முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் 117 எம்.எல்.ஏ-க்கள் கலந்து கொண்டதாக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
பரபரப்பான அரசியல் சூல்நிலையில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ பன்னீர் செல்வம் தலைமையில் அதிமுக ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு பின்னர் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறும்போது: முத்தான, சத்தான 4 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. கழக சட்டவிதிகள், உட்பிரிவு 5-ன்படி, டிடிவி தினகரன் மற்றும் அவர்களால் நியமனம் செய்யப்பட்ட பொறுப்புகள் அனைத்துமே செல்லாது.
எனவே, ஜெயலலிதாவால் நிகமிக்கப்பட்ட பொறுப்பாளர்கள், தலைமைக் கழக நிர்வாகிகள் அனைவரும் இணைந்து தொடர்ந்து கழகத்தை நடத்துவார்கள். பொதுக்குழு, செயற்குழு கூட்டம் கூட்டப்பட வேண்டும் என்ற தீர்மானம் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது. இது தொடர்பான தேதி, இடம் விரைவில் அறிவிக்கப்படும். அதிமுக-வின் நாளேடான நமது எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயா தொலைக்காட்சி ஆகிய இரண்டையும் மீட்க வேண்டும் என்ற தீர்மானமும் முன்மொழியப்பட்டது. பெரும்பான்மையான சட்டமன்ற உறுப்பினர்கள் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டனர் என்று தெரிவித்தார்.
எத்தனை எம்.எல்.ஏ-க்கள் கலந்து கொண்டனர் என்று குறிப்பிட்டு கேட்டபோது, 117 எம்.எல்.ஏ-க்கள் கலந்து கொண்டனர் என்று தெரிவித்தார்.
அதிமுக ஆலோசனை கூட்டத்தில் நடந்தது என்ன? படிப்பதற்கு இங்கே க்ளிக் செய்யவும்