Advertisment

அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்னென்ன?

சசிகலாவின் பொதுச்செயலாளர் பதவி ரத்து செய்து முக்கிய தீர்மானம் நிறைவேற்றம்

author-image
Ganesh Raj
புதுப்பிக்கப்பட்டது
New Update
VK Sasikala Parole completed, to go Bengaluru Jail

VK Sasikala Parole completed, to go Bengaluru Jail

பரபரப்பான அரசியல் சூழலில் அதிமுக பொதுக்கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் குறிப்பிடும்படியாக சசிகலாவின் பொதுச்செயலாளர் பதவி ரத்து செய்து முக்கிய தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

Advertisment

இன்று, காலை அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற இந்த பொதுக்கூட்டத்தில் முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. தீர்மானங்கள் குறித்த விபரம் பின்வருமாறு:

1.அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் யாராலும் அசைச்ச முடியாத எஃகுக் கோட்டையாகும். இந்த இயக்கம் தமிழ் மக்களுக்கு ஆற்ற வேண்டிய பணிகள் ஏராளம். எனவே எப்பொழுதும், இயக்கத்திற்காக ஒன்றுபட்டிருப்போம் என்று உறுதி ஏற்று ஓரணியாக திரண்டமைக்கு அங்கீகாரமும், பாராட்டும், நன்றியும் இரட்டை இலை சின்னத்தை மீட்டெடுத்து எதிர்வரும் தேர்தலில் அனைத்திலும் மகத்தான வெற்றி காண உழைத்திட சூளுரை.

2 ஜெயலலிதாவால் கழகத்தின் பல்வேறு பொறுப்புகளுக்கு நியமிக்கப்பட்டவர்களும், அமைப்புத் தேர்தல் வழியாக நியமிக்கப்பட்டு, ஜெயலலிதாவால் அங்கீகரிக்கப்பட்ட பல்வேறு கழக நிர்வாகிகளும் அவரவர் பொறுப்புகளில் தொடர்ந்து செயல்பட ஒப்புதல்.

3.எம்.ஜி.ஆர் பிறந்தநாள் நூற்றாண்டை சிறப்பாக கொண்டாடிவரும் தமிழக அரசுக்கு பாராட்டும், நன்றியும்.

4.ஜெயலலிதாவின் நினைவிடத்தில் மணிமண்டபம் அமைக்க நடவடிக்கை மேற்கொண்டுள்ள தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கும், தமிழக அரசுக்கும் பாராட்டும, நன்றியும்.

5. புயல், வெள்ள பாதிப்புகளில் இருந்தும், வரலாறு கண்டிராத வறட்சியில் இருந்தும் தமிழகத்தை காப்பாற்றி அனைத்து வகையான நிவாரணப் பணிகளையும் சிறப்புற மேற்கொண்டு, ஜெயலலிதா வகுத்தளித்த வளர்ச்சிப் பாதையில் உறுதியாக நடைபோட்டு வரும் தமிழக அரசுக்கு பாராட்டும், நன்றியும்.

6. ஜெயலலிதாவின் மறைவிற்கு பின்னர் மாற்றாருக்கும், எதிரிகளுக்கும் இடம் தராமல் கழகத்தையும், ஜெயலலிதா அமைத்த கழக அரசையும் கட்டுக்கோப்பாக காப்பாற்றி வழி நடத்திச் செல்லும் கழக நிர்வாகிகளுக்குப் பாராட்டு.

7.ஜெயலலிதா வகித்து வந்த பொதுச்செயலாளர் பதவியில் இன்னொருவர் இருந்து செயல்படுவது என்பதால் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் பொதுச்செயலாளர் என்ற பொறுப்பு ரத்து.

8. ஜெயலலிதாவின் மறைவு தந்த அதிர்ச்சியும், கவலையும் மிகுந்த சூழ்நிலையில் கழகத்தின் அன்றாட நடவடிக்கைகளுக்கென நியமிக்கப்பட்ட தற்காலிகப் பொதுச்செயலாளர் பதவியும், அவர் அறிவித்த நியமனங்களும் ரத்து.

9.ஜெயலலிதாவின் புகழுக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையிலும், கழகத்தின் கட்டுப்பாட்டை சீர்குலைக்கும் நேக்கத்தில் டிடிவி தினகரன் அறிவிக்கும் நியமனங்கள் செல்லாது.

10. ஜெயலலிதா விரும்பியவாறு கழகத்தை மக்கள் இயக்கமாகவும், தொண்டர்களின் மனம் அறிந்து செயல்படும் அரசியல் சக்தியாகவும் புதிய பதவிகளை ஏற்படுத்துதல்.

11. அதிமுக நிர்வாகப் பொறுப்புகளை ஏற்கும் ஒருங்கிணைப்பாளருக்கும், துணை ஒருங்கிணைப்பாளருக்கும் கழக நிர்வாக அதிகாரங்களை அளித்தல்.

12.அதிமுக-வின் சட்டதிட்ட விதிமுறைகளில் செய்யப்படும் மாற்றங்களும், திருத்தங்களும் கழகப் பொதுக்குழுவின் ஏகமனதாக ஒப்புதலைப் பெற்று ஏற்றுக் கொள்ளப்படுதல்.

சசிகலாவின் அதிமுக தற்காலிக பொதுச் செயலாளர் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளதால், அதிமுக-வில் அடுத்து என்ன நிகழும் என்ற பரபரப்பு எழுந்துள்ளது. டிடிவி தினகரன் இந்த ஆட்சியை முடிவுக்கு கொண்டு வர நாங்களும் தயாராகி விட்டோம் என்று தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Sasikala
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment