18 எம்.எல்.ஏ-க்கள் தகுதி நீக்கம் எதிரான வழக்கு... வரும் 9-ந் தேதிக்கு ஒத்திவைத்தது ஐகோர்ட்

முதலமைச்சர் மீது நம்பிக்கை இல்லை என கூறினோமே தவிர, கட்சி மீது நம்பிக்கை இல்லை என கூறவில்லை என டிடிவி தினகரன் தரப்பு வாதம்

முதலமைச்சர் மீது நம்பிக்கை இல்லை என கூறினோமே தவிர, கட்சி மீது நம்பிக்கை இல்லை என கூறவில்லை என டிடிவி தினகரன் தரப்பு வாதம்

author-image
Ganesh Raj
புதுப்பிக்கப்பட்டது
New Update
AIADMK, TTV Dinakran, Speaker Dhanapal, 18MLA's disqualification, madras high court,

முதல்வர் மீது நம்பிக்கை இல்லை என கூறினோமே தவிர, கட்சி மீது நம்பிக்கை இல்லை என கூறவில்லை என டிடிவி தினகரன் தரப்பு வழக்கறிஞர் வாதாடினார்.

Advertisment

தமிழக அரசியலின் அடுத்தகட்ட நகர்வுகளை சென்னை உயர்நீதிமன்றத்தில் உள்ள குறிப்பிட்ட சில வழக்குகளே நிர்ணயம் செய்ய இருக்கின்றன. அவற்றில் முதல் வழக்கு, சட்டமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தக்கோரி சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் தொடர்ந்த வழக்கு! அடுத்து, டிடிவி தினகரன் அணி எம்.எல்.ஏ.க்களான தங்க தமிழ்செல்வன், வெற்றிவேல் உள்ளிட்ட 18 பேர் தகுதி நீக்கம் செய்யப்பட்டதை எதிர்த்து சம்பந்தப்பட்ட எம்.எல்.ஏ-க்கள் தொடர்ந்த வழக்கு!

3-வதாக, கடந்த பிப்ரவரி 18-ம் தேதி எடப்பாடி அரசு மீது நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் எதிர்த்து வாக்களித்த ஓ.பன்னீர்செல்வம் உள்பட 12 எம்.எல்.ஏ.க்கள் மீது கட்சித் தாவல் தடை சட்டப்படி நடவடிக்கை எடுக்கக்கோரி திமுக கொறடா சக்கரபாணி தொடர்ந்த வழக்கு! 18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கு, நம்பிக்கை வாக்கெடுப்புக்கு உத்தரவிடக் கோரிய வழக்கு ஆகியவற்றை ஏற்கனவே விசாரித்த நீதிபதி துரைசாமி, அக்டோபர் 4-ம் தேதி வரை நம்பிக்கை வாக்கெடுப்புக்கு தடை விதித்து உத்தரவிட்டிருந்தார். 18 எம்.எல்.ஏ.க்களின் தொகுதிகளிலும் தேர்தல் நடைமுறைகளை தொடங்கவும் தடை விதித்திருந்தார்.

நீதிமன்ற நடைமுறைகளின்படி நீதிபதி துரைசாமி, தற்போது வேறு வழக்குகளுக்கு மாறியிருக்கிறார். எனவே இந்த வழக்குகள் நீதிபதி ரவிச்சந்திரபாபு முன்னிலையில் இன்று (அக். 4) விசாரணைக்கு வந்தது. அதன் live updates

Advertisment
Advertisements

3:40 இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி ரவிச்சந்திர பாபு, இந்த வழக்கை வரும் 9-ம் தேதி ஒத்திவைத்தார். தகுதி நீக்க வழக்கில் மறு உத்தரவு வரும் வரை நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தக்கூடாது என்றும், 9- தேதியும் இந்த வழக்கில் வாதம் தொடரும் என்றும் சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

3:10 நடவடிக்கை குறித்த அறிவிப்பை இறுதியாக தெரிவிப்பதற்கு, அவர்கள் மூன்றாம் தரப்பினர் அல்ல. ஒழுங்கு நடவடிக்கை எடுப்பதென்றால், முதலில் அது தொடர்பாக சம்பந்தப்பட்ட எம்.எல்.ஏ-க்களிடம் தான் முதலில் தெரிவித்திருக்க வேண்டும். எங்களது

கருத்தை முழுமையாக தெரிவிக்க வாய்ப்ப்பு வழங்கப்படவில்லை. எங்கள் மீது புகார் அளித்தவர்களிடம் குறுக்க விசாரணை நடத்தவும் வாய்ப்பு வழங்கப்படவில்லை என டிடிவி தினகரன் தரப்பு வழக்கறிஞர் வாதாடினார்.

2: 45 டிடிவி தரப்பு: தகுதி நீக்கம் குறித்த அறிவிப்பு தபால் மூலமே அனுப்பப்ட்டது. தகுதி நீக்கம் குறித்த நகலானது எங்குள்ளு 2 நாட்களுக்கு பின்னரே தெரிவிக்கப்பட்டது. இது தொடர்பான நகலை எங்களுக்கு அனுப்பும் முன்னர், பத்திரிக்கைகளிலும், அரசிதழிலும் வெளியிட்டுள்ளது என்பது மோசமான செயல்பாடாகும். சபாநாயகர் என்பவர் சட்டமன்றத்தை காக்கும் நபராக செயல்பட வேண்டும்.

2:20 நம்பிக்கை வாக்கெடுப்பு தொடர்பான வழக்கை முதலில் விசாரணை செய்ய வேண்டும் என்று ஆளுநர் தரப்பு வழக்கறிஞர் விடுத்த கோரிக்கை நிராகரிக்கப்பட்டது. இதனால், ஆளுநர் தரப்பு வழக்கறிஞர் வெளியேறினார்.

