Advertisment

சி.வி. சண்முகம் மீது கோபமா? கே.பி. முனுசாமி கூறுவது என்ன?

சசிகலா வேண்டாம் என்று முதலில் குரல் கொடுத்தவன் நான்தான். முடிந்துபோன கதைக்கு முன்னுரை எழுதவேண்டாம்.

author-image
WebDesk
New Update
KP Munuswamy accused Sasikala for Jayalalithas death

அதிமுக மூத்தத் தலைவர் கே.பி. முனுசாமி

சி.வி. சண்முகம் என் தம்பி போன்றவர், அவர் மீது கருத்து வேறுபாடு ஏற்படுவதற்கான எண்ணம் எந்த சூழ்நிலையிலும் எனக்கு வராது என இ.பி.எஸ் தரப்பு முன்னணி தலைவர்களில் ஒருவரான கே.பி. முனுசாமி கூறியுள்ளார்.

அ.தி.மு.க எம்.எல்.ஏ.,வும் இ.பி.எஸ் தரப்பு முன்னணி தலைவர்களில் ஒருவருமான கே.பி.முனுசாமி, கிருஷ்ணகிரியில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார்.

Advertisment

அப்போது, உங்களுக்கும் சி.வி.சண்முகத்துக்கும் ஈகோ பிரச்னை நிலவுவதாகவும், அதனால் எடப்பாடி பழனிசாமியை நீங்கள் சந்திக்கச் செல்லவில்லை என்றும் தகவல் உலவுகிறதே? என செய்தியாளர்கள் கேட்டனர்.

இதற்கு பதிலளித்த கே.பி.முனுசாமி, இந்தக் கேள்விக்கு பதில் சொல்வதற்கே நான் வெட்கப்படுகிறேன். கொள்கைப்பிடிப்புடைய ஒரு தொண்டன் நான். சி.வி.சண்முகம் என்னுடைய தம்பியைப் போன்றவர்.

அவர் மீது கருத்து வேறுபாடு ஏற்படுவதற்கான எண்ணம் எந்த சூழ்நிலையிலும் எனக்கு வராது. நான் வயதில், அனுபவத்தில் மூத்தவன், என்னைப்போலவே உணர்வுள்ள உணர்ச்சிமிக்க தொண்டன் சி.வி.சண்முகம்.

இந்த இயக்கத்துக்காகவே அர்ப்பணித்துக்கொண்டிருக்கிற குடும்பம் அவரின் குடும்பம். எப்படியாவது, சிந்து முடித்து இந்த இயக்கத்தினுடைய வேகத்தையும், மீண்டும் ஆட்சி அமைப்பதையும் தடுக்க விஷமிகள் சித்து விளையாட்டு இது.

இதனைத்தொடர்ந்து அனைவருக்கும் கட்சியின் கதவுகள் திறக்கப்பட்டுள்ளன என்று ஜெயக்குமார் பேசிய கருத்துக்கள் குறித்த கேள்விக்கு, அம்மா மறைவுக்குப் பின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் இடத்தில் இ.பி.எஸ் நன்மதிப்பு பெறுகிறார்.

ஓ.பி.எஸ் நன்மதிப்பை இழந்துள்ளார். ஒற்றைத் தலைமை வேண்டும் என்று நிர்வாகிகளும், தொண்டர்களும் குரல் எழுப்பும்போது, அதை எதிர்கொண்டிருக்க வேண்டும். அதைவிடுத்து திருக்கோயிலைப்போல பார்க்கப்படும் தலைமைக் கழகத்தை சூறையாடியிருக்கிறார்.

நிறைய தவறுகளை செய்துவிட்டார். அதனால், ஓ.பன்னீர்செல்வத்தை முழுவதுமாக அப்புறப்படுத்திவிட்டோம்.

காலம் கடந்து மீண்டும் இணையலாம் என்று அவர் சொல்வதை எந்தத் தொண்டனும் ஏற்கவில்லை. ஒரு கட்சி தொண்டர் நீதிமன்றத்துக்கு செல்லக்கூடாது என்பதும் சட்டதிட்ட விதி. ஓ.பி.எஸ் தொடர்ந்து உச்ச நீதிமன்றம் வரை சென்றுகொண்டிருக்கிறார்.

எந்த தியாகமும் செய்யாமல் பல்வேறு பெரிய பதவிகளை வகித்தவர் அவர். எல்லா வகையிலும் நல்ல நிலையில் உள்ளது. அவர் ஒரு சுயநலவாதி. அவரைப்பற்றி அதிகம் பேசுபவர்கள்.

இந்த இயக்கத்துக்கு சசிகலா வேண்டாம் என்று முதலில் குரல் கொடுத்தவன் நான்தான்.

முடிந்துபோன கதைக்கு முன்னுரை எழுதவேண்டாம். கொள்கைப்பிடிப்போடு இ.பி.எஸ் தலைமையை ஏற்றுக்கொண்டிருக்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamil Nadu
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment