டிடிவி தினகரன் குறித்து குட்டிக்கதை கூறிய அமைச்சர் ஜெயக்குமார்!

“ஊர் நிலை தெரிந்து உடும்பை தூக்கி தோளில் போட்டுக்கொண்டானாம் ஒருத்தன்” டிடிவி தினகரனை திருடன் என்கிறார் ஜெயக்குமார்

By: Updated: September 18, 2017, 09:28:50 AM

டிடிவி தினகரனை திருடன் என தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்தார். தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் நேற்று விமானம் மூலம் திருச்சிக்கு புறப்பட்டுச் சென்றார். சென்னை விமான நிலையத்தில் அவர் செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தார். அப்போது அவர் பேசியதாவது:

தேசிய சாரணர் இயக்க தலைவர் தேர்தலில் எச்.ராஜா படுதோல்வி அடைந்தது குறித்து?

தேசிய சாரணம் இயக்க தலைவர் பதவிக்கு எச்.ராஜா போட்டியிட்டார். தேர்தல் நடந்துமுடிந்து முடிவுகள் வெளியாது. அது தொடர்பாக நான் கருத்து கூற எதுவும் இல்லையே.

உங்கள் ஆட்சி விரைவில் கவிழ்ந்து விடும் என டிடிவி தினகரன் விடுத்துள்ள சவால் குறித்து?

தமிழகத்தில் ஒரு பழமொழி உண்டு. அது என்னவென்றால், “ஊர் நிலை தெரிந்து உடும்பை தூக்கி தோளில் போட்டுக்கொண்டானாம் ஒருத்தன்” என்பது தான்.

இந்த பழமொழிக்கு என்ன விளக்கம் என்றால், மதில் ஏறி திருட வந்தவனை மக்கள் பார்த்ததும், அந்த உடும்பைத் தூக்கி காட்டி நான் வித்தை காட்டத்தான் வந்தேன். திருட வரவில்லை. நான் திருடன் அல்ல என்று கூறுவானாம். அதுபோன்று தான் தற்போது டிடிவி தினகரன் செய்து கொண்டிருக்கின்றார்.

அப்படியானால் டிடிவி தினகரனை திருடன் என்கிறீர்களா?

ஆமாம், அதுதான் உண்மை என்று பதிலளித்தார்.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the Tamilnadu News by following us on Twitter and Facebook

Web Title:Aiadmk minister d jayakumar critisized that ttv dinakaran was a theft

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Advertisement

இதைப் பாருங்க!
X