2:15 சென்னை உயர் நீதிமன்றத்தில் உணவு இடைவேளைக்கு பின்னர் வழக்கு விசாரணை மீண்டும் தொடங்கியது. தகுதி நீக்க வழக்கும், 12 எம்.எல்.ஏ-க்களை தகுதி நீக்கக் கோரிய வழக்கும் தான் முதலில் விசாரணை செய்யப்படும் என்றும், நம்பிக்கை வாக்கெடுப்பு கோரிய மு.க ஸ்டாலின் தொடர்ந்த வழக்கு பின்னர் விசாரிக்கப்படும் என்று சென்னை உயர் நீதிமன்றம் அறிவிப்பு

12:40 பெயர், கையெழுத்து இல்லாத ஆவணம் மூலம் கொறடா புகாரில் தகுதி நீக்கம் நடந்துள்ளது என்றும், கொறடா கொடுத்த புகாரின் நகலை எங்களிடம் காண்பிக்கப்டவில்லை என்று டிடிவி தினகரன் தரப்பில் வாதிடப்பட்ட நிலையில், அப்படி கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை என கொறடா தரப்பில் வாதம்.

12:30 நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்று மு.க ஸ்டாலின் தொடர்ந்திருந்த வழக்கில் கடந்த முறை ஆஜரான வழக்கறிஞர் கபில் சிபில், இந்த முறை ஆஜராகவில்லை. அவருக்கு பதிலாக மாற்று வழக்கறிஞர் வந்திருந்தார்.

12:20 டிடிவி தரப்பு: முதலமைச்சர் மீது தான் நம்பிக்கையை இழந்தோமே தவிர, ஆட்சி மீது அல்ல. ஆட்சிக்கு எதிராக வாக்களித்த ஓபிஎஸ் தரப்பிற்கு நோட்டீஸ் கூட அனுப்பப்படவில்லை. சபாநாயகர் நடுநிலை தவறிவிட்டார்.தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 எம்.எல்.ஏ-க்களும் தற்போது வரை அதிமுக-வில் தான் உள்ளனர்.4 முறை சபாநாயகர் நோட்டீஸ் அனுப்பிய நிலையில், அவற்றிற்கு ஆட்சேபம் தெரிவித்தோம். ஆனாலும் நடவடிக்கை எடுக்கப்பட்டது.

12:10  அரசு தரப்பில் வழக்கறிஞர் முகுல் ரோத்தஹி வாதிடுகையில், டிடிவி தினரகன் ஆதரவு எம்.எல்.ஏ-க்கள் 18 பேரும் இணைந்து ஆட்சியை கவிழ்க்க திட்டமிட்டனர். ஆட்சியைக் கவிழ்ப்போம் என டிடிவி தினகரன், தங்க தமிழ்செல்வன், வெற்றிவேல் ஆகியோர் வெளிப்படையாக பேசினர் என்றார்.

12:00 டிடிவி தினகரன் தரப்பு வழக்கறிஞர் அபிஷேக் சிங்வி வாதிடுகையில், கொறடா கொடுத்த புகாரில் நடவடிக்கை இல்லாமல், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கொடுத்த கடிதத்தின் பேரில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சபாநாயகர் நடுநிலையுடன் செயல்படவில்லை. தகுதி நீக்கத்திற்கான உத்தரவு எங்களுக்கு வழஙகப்படாமல் முதலில் ஊடகங்களுக்கு வழங்கப்பட்டது. 18 எம்.எல்.ஏ வழக்கை முதலில் விசாரணைக்கு எடுத்துக் கொண்டு நாளைக்கே உத்தரவிட வேண்டும் என்று வாதிட்டார்.

11:45 :  நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என திமுக சார்பில் மு.க ஸ்டாலின் வழக்கு தொடர்ந்தார். இதனிடையே, 18 எம்.எல்.ஏ-க்கள் தகுதி நீக்கத்திற்கு எதிரான வழக்கும் நீதிமன்றத்தில் உள்ளது. இதனால் எந்த வழக்கை முதலில் விசாரிப்பது என்ற குழப்பம் நீடித்தது. இந்த வழக்குகள் ஒன்றுக்கொன்று தொடர்பு கொண்டதால் இந்த குழப்பம் ஏற்பட்டது. சபாநாயகர் தரப்பில் ஆஜரான முன்னாள் அட்டர்னி ஜெனரல் முகுல் ரோத்தஹி, ‘ஸ்டாலின் முதலில் வழக்கு தொடர்ந்ததால், அதையே முதலில் விசாரிக்கலாம்’ என்றார். ஆனால் நீதிபதி, டிடிவி தரப்பு எம்.எல்.ஏ.க்கள் 18 பேர் தகுதி நீக்க வழக்கையே முதலில் எடுத்துக்கொண்டார்.

காலை 11.30 : ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட 12 எம்.எல்.ஏ.க்கள் மீது கட்சித் தாவல் தடை சட்டப்படி நடவடிக்கை கோரி திமுக கொறடா சக்கரபாணி தொடர்ந்த வழக்கை அக்டோபர் 12-ம் தேதிக்கு நீதிபதி ரவிச்சந்திரபாபு தள்ளி வைத்தார். அதற்குள் இந்த வழக்கில் பதில் மனு தாக்கல் செய்யும்படி சபாநாயகர் தனபால், சட்டமன்ற செயலாளர் உள்ளிட்டவர்களுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிடப்பட்டது.

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: