பிரதமருடன் ப்ரியங்கா சோப்ரா சந்திப்பு… முதலமைச்சர் குறித்து மீம்ஸ் வெளியிட்ட எம்எல்ஏ!

பிரதமர் நரேந்திர மோடியுடன் தமிழக முதலமைச்சர் சந்திப்பு மற்றும் பாலிவுட் நடிகை ப்ரியங்கா சோப்ரா சந்திப்பு தொடர்பான மீம்ஸை திமுக சட்டமன்ற உறுப்பினர் பூங்கோதை ஆலடி அருணா தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அந்த மீம்ஸை வெளியிட்டு தமிழகத்திற்கு தலைகுனிவு ஏற்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார். திருநெல்வேலி மாவட்டம் ஆலங்குளம் சட்டமன்ற தொகுதியின் எம்எல்ஏ-வாக இருப்பவர் பூங்கோதை ஆலடி அருணா. அவர் பதிவிட்டுள்ள அந்த பதிவில், முதலமைச்சர் ஒருவர் பிரதமர் முன்பாக எப்படி நடந்து கொள்கிறார் என்பது குறித்த மீம்ஸ் […]

poongothai aladi aruna, Tn assembly
பூங்கோதை ஆலடி அருணா

பிரதமர் நரேந்திர மோடியுடன் தமிழக முதலமைச்சர் சந்திப்பு மற்றும் பாலிவுட் நடிகை ப்ரியங்கா சோப்ரா சந்திப்பு தொடர்பான மீம்ஸை திமுக சட்டமன்ற உறுப்பினர் பூங்கோதை ஆலடி அருணா தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அந்த மீம்ஸை வெளியிட்டு தமிழகத்திற்கு தலைகுனிவு ஏற்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

திருநெல்வேலி மாவட்டம் ஆலங்குளம் சட்டமன்ற தொகுதியின் எம்எல்ஏ-வாக இருப்பவர் பூங்கோதை ஆலடி அருணா. அவர் பதிவிட்டுள்ள அந்த பதிவில், முதலமைச்சர் ஒருவர் பிரதமர் முன்பாக எப்படி நடந்து கொள்கிறார் என்பது குறித்த மீம்ஸ் இடம் பெற்றுள்ளது. இதைத்தொடர்ந்து, பிரதமர் மோடி முன்பு நடிகை பிரியங்கா சோப்ரா எவ்வாறு நடந்து கொள்கிறார் என்பதை அதனுடன் ஒப்பிட்டுள்ளார்.

அந்த இரு போட்டோக்களை சுட்டிக்காட்டியுள்ள பூங்கோதை, தமிழகத்திற்கு தலைகுனிவு ஏற்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

வெளிநாடுகளுக்கு அரசு முறைப்பயணம் மேற்கொண்ட பிரதமர் மோடியை, நடிகை ப்ரியங்கா சோப்ரா சந்தித்து புகைப்படம் எடுத்துக்கொண்டார். இந்த சந்திப்பின் போது ப்ரியங்கா சோப்ரா பிரதமர் மோடியுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் நெட்டிசன்கள் மத்தியில் விமர்சனத்திற்குள்ளானது என்பது குறிப்பிடத்தக்கது.

Get the latest Tamil news and Tamilnadu news here. You can also read all the Tamilnadu news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Alangulam mla poongothai aladi aruna puts a memes on pm modi edappadi palanisamy meet pm modi priyanka chopra

Next Story
தி சென்னை சில்க்ஸில் மீண்டும் ‘தீ விபத்து’!
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com