிதாவின் மறைவையடுத்து, அதிமுக குழப்பத்தில் தத்தளித்து வருகிறது. எடப்பாடி பழனிசாமி அணியுடன் ஓ பன்னிர் செல்வம் அணி இணைந்தவுடம் அதிமுக வலுபெறும் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், டிடிவி தினகரன் அணியினர் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை மாற்ற வேண்டும் என ஆளுநரை சந்தித்து மனு அளித்தனர். இதனால், எடப்பாடி பழனிசாமியால் சட்டமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிப்பது என்பது கேள்விக் குறியாகியுள்ளது.

இந்த நிலையில், டிடிவி திகரன் அணியில் இருந்த எம்.எல்.ஏ தோப்பு வெங்கடாசலம், ஈரோட்டில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறும்போது: ஜெயலலிதா நீண்ட நாட்கள் இந்த கட்சியை வழிநடத்துவார் என எதிர்பார்த்தோம். ஆனால், எதிர்பாராதவிதமாக அவர் தற்போது இல்லை.

ஒரு பெரிய இயகத்தில் ஒரு தலைவரின் மறைவினால், சில குழப்பங்கள் ஏற்படுவது என்பது சகஜமான ஒன்றுதான். எம்.ஜி.ஆர்-ன் மறைவிற்கு பின்னர் அதிமுக பிளவுட்டது. அப்போது, பிளவுபட்ட இயக்கத்தை ஒன்று சேர்த்த பெருமை ஜெயலலிதாவையே சேரும்.

நாடாளுமன்றத்திலே இந்தியாவின் 3-வது பெரும் இயக்கமாக அதிமுக இருக்கிறது.

ஜெயலலிதா மறையும் முன்னர், அவர் கலந்து கொண்ட சட்டமன்ற கூட்டத்தொடரில் பேசும்போது, நான் இருந்தாலும், இல்லாவிட்டாலும், எனக்கு பின்னால் நூறாண்டுகாலம் அதிமுக தமிழகத்தில் ஆட்சிப் பொறுப்பில் இருக்கும் என்று தெரிவித்திருந்தார். அதன்படியே, எங்களின் எண்ணமும் இருந்து வருகிறது.

டிடிவி தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ-க்கள் 19 பேர் ஆளுநரிடம் மனு கொடுத்துள்ளனர். அவர்கள் தான் கூவத்தூரில் இருந்தபோது அதிமுக ஆட்சி தொடர வேண்டும் என்று ஆதரவு அளித்தவர்கள். ஆகவே அவர்கள் என்ன நோக்கத்தோடு அந்த மனுவை கொடுத்திருக்கார்கள் என்பதை பார்க்க வேண்டும். இந்த விவகாரத்தில் முதலமைச்சர் பேச்சுவார்த்தை நடத்தும் நிலை வந்துள்ளது.

135 எம்.எல்.ஏ-க்களுடன் ஜெயலலிதா ஆட்சி அமைத்தார். இதனிடையே அவரது மறைவிக்கு பின்னர், அதிமுக மூன்று அணிகளாக பிரிந்து செயல்பட வேண்டிய நிலை இருந்தது. எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ பன்னீர்செல்வம் அணிகள் தற்போது இணைந்துவிட்டது என்பது மகிழ்ச்சியான விஷயம்.

முன்னதாக அமைச்சர்கள் குறிப்பிட்டுப்பேசும்போது, அதிமுக என்பது ஒரே குடும்பம் என்றும், அண்ணன் தம்பிகளிடையேயான பிரச்சனை என்றும் தெரிவித்திருந்தனர். தற்போது இந்த ஆட்சி இக்கட்டான நிலையில் இருந்து கொண்டிருக்கிறது. தற்போதைய நிலையில், அதிமுக ஆட்சி தொடர வேண்டும்.

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியும், துணை முதலமைச்சர் ஓ பன்னீர் செல்வமும் அரசியலில் நீண்ட அனுபவம் பெற்றவர்கள். இப்போது பொறுப்பில் யார் இருக்கிறார்கள் என்பது பிரச்சனையில்லை. தற்போது இந்த ஆட்சி அறுதிப் பெரும்பான்மையை பெற வேண்டும். அவ்வாறு பெற வேண்டுமானால், முதலமைச்சர் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று கூறினார்.

Sasikala
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment