சட்டமன்றத்தில் இருந்து டிடிவி தினகரன் ஆதரவு எம்எல்ஏ தங்க தமிழ்ச்செல்வன் வெளிநடப்பு!

ஆண்டிப்பட்டியில் ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்கப்படவில்லை என்றும், அது தொடர்பான கேள்விகேட்க சபாநாயகர் அனுமதி மறுத்தை கண்டித்து ஆளும் கட்சி எம்எல்ஏ- தங்க தமிழ்ச் செல்வன் சட்டமன்றத்தில் இருந்து வெளிநடப்பு செய்துள்ளார். அதிமுக அம்மா அணியில் இருக்கும் தங்க தமிழ்ச்செல்வன் டிடிவி தினகரன் ஆதரவாளர் என்பது குறிப்பிடத்தக்கது. ஆண்டிப்பட்டியில்…

By: Updated: June 19, 2017, 02:14:07 PM

ஆண்டிப்பட்டியில் ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்கப்படவில்லை என்றும், அது தொடர்பான கேள்விகேட்க சபாநாயகர் அனுமதி மறுத்தை கண்டித்து ஆளும் கட்சி எம்எல்ஏ- தங்க தமிழ்ச் செல்வன் சட்டமன்றத்தில் இருந்து வெளிநடப்பு செய்துள்ளார். அதிமுக அம்மா அணியில் இருக்கும் தங்க தமிழ்ச்செல்வன் டிடிவி தினகரன் ஆதரவாளர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆண்டிப்பட்டியில் ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்க வேண்டும் என இரண்டுவருடமாக அதிமுக அம்மா அணியில் இருக்கும் தங்க தமிழ்ச்செல்வன் அரசிடம் கோரிக்கை விடுத்து வந்தார். ஆனால் அது குறித்து தமிழக அரசு கண்டுகொல்லவில்லை என தங்க தமிழ்ச்செல்வன் குற்றம்சாட்டினார்.

இது தொடர்பாக சட்டமன்றத்தில் கேள்வி கேட்க முயன்ற எம்எல்ஏ தங்க தமிழ்ச் செல்வனுக்கு சபாநாயகர் அனுமதி மறுத்ததாக கூறப்படுகிறது. இதனை கண்டித்து தங்க தமிழ்ச்செல்வன் சட்டமன்றத்தில் இருந்து வெளிநடப்பு செய்துள்ளார். ஆளும் அதிமுக அம்மா அணியில் உள்ள தங்க தமிழ்ச்செல்வன் டிடிவி தினகரனின் ஆதரவாளர் ஆவார். ஆளும் கட்சியில் இருந்து கொண்டே அவர் சட்டமன்றத்தில் இருந்து வெளிநடப்பு செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.

தமிழக சட்டமன்ற வரலாற்றில் ஆளும் கட்சியில் உள்ள சட்டமன்ற உறுப்பினர் ஒருவர் ஆளும் கட்சிக்கு எதிராக நிலைப்பாட்டை எடுத்து சட்டமன்றத்தில் இருந்து வெளிநடப்பு எடுத்திருக்கும் நகழ்வு இது தான் முதல்முறை என்றும் கூறப்படுகிறது.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the Tamilnadu News in Tamil by following us on Twitter and Facebook

Web Title:Aiadmk mla ttv dinakarans supporter thanga tamil selvan walk out form assembly

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

இதைப் பாருங்க!
X