Advertisment

அதிமுக பொதுக் குழுவுக்கு தடையில்லை: வெற்றிவேல் மேல்முறையீடு

அதிமுக பொதுக் குழுக் கூட்டதிற்கு தடை விதிக்க மறுப்பு தெரிவித்த சென்னை உயர் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து, எம்எல்ஏ வெற்றிவேல் மேல்முறையீடு செய்துள்ளார்.

author-image
manik prabhu
புதுப்பிக்கப்பட்டது
New Update
அதிமுக பொதுக் குழுவுக்கு தடையில்லை: வெற்றிவேல் மேல்முறையீடு

அதிமுக பொதுக் குழுக் கூட்டதிற்கு தடை விதிக்க மறுப்பு தெரிவித்து, டிடிவி ஆதரவு எம்எல்ஏ வெற்றிவேலுக்கு ரூ.1 லட்சம் அபராதம் விதித்த சென்னை உயர் நீதிமன்ற தனி நீதிபதியின் உத்தரவை எதிர்த்து டிடிவி தினகரன் ஆதரவு எம்எல்ஏ வெற்றிவேல் மேல்முறையீடு செய்துள்ளார்.

Advertisment

தமிழக முதல்வராகவும், அஇஅதிமுக பொதுச் செயலாளராக இருந்த ஜெயலலிதா கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 5 ஆம் தேதி மரணம் அடைந்தார். இதனை அடுத்து அஇஅதிமுகவில் உட்கட்சி பூசல் ஏற்பட்டது. ஜெயலலிதா மரணத்திற்கு பிறகு முதல்வராகப் இருந்த பன்னீர் செல்வம் தனது பதவியை ராஜினாமா செய்தார். மேலும் கட்சியில் இருந்தும் பன்னீர் செல்வம் நீக்கபட்டார். பின்னர் எடப்பாடி பழனிச்சாமி முதல்வராக பதவியேற்றார். பின்னர் பன்னீர் செல்வம் அணியுடன் ஏற்பட்ட உடன்படிக்கையின் படி எடப்பாடி பழனிச்சாமி, பன்னீர் செல்வம் அணியினர் கடந்த மாதம் இணைந்தனர்.

அதிகவின் இரு அணிகள் இணைந்த பிறகு அதிமுக பொதுக்குழு கூட்டம் செப்டம்பர் மாதம் 12 ஆம் தேதி ( நாளை ) நடைபெறும் என்று கடந்த ஆகஸ்ட் 28 ஆம் தேதி எடப்பாடி பழனிச்சாமி அறிவித்தார். அதன்படி அட்கட்சியின் அவைத்தலைவர் மதுசூதனன் தலைமையில் அதிமுக பொதுக்குழு, செயற்குழு கூட்டம் சென்னை அடுத்த வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு வெங்கடாசலபதி திருமண மண்டபத்தில் செப்டம்பர் மாதம் 12 ஆம் தேதி காலை 10.35 மணிக்கு நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டது. இந்தப் பொதுக்குழுவில் அதிமுக பொதுச் செயலாளர், துணை பொதுச் செயலாளர் விவகாரம் குறித்து முக்கிய முடிவெடுக்கப்படும் என்றும் கூறப்படுகிறது.

இந்நிலையில் பொதுக்குழு, செயற்குழுவுக்கு தடைகோரி டி.டி.வி தினகரன் ஆதரவாளரான வட சென்னை வடக்கு மாவட்ட செயலாளர், பொதுக்குழு உறுப்பினர் வெற்றிவேல் எம்.எல்.ஏ சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு அளித்தார். அதில், அஇஅதிமுக பொதுக்குழு மற்றும் செயற்குழுக் கூட்டத்தை கூட்டும் அதிகாரம் பொதுச் செயலாளரான வி.கே.சசிகலாவுக்கு மட்டுமே உள்ளது. கட்சியின் பொதுச் செயலாளரான சசிகலா எந்த பொதுக் குழுவுக்கோ அல்லது செயற்குழுவுக்கோ யாருக்கும் அழைப்பு விடுக்கவில்லை.

மேலும் தற்போது அனுப்பப்பட்ட பொதுக்குழு குறித்த கடிதத்தில் யாருடைய கையொப்பம் இல்லை எனவே செப்டம்பர் 12-ம் தேதி அதிமுகவின் செயற்குழு மற்றும் பொதுக்குழு நடத்தவுள்ளதாக சிலர் அறிவிப்பு வெளியிட்டு உள்ளனர். எனவே இது தொடர்பாக கடந்த மாதம் 28-ம் தேதி வெளியிடப்பட்ட அறிவிப்பாணை ரத்து செய்ய வேண்டும். மேலும் தேர்தல் ஆணையத்தில் அ.தி.மு.க யாருக்கு சொந்தம் என்ற விவகாரம் நிலுவையில் உள்ளது, இந்நிலையில் பொதுக்குழு நாளை (12.09.2017) நடைபெற உள்ளது. தேர்தல் ஆணையத்தில் அதிமுக யாருக்கு என்ற விவகாரம் நிலுவையில் உள்ளபோது பொதுக்குழு கூட்டுவது சட்ட விரோதம் எனவே பொதுகுழுவுக்கு தடைவிதிக்க வேண்டும் எனவும் கூறப்பட்டிருந்தது.

இந்த வழக்கு இன்று உயர்நீதிமன்ற நீதிபதி சி.வி. கார்த்திகேயன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, நீதிபதி ஏன் ஒரே ஒருவர் மட்டும் தடைகேட்டு வந்துள்ளார் என கேள்வி எழுப்பினார். அதற்கு மனுதாரர் தரப்பு மூத்த வழக்கறிஞர், அக்கட்சியின் உறுப்பினர் என்ற முறையில் தடைகேட்டு வந்துள்ளார் என கூறினார். அப்போது நீதிபதி, உங்கள் அணியும் பொதுக்குழுவில் கலந்து கொள்ளலாமே என கேட்டார் .அதற்கு மனுதாரர் தரப்பு வழக்கறிஞர், இந்த கூட்டம் விதிகளுக்கு எதிரானது என தெரிவித்தனர்.

அதற்கு நீதிபதி, அப்படி அனுப்பப்பட்ட கடிதம் விதிகளுக்கு எதிரானது என்றால், இந்த விவகாரம் தொடர்பாக தேர்தல் ஆணையத்தை அணுகலாமே ? என கேள்வி எழுப்பினார். மேலும், யாருடைய பெயரையும் குறிப்பிடாமல் பொதுக்குழுவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டால், நோட்டீஸ் அனுப்பினால் .நீங்கள் அதை நிராகரித்துவிட்டு வீட்டில் இருக்கலாமே என கருத்து தெரிவித்தார்.

இதுபோல சட்டமன்ற உறுப்பினர் வழக்கு தொடர வேண்டும் என்றால், அது முதலில் தலைமை நீதிபதி கவனத்திற்கு கொண்டு செல்ல வேண்டும் என்ற விதி உள்ளது, ஆனால் அது இந்த வழக்கில் கடைபிடிக்காமல், பொதுக்குழுவுக்கு தடை கோரி தனிப்பட்ட முறையிலேயே வெற்றிவேல் வழக்கு தொடர்ந்துள்ளார்.

அதேபோல் டி.டி.வி.தினகரன் ஆதரவாளராக செயல்படக்கூடிய மனுதாரர், இந்த வழக்கில் தினகரனையே 4 வது எதிர்மனுதாரராக சேர்த்துள்ளார். தனக்கு ஆதரவாக உள்ளவர்களை இதுபோல் எதிர்மனுதாரராக சேர்த்து விடுவது தற்போது வாடிக்கையாகிவிட்டது. இதுபோன்று செய்வது வழக்கு, விசாரணையின் முக்கிய கட்டத்தை எட்டும்போது அதை திசை திருப்பும் நோக்கமாகும். இந்த செயல் கண்டனத்துக்குரியது, இதுபோன்று உள்நோக்கம் கொண்ட செயல்களை நீதிமன்றம் ஒருபோதும் அனுமதிக்காது என நீதிபதி கண்டனம் தெரிவித்தார். பின்னர் நீதிபதி, மனுதாரர் வெற்றிவேல் விருப்பப்பட்டால் கூட்டத்தில் கலந்து கொள்ளலாம். அதேபோல கூட்டத்துக்கு செல்ல விருப்பமில்லாவிட்டால் அவர் கூட்டத்தை புறக்கணித்துவிட்டு, வீட்டிலேயே இருக்கலாம் என தெரிவித்தார்.

இதனையடுத்து நீதிபதி கார்த்திகேயன், நீதிமன்ற நேரத்தை வீண்டித்ததற்காக வழக்கை தொடுத்த சட்டமன்ற உறுப்பினர் வெற்றிவேலுக்கு ஒரு லட்ச ரூபாய் அபராதம் விதித்ததோடு மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக மேல்முறையீடு செய்ய வெற்றிவேல் தரப்பில் தலைமை நீதிபதியிடம் முறையீடு செய்யப்பட்டது. மேலும், அவசர வழக்காக விசாரணைக்கு எடுத்துக் கொள்ளவும் கோரப்பட்டது. இதனை ஏற்ற நீதிபதி, மேல்முறையீட்டை மனுவாக தாக்கல் செய்ய அனுமதி வழங்கினார். தொடர்ந்து, வெற்றிவேல் தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த மேல்முறையீட்டு வழக்கு நீதிபதிகள் ராஜீவ் சத்தோர், அப்துல் குத்தூஸ் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு இன்று மாலை விசாரனைக்கு வரவுள்ளது.

Ttv Dhinakaran
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment