Advertisment

O Panneerselvam vs Edappadi Palanisamy : ஓ.பி.எஸ் தரப்பு நாளை தேர்தல் ஆணையத்திடம் மனு அளிக்க முடிவு

இரட்டைத் தலைமையுடன் இவ்வளவு நாட்கள் சுமூகமாக சென்று கொண்டிருந்த அதிமுக கட்சிக்குள் இப்போது, ஒற்றைத் தலைமை என்ற கோரிக்கை, வெடிக்கத் துவங்கி உள்ளது. அந்த ஒற்றை தலைமை ஓ.பன்னீர்செல்வமா அல்லது எடப்பாடி பழனிசாமியா என்பது தான் இப்போது அதிமுக தொண்டர்களின் மிகப்பெரிய கேள்வியாக உள்ளது.

author-image
WebDesk
New Update
O Pannerselvam High court

அதிமுக செயற்குழு, பொதுக் குழுக் கூட்டம் ஜூன் 23-ஆம் தேதி சென்னையை அடுத்த வானகரத்தில் நடைபெறவுள்ளது.

Advertisment

இந்நிலையில் கட்சியில் தற்போது வெடித்துள்ள ஒற்றை தலைமை என்ற விவகாரம் நாளுக்கு நாள் பெரிதாகிக்கொண்டு போகிறது. இந்த விவரகாரம் தொடர்பாக ஓபிஎஸ், இபிஎஸ் தனித்தனியாக தொடர்ந்து 8 வது நாளாக ஆலோசனை செய்து வருகின்றனர்.

இந்நிலையில் நேற்று பேட்டி அளித்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் ஒற்றை தலைமை வேண்டும் என்று தான் சொல்கிறோம். யார் தலைமையேற்க வேண்டும் என்று கூறவில்லை என்று கூறினார்.

மேலும் அதிமுக பொதுக்குழு, செயற்குழு கூட்டத்தை தற்போதைக்கு தள்ளி வைக்க வேண்டும்” என்று எடப்பாடி பழனிசாமிக்கு ஓ.பன்னீர்செல்வம் கடிதம் மூலம் வலியுறுத்தியுள்ளார் என அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் வைத்தியலிங்கம்  நேற்று கூறினார். இந்நிலையில்  எடப்பாடி பழனிசாமிக்குத்தான் கட்சியில் அதிகம் ஆதரவு இருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில் ஒ.பன்னீர்செல்வத்திற்கு 30 மாவட்ட செயலாளர்கள் ஆதரவு அளித்துள்ளதாக மூத்த நீர்வாகி வைத்தியலிங்கம் நேற்று கூறினார்.

இந்நிலையில் அதிமுக பொதுக்குழு கூட்டத்திற்கு தடை விதிக்கக் கோரி ஈரோடு முன்னாள் நிர்வாகி தொடர்ந்த வழக்கில், ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோர் பதிலளிக்க சென்னை உரிமையியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.  மேலும் வழக்கின் விசாரணை நாளைய தினத்திற்கு ஒத்திவைப்பட்டுள்ளது.

மேலும் ஒற்றைத் தலைமையாக எடப்பாடி பழனிச்சாமி வர வேண்டும் என பொள்ளாச்சி ஜெயராமன் கூறியுள்ளார். மேலும், கட்சி சிறப்பாக செயல்பட ஒற்றைத் தலைமை வேண்டும் என திருப்பூர் மாவட்ட அதிமுக சார்பாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதாகவும் அவர் நேற்றைய தினத்தில் தெரிவித்தார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil



  • 19:50 (IST) 21 Jun 2022
    ஓபிஎஸ் தரப்பு நாளை தேர்தல் ஆணையத்திடம் மனு அளிக்க முடிவு

    சென்னை, கிரீன்வேஸ் இல்லத்தில் சட்ட வல்லுநர்கள் மற்றும் ஆதரவாளர்கள் உடன் ஓ.பன்னீர்செல்வம் தீவிர ஆலோசனை நடத்திய நிலையில், தேர்தல் ஆணையத்திடம் ஓபிஎஸ் தரப்பு நாளை மனு அளிக்க முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது



  • 19:31 (IST) 21 Jun 2022
    ஓ.பி.எஸ் இல்லாமல் பொதுக்குழு நடைபெறுமா? செங்கோட்டையன் பதில்

    அ.தி.மு.க பொதுக்குழு கூட்டம் ஓ.பி.எஸ் கலந்துக் கொள்ளாவிட்டாலும் நடைபெறுமா என்ற கேள்விக்கு, ஜூன் 23 ஆம் தேதி கட்டாயம் பொதுக்குழு கூட்டம் நடைபெறும் என அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் பதிலளித்துள்ளார்



  • 19:13 (IST) 21 Jun 2022
    ஓ.பன்னீர்செல்வம் தனது ஆதரவாளர்களுடன் மீண்டும் ஆலோசனை

    சென்னை, கிரீன்வேஸ் சாலை இல்லத்தில் தனது ஆதரவாளர்களுடன் ஓ.பன்னீர்செல்வம் மீண்டும் ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார்



  • 18:54 (IST) 21 Jun 2022
    அ.தி.மு.க பொதுக்குழு நடைபெறவுள்ள இடத்தில் போலீசார் ஆய்வு

    சென்னையில் அதிமுக பொதுக்குழு நடைபெறவுள்ள இடத்தில் போலீசார் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். அப்போது அதிமுக பொதுக்குழு பாதுகாப்பு குறித்து முன்னாள் அமைச்சர் பெஞ்சமினிடம் காவல்துறை கேள்வி எழுப்பினர். மேலும், பொதுக்குழுவில் செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகள் குறித்தும் காவல்துறையினர் கேட்டறிந்தனர்



  • 18:07 (IST) 21 Jun 2022
    அ.தி.மு.க பொதுக்குழுவுக்கு தடை விதிக்கக் கோரிய வழக்கு; நாளை விசாரணை

    அதிமுக பொதுக்குழுவுக்கு தடை விதிக்கக் கோரிய வழக்கை முன்கூட்டியே விசாரிக்க கோரிய மனு நாளைய விசாரணைக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது. வழக்கில் எதிர்மனுதாரர்களாக உள்ள அனைவருக்கும் மனு நகலை வழங்க மனுதாரர் சூரியமூர்த்திக்கு சென்னை உரிமையியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது



  • 17:16 (IST) 21 Jun 2022
    காவல்துறை ஆணையருக்கு ஓ.பி.எஸ் மனு!

    "அதிமுக பொதுக்குழு கூட்டம் நடத்த அனுமதிக்க கூடாது" என்று ஆவடி காவல்துறை ஆணையருக்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மனு அளித்துள்ளார்.



  • 15:45 (IST) 21 Jun 2022
    ஒற்றை தலைமையாக எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவு - ஜெயக்குமார்!

    அதிமுகவில் ஒற்றை தலைமையாக எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவு என்றும், அதிமுகவின் அனைத்து மட்டத்திலும் ஒற்றை தலைமை ஏற்பு என்றும் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.



  • 15:04 (IST) 21 Jun 2022
    அதிமுக விவகாரத்தில் பாஜக தலையிடாது - பாஜக தலைவர் அண்ணாமலை

    அதிமுகவில் வரும் 23-ந் தேதி பொதுக்குழு கூட்டம் நடைபெற உள்ள நிலையில். கட்சியில் ஒற்றை தலைமை குறித்து ஒபிஎஸ் இபிஎஸ் மோதல் போக்கு நீடித்து வருகிறது. இந்நிலையில். அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரம் அவர்களின் உட்கட்சி தொடர்பானது. இதில் பாஜக எப்போதுமே தலையிடாது என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.



  • 14:57 (IST) 21 Jun 2022
    பொதுக்குழுவுக்கு தயாராகும் அதிமுக : கட்டவுட்டில் இணைந்த ஒபிஎஸ் - இபிஎஸ்

    அதிமுகவில் வரும் 23-ந் தேதி பொதுக்குழு கூட்டம் நடைபெற உள்ள நிலையில். கட்சியில் ஒற்றை தலைமை குறித்து ஒபிஎஸ் இபிஎஸ் மோதல் போக்கு நீடித்து வருகிறது. ஆனால் பொதுக்குழு தொடர்பான கட்டவுட்டில் ஒபிஎஸ் இபிஎஸ் இருவரும் பூங்கொத்து கொடுப்பது போல் வைக்கப்பட்டுள்ளது.



  • 14:29 (IST) 21 Jun 2022
    காவல்துறை கேட்ட 31 கேள்விக்கு அதிமுக சார்பில் பதில்

    நீதிமன்ற உத்தரவுப்படி பொதுக்குழு பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து போலீசாரிடம் அதிமுக சார்பில் பதில் அளிக்கப்பட்டுள்ளது. இதில் காவல்துறை கேட்ட 31 கேள்விகளுக்கான பதிலை முன்னாள் அமைச்சர் பெஞ்சமின் சி திருவேற்காடு காவல்நிலையத்தில் அளித்துள்ளார்.



  • 13:37 (IST) 21 Jun 2022
    இபிஎஸ் பக்கம் சாய்ந்த மேலும் ஒரு மாவட்ட செயலாளர் : காலியாகும் ஒபிஎஸ் கூடாரம்

    அதிமுக ஒற்றை தலைமை விவகாரத்தில் இதுவரை ஓபிஎஸ் பக்கம் நின்ற திருவள்ளூர் தெற்குமாவட்ட செயலாளர் அலெக்சாண்டர் தற்போது ஈபிஎஸ்க்கு ஆதரவு தெரிவித்துள்ளார். ஏற்கனவே ஓபிஎஸ் பக்கம் இருந்த நெல்லை, விருதுநகர் மாவட்ட செயலாளர்கள் இன்று இபிஎஸ் பக்கம் வந்த நிலையில், மேலும் ஒரு மாவட்ட செயலாளர் ஈபிஎஸ்க்கு ஆதரவு * தற்போது ஓபிஎஸ்-ன் பக்கம் 9 மாவட்ட செயலாளர்கள் உள்ளனர்



  • 13:24 (IST) 21 Jun 2022
    யாராக இருந்தாலும் அனைவரும் உரிய வழிமுறைகளை பின்பற்ற வேண்டும் - சென்னை உயர்நீதிமன்றம்

    சென்னையில் நடைபெற உள்ள அதிமுக பொதுக்குழுவுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும் என முன்னாள் அமைச்சர் பெஞ்சமின் சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், அனைத்து தரப்புக்கும் பாதுகாப்பு வழங்கி சட்டம் ஒழுங்கை நிலை நாட்ட வேண்டும் என்றும் காவல்துறையின் கேள்விகளுக்கு மதியம் 1 மணிக்குள் அ.தி.மு.க., பதில் அளிக்க வேண்டும் என்று கூறியுள்ளது.

    மேலும் எம்.பி., எம்.எல்.ஏ., என யாராக இருந்தாலும் அனைவரும் உரிய வழிமுறைகளை பின்பற்ற வேண்டும் என உத்தரவிட்டுள்ளது. இந்த வழக்கின் போது போலீஸ் சார்பில். பொதுக்குழு பாதுகாப்பு தொடர்பாக பிரச்சினை எனில் ஓ.பி.எஸ்., தரப்பு போலீசை அணுகலாம் என கூறியுள்ளது..



  • 12:37 (IST) 21 Jun 2022
    அதிமுக பொதுக்குழு கூட்டம்.. நீதிமன்றம் உத்தரவு!

    அதிமுக பொதுக்குழு கூட்டத்துக்கு பாதுகாப்பு வழங்குவது குறித்து ஆராய்ந்து முடிவெடுக்க, காவல்துறைக்கு சென்னை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.



  • 12:03 (IST) 21 Jun 2022
    இ.பி.எஸ் தலைமையேற்க வேண்டும்!

    எடப்பாடி பழனிசாமி தலைமையேற்க வேண்டும் என தொண்டர்கள் விரும்புகின்றனர். ஓ.பன்னீர்செல்வம் யாருக்கும் துரோகம் செய்யவில்லை. யாரும் அவரை ஓரம் கட்டவில்லை என இபிஎஸ் இல்லத்தில் முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் பேட்டியளித்தார்.



  • 12:03 (IST) 21 Jun 2022
    தொண்டர்களை சந்தித்த ஓ.பி.எஸ்!

    ஓபிஎஸ்’ ஆதரவு நிர்வாகிகளுடன் 8வது நாளாக ஆலோசனையில் ஈடுபட்ட நிலையில், சென்னை கிரீன்வேஸ் சாலை இல்லம் முன்பு திரண்டிருந்த தொண்டர்களை சந்தித்தார்.



  • 11:36 (IST) 21 Jun 2022
    தச்சை கணேச ராஜா புகழ்ச்சி!

    அதிமுக ஒற்றை தலைமை விவகாரம் இப்போது தீவிரமடைந்துள்ளது. இந்நிலையில், ஜெயலலிதா மறைவுக்கு பின் அதிமுகவை சிறப்பாக வழிநடத்தியவர் எடப்பாடி பழனிசாமி என தச்சை கணேச ராஜா புகழ்ந்துள்ளார்.



  • 11:15 (IST) 21 Jun 2022
    ஓ.பி.எஸ் ஆதரவு.. ஒருவர் விலகல்!

    ஓ.பி.எஸ் ஆதரவு நிலைப்பாட்டில் இருந்த விருதுநகர் மாவட்ட செயலாளர் சாத்தூர் ரவிச்சந்திரன் இபிஎஸ் இல்லம் வருகை தந்த நிலையில், ஓ.பி.எஸ் ஆதரவு மாவட்ட செயலாளர்களின் எண்ணிக்கை 9 ஆக குறைந்துள்ளது.



  • 11:04 (IST) 21 Jun 2022
    அதிமுக வழக்கு நாளை விசாரணை

    அதிமுக கட்சி விதிகளில் திருத்தங்கள் செய்ய தடை விதிக்க கோரிய மனு நாளை விசாரணை செய்ய சென்னை உயர் நீதிமன்றம் ஒப்புதல் .



  • 10:42 (IST) 21 Jun 2022
    இபிஎஸ் வீடு முன்பு குவிந்த அதிமுக தொண்டர்கள்

    இபிஎஸ் தலைமை ஏற்க வேண்டும் என்று அவர் வீட்டின் முன்பு அதிமுக தொண்டர்கள் குவிந்துள்ளனர். இபிஎஸ்-யை முதன்மை படுத்தும் பதாகைகளை ஏந்தி அவர் வீட்டின் முன்பு தொண்டர்கள் குவிந்துள்ளனர்.



  • 10:26 (IST) 21 Jun 2022
    8-வது நாளாக ஓபிஎஸ், ஈபிஎஸ் தனித்தனியாக ஆலோசனை

    8ஆவது நாளாக ஓபிஎஸ், ஈபிஎஸ் தனித்தனியாக ஆலோசனை நடத்தி வருகின்றனர். ஈபிஎஸ் இல்லத்திற்கு மூத்த தலைவர் தம்பிதுரை வைகை தந்துள்ளார். ஓபிஎஸ் இல்லத்திற்கு வெல்லமண்டி நடராஜன், மனோஜ் பாண்டியன், எம்பி தர்மர் வருகை தந்துள்ளார்.



  • 10:25 (IST) 21 Jun 2022
    8-வது நாளாக ஓபிஎஸ், ஈபிஎஸ் தனித்தனியாக ஆலோசனை

    8ஆவது நாளாக ஓபிஎஸ், ஈபிஎஸ் தனித்தனியாக ஆலோசனை நடத்தி வருகின்றனர். ஈபிஎஸ் இல்லத்திற்கு மூத்த தலைவர் தம்பிதுரை வைகை தந்துள்ளார். ஓபிஎஸ் இல்லத்திற்கு வெல்லமண்டி நடராஜன், மனோஜ் பாண்டியன், எம்பி தர்மர் வருகை தந்துள்ளார்.



  • 10:21 (IST) 21 Jun 2022
    திட்டமிட்டபடி அதிமுக பொதுக்குழு கூட்டம் நடைபெறும்- ஆர்.பி உதயகுமார்

    அதிமுக பொதுக்குழு நடைபெறுவதில் சிக்கல் நிலவரும் நிலையில் வரும் 23ஆம் தேதி திட்டமிட்டபடி அதிமுக பொதுக்குழு கூட்டம் நடைபெறும் என்று முன்னாள் அமைச்சர் ஆர்.பி உதயகுமார்



  • 08:51 (IST) 21 Jun 2022
    அதிமுகவை பலவீனப்படுத்த சிலர் முயற்சிக்கிறார்கள்: எடப்பாடி பழனிசாமி

    அதிமுகவை பலவீனப்படுத்த சிலர் முயற்சிக்கிறார்கள். இதை முறியடித்து உங்களின் துணைகொண்டு அதிமுகவை பலம்பொருந்தியதாக மாற்றுவேன். அதிமுக எந்த காலத்திலும் வீந்ததாக சரித்திரம் கிடையாது என்று அதிமுகவின் சமூகவலைதள பிரிவிடம் எடப்பாடி பழனிசாமி பேசியுள்ளார்.



  • 08:25 (IST) 21 Jun 2022
    பொதுக்குழு நடத்த 2,300 பேர் ஆதரவு

    பொதுக்குழுவை நடத்த வேண்டும் 2,300 நிர்வாகிகள் எழுத்து பூர்வமாக கடிதம் எழுதி அனுப்பி உள்ளதாக எடப்பாடி பழனிசாமி தரப்பு தெரிவித்துள்ளது. பொதுக்குழுவில் நிச்சயம் நாங்கள் கலந்துகொள்வோம் என்று தெரிவித்துள்ளதாக எடப்பாடி பழனிசாமி தரப்பு தெரிவித்துள்ளது



Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment