அரசுக்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்துள்ள டிடிவி தினகரன் தரப்பு எம்.எல்.ஏ-க்களை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என சபாநாயகருக்கு அரசு கொறடா பரிந்துரை செய்துள்ளார்.
இந்த நிலையில், சென்னையில் டிடிவி தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ வெற்றிவேல் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறும்போது: நாங்கள் ஆளுநரை சந்தித்தபோது, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பதவியை துஷ்பிரயோகம் செய்கிறார் என்றும், முதலமைச்சரின் நடவடிக்கை சரியில்லை என்று கூறிதான் நாங்கள் ஆளுநரிடம் கடிதம் அளித்தோம்.
அந்த கடிதத்தில் நாங்கள் குறிப்பிட்டுள்ளதாவது, கர்நாடகாவில் இதேபோன்று எதிர்த்த சட்டமன்ற உறுப்பினர்களை நீக்கி அதிகாரமையம் உத்தரவிட்டது. இந்த விவகாரத்தில், சட்டமன்ற உறுப்பினர்கள் நீக்கப்பட்டது செல்லாது என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது என்று குறிப்பிடப்பட்டுள்ளது என்று கூறினார்.
அப்படிப் பார்க்கும்போது, தற்போது உள்ள முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, கட்சியின் கொறடா ஆகியோர் உச்ச நீதிமன்றத்தை எதிர்க்க துணிந்துவிட்டனர். உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை படித்துப் பார்த்துவிட்டு பின்னர் தான் எதுவும் பேச வேண்டும்.
மேலும் சில எம்.எல்.ஏ-க்கள் எங்கள் பக்கம் வந்துவிடுவார்களோ என்று அவர்கள் பயப்படுகிறன்றனர். எம்.எல்.ஏ-க்களை மிரட்டுவதற்காக நடவடிக்கையாக தான் நாங்கள் பார்க்கிறோம்.
கொறடா உத்தரவுக்கு எம்.எல்.ஏ-க்கள் கட்டுப்படவேண்டாமா?
கொறடா உத்தரவிட்டால் எம்.எல்.ஏ-க்கள் அதற்கு கட்டுப்பட வேண்டும். எந்த கொறடா யாருக்கு, என்ன உத்தரவிட்டார்? அவரிடம் இருந்து எந்த போனும் இதுவரை எங்களுக்கு வரவில்லை. சபாநாயகர் அது குறித்து நடவடிக்கை எடுத்தால், நாங்கள் அதனை நீதிமன்றத்தில் சந்திப்போம்.
முன்னதாக அரசுக்கு எதிராக வாக்களித்த ஓ பன்னீர் செல்வத்தை கட்சியில் இருந்து நீக்காமல், அவருடன் சேர்ந்து கொண்டார்கள். நாங்கள் அரசை எதிர்த்து வாக்களிக்காத நிலையில், எம்.எல்.ஏ-க்களை நீக்க முடிவு செய்துள்ளனர். இதைத்தான் டிடிவி தினகரன் 420 என்று விமர்சனம் செய்திருந்தார்.
“முட்டாள்கள் சாம்ராஜ்யத்தில் அமர்ந்து கொண்டு முட்டாள் தனமான முடிவுகளை இவர்கள் தொடர்ந்து எடுத்துக் கொண்டிருக்கிறார்கள். இவர்களுக்கு அந்த அதிகாரம் கிடையாது”
முதலமைச்ரரை மாற்ற வேண்டும் தான் எங்களது கோரிக்கை. முன்னதாக இந்த அரசை ஊழல் அரசு என விமர்சித்த ஓ பன்னீர் செல்வம், தற்போது இந்த அரசு ஊழல் அற்ற அரசு என்று கூறினாரா? அல்லது அவ்வாறு கூறியதற்கு மன்னிப்பு கேட்டரா? நாங்கள் எதிர்பார்ப்பது ஊழலற்ற ஆட்சி என்று கூறினார்.
அரசு கொறடா 19 எம்.எல்.ஏ-க்களை தகுதிநீக்கம் செய்ய பரிந்துரை: செய்திக்கு இங்கே க்ளிக் செய்யவும்...