அதிமுக அணிகள் இணைப்பு : ஆட்சியை கவிழ்க்க நினைத்தவர்களுக்கு சம்மட்டி அடி – எடப்பாடி பழனிசாமி

அதிமுக அணிகளின் இணைப்பு இந்த ஆட்சியை கவிழ்க்க நினைத்தவர்களுக்கு சம்மட்டி அடி என முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.

By: August 21, 2017, 7:49:19 PM

அதிமுக அணிகளின் இணைப்பு, இந்த ஆட்சியை கவிழ்க்க நினைத்தவர்களுக்கு சம்மட்டி அடி என முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.

அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற இரு அணிகளின் இணைப்பு நிகழ்ச்சியில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது..

“எம்.ஜி.ஆர். மற்றும் அம்மாவின் ஆத்மாக்கள் நிறைவு பெறும் வகையில் நாம் இணைந்துள்ளோம். அம்மாவின் கனவு நனவாக வேண்டும் என்ற உன்னத நோக்கத்தோடு இணைந்துள்ளோம். பிரச்சனைகளுக்கு முற்றுப் புள்ளி வைக்கும் வகையில் இந்த இணைப்பு நடந்திருக்கிறது. இணைப்புக்கு ஒத்துழைப்பு அளித்த அனைவருக்கும் நன்றி. அ.தி.மு.க பிரிந்திருக்க வேண்டும் என்று நினைத்தவர்களுக்கு சம்மட்டி அடி கொடுக்கப்பட்டுள்ளது.

அதிமுக அணிகள் இணைப்பு நிகழ்ச்சியில் ஓ.பன்னீர்செல்வம் பேசியபோது..

அதிமுக இயக்கத்துக்கு ஓ.பன்னீர்செல்வம் ஒருங்கிணைப்பாளராகவும், இணை ஒருங்கிணைப்பாளராக நானும் துணை ஒருங்கிணைப்பாளர்களாக கே.பி.முனுசாமி, வைத்திலிங்கம் இருப்பார்கள். வழிகாட்டும் குழு அமைக்கப்பட்டு அதில் 11பேர் இடம் பெறுவார்கள்.” இவ்வாறு எடப்பாடி பழனிசாமி பேசினார்.

ஒருங்கிணைப்பாளராக தேர்வு செய்யப்பட்ட ஓ.பன்னீர்செல்வம் பேசுகையில், “ஒரு தாய் மக்களான நாங்கள் சில கருத்து வேறுபாடுகளை கடந்து இணைந்திருக்கிறோம். 45 ஆண்டுகளாக இந்த இயக்கத்தை தாங்கிப் பிடித்த மக்களுக்கும் தொண்டர்களுக்கும் இது மகிழ்ச்சியை கொடுத்திருக்கிறது. அதுவே எனது இதயத்தில் உள்ள எண்ணமும்!” இவ்வாறு ஓ.பன்னீர்செல்வம் பேசினார்.

அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன், துணை ஒருங்கிணைப்பாளரான கே.பி.முனுசாமி ஆகியோர் பேசுகையில், இரு அணிகளையும் ஒருங்கிணைக்க முயற்சி எடுத்தவர்களுக்கு நன்றி தெரிவித்தனர்.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the Tamilnadu News by following us on Twitter and Facebook

Web Title:Aiadmk factions merger big defeat for who want to dissolve the government cm edappadi palanisamy

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Advertisement

இதைப் பாருங்க!
X