அம்பேத்கர், பட்டியலினத்தவர்களை விமர்சித்த விஷ்வ இந்து பரிஷத்தின் முன்னாள் தலைவர் ஆர்.பி.எஸ்.மணியனுக்கு 14 நாட்கள் நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்க சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி உத்தரவிட்டுள்ளார்.
அம்பேத்கர் குறித்து அவதூறாக பேசிய வழக்கில் ஆன்மீக சொற்பொழிவாளரும், முன்னாள் விஷ்வ பரிஷத் இயக்க தலைவருமான ஆர்.பி.வி.எஸ்.மணியன் இன்று கைது செய்யப்பட்டார்.
ஆன்மிக சொற்பொழிவாளரும், விஷ்வ பரிஷத் இயக்கத்தின் முன்னாள் மாநில தலைவருமான ஆர்.பி.வி.எஸ் மணியனை இன்று அதிகாலை 3.30 மணியளவில் தனிப்படை போலீசார் கைது செய்தனர். ஆன்மிக சொற்பொழிவு நிகழ்ச்சியில் அம்பேத்கரை பற்றி அவதூறாக பேசிய வழக்கில் அவர் தி. நகரில் உள்ள அவரது வீட்டில் கைது செய்யப்பட்டார்.
இவர் அம்பேத்கர் பற்றி அவதூறாக என்ன பேசினார் என்பது பற்றியும், இவர் மீது என்ன வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது என்பது குறித்தும் தெரியவில்லை. கைது செய்யப்பட்டுள்ள ஆர்.பி.வி.எஸ் மணியனை ரகசிய இடத்தில் வைத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் அம்பேத்கர், பட்டியலினத்தவர்களை விமர்சித்த விஷ்வ இந்து பரிஷத்தின் முன்னாள் தலைவர் ஆர்.பி.எஸ்.மணியனுக்கு 14 நாட்கள் நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்க சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி உத்தரவிட்டுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“