உண்மையை கூறினால் பலர் அவமானத்தை சந்திக்க நேரிடும்: எச்சரிக்கை விடுக்கும் டிடிவி தரப்பு எம்ல்ஏ

சசிகலா இல்லாவிட்டால் கட்சியும் இருந்திருக்காது, ஆட்சியும் இருந்திருக்காது என டிடிவி தரப்பு எம்எல்ஏ வெற்றிவேல் தெரிவித்துள்ளார்.

சென்னை அடையாறில் டிடிவி தினகரன் ஆதரவு எம்எல்ஏ வெற்றிவேல் செய்தியாளர்களிடம் கூறியதாவது: அரி எம்பி தன்னிச்சையான கருத்துகளை வெளியிட்டு வருகிறார். அவரைப் போல தன்னிச்சியான கருத்துகளை வெளியிடுபவர்களை முதல்வர் எடப்பாடி பழனிசாமி கண்டித்து வைக்க வேண்டும். அரி எம்.பி மீது நடவடிக்கை எடுக்க தாமதம் ஆகலாம், ஆனால் அவர் மீது கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்படும்.

சசிகலாவால் தான் இந்த கட்சி தற்போது இருக்கிறது. அவர் கூவத்தூர் அழைத்து செல்லாவிட்டால் ஆட்சியும் இருந்திருக்காது, கட்சியும் இருந்திருக்காது.

ஒரளவுக்கு தான் என்னால் பொறுமை காக்க முடியும். உண்மை சம்பவங்களை கூறத் தொடங்கினால் பலர் அவமானத்தை சந்திக்க நேரிடும். சசிகலா கட்டுப்பாட்டில் தான் கட்சி இன்னமும் இயங்குகிறது.

முதல்வர் எடப்பாடி பழனிசாமி எத்தனை நாட்கள் தான் நரசிம்மராவ் போல மௌனம் காப்பார் என தெரியவில்லை. நரசிம்மராவ் மௌனமாக இருந்ததால் தான் காங்கிரஸ் ஆட்சி கவிழ்ந்தது என்று கூறினார்.

×Close
×Close