தமிழக மகிளா காங்கிரஸ் புதிய தலைவர்: வழக்கறிஞர் சுதா நியமனம்

வழக்கறிஞர் சுதா ராமகிருஷ்ணன் தமிழ்நாடு மகளிர் காங்கிரஸ் தலைவராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். முன்னாள் முதலவர் காமராஜரின் உறவினரும் காங்கிரஸ் கட்சியில் இணைய உள்ளதாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி அறிவித்துள்ளது.

By: Updated: September 14, 2020, 12:14:07 PM

வழக்கறிஞர் சுதா ராமகிருஷ்ணன் தமிழ்நாடு மகளிர் காங்கிரஸ் தலைவராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். முன்னாள் முதலவர் காமராஜரின் உறவினரும் காங்கிரஸ் கட்சியில் இணைய உள்ளதாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி அறிவித்துள்ளது.

காங்கிரஸ் கட்சி அண்மையில் அகில இந்திய பொதுச் செயலாளர்கள் மற்றும் மாநிலங்களுக்கான காங்கிரஸ் புதிய மேலிட பொறுப்பாளர்கள் அறிவிக்கப்பட்டனர்.

இந்த நிலையில், வழக்கறிஞர் சுதா ராமகிருஷ்ணன் தமிழ்நாடு மகளிர் காங்கிரஸ் தலைவராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதையடுத்து அவர், சென்னை சத்தியமூர்த்தி பவனில் மகளிர் காங்கிரஸ் தலைவராக திங்கள்கிழமை பொறுப்பேற்றுக்கொண்டார் என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தெரிவித்துள்ளது.

அதே போல, முன்னாள் முதல்வர் காமராஜரின் உறவினர் கமலிகா, ஓய்வுபெற்ற போலீஸ் அதிகாரியும் ராஜீவ் காந்தி படுகொலையின்போது காயமடைந்து உயிர் பிழைத்தவருமான அனுசுயா, மற்றொரு ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரி ஜே சிவக்குமார் ஆகியோர் காங்கிரஸ் கட்சியில் இணைவார்கள் என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தெரிவித்துள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the Tamilnadu News by following us on Twitter and Facebook

Web Title:Advocate sudha ramakrishnan take charge as state president of tamil nadu mahila congress

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

இதைப் பாருங்க!
X