ஸ்டெர்லைட் பற்றி ஆவணப்படம் எடுத்த அமெரிக்கா பத்திரிக்கையாளர்… இந்தியா விட்டு வெளியேற உத்தரவு
ஸ்டெர்லைட் ஆலை தொடர்பாக ஆவணப் படம் எடுக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக கூறப்படும் அமெரிக்கா பத்திரிக்கையாளரை இந்தியா விட்டு வெளியேற உத்தரவு. ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான நடந்த போராட்டத்தின்போது தூத்துக்குடியில் 13 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். இதன்பின்னர், ஆலை சுற்றுச் சூழலுக்கு எதிரானது என்று கூறி அதனை இழுத்து மூடுவதற்கு…
ஸ்டெர்லைட் ஆலை தொடர்பாக ஆவணப் படம் எடுக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக கூறப்படும் அமெரிக்கா பத்திரிக்கையாளரை இந்தியா விட்டு வெளியேற உத்தரவு.
ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான நடந்த போராட்டத்தின்போது தூத்துக்குடியில் 13 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். இதன்பின்னர், ஆலை சுற்றுச் சூழலுக்கு எதிரானது என்று கூறி அதனை இழுத்து மூடுவதற்கு தமிழக அரசு அரசாணை பிறப்பித்தது. இதனை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் ஸ்டெர்லைட்டின் நிர்வாகமும், அதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக அரசும் வழக்கு தொடர்ந்திருக்கின்றன.
ஸ்டெர்லைட் அவணப்படம் : அமெரிக்க பத்திரிக்கையாளர் வெளியேற உத்தரவு
இந்நிலையில் தூத்துக்குடியில் இந்த ஆலையால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து அமெரிக்காவை சேர்ந்த பத்திரிகையாளர் மார்க் சியல்லா ஆவணப்படம் தயாரித்து வருகிறார். இந்த தயாரிப்பின்போது அவர் போராட்டக்காரர்களை சந்தித்து ஆலை குறித்து அதிக கேள்விகளை எழுப்பியதாக கூறப்படுகிறது. எனவே அவர் இந்தியாவை விட்டு வெளியேற வேண்டும் என்று போலீசார் அவரை வலியுறுத்தியுள்ளனர்.
நேற்று அவரை விசாரித்த போலீசார், அவரிடம் ஸ்டெர்லைட்டுக்கு எதிராக தொடர்ந்து செயல்படுவது குறித்து விசாரணையில் கேள்வி எழுப்பினர். கடந்த டிசம்பர் 27-ம்தேதி சியல்லா டூரிஸ்ட் விசாவில் இந்தியா வந்தவர், விசா விதி மீறலில் ஈடுபட்டிருப்பதாக போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.
சியல்லாவிடம் நடத்தப்பட்ட விசாரணை குறித்து தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி. முரளி ரம்பா, தனியார் தொலைகாட்சிக்கு அளித்த பேட்டியில், “விசா தொடர்பான விதிகளை மார்க் சியல்லா மீறியுள்ளார். தற்போது அவர் ஸ்டெர் லைட் ஆலை தொடர்பான ஆவணப்படத்தை உருவாக்கி வருகிறார். அவர் ஐதராபாத் வழியாக வெளிநாடு செல்வார். அவர் சந்தித்த ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்பாளர்களிடம் நாங்கள் விசாரணை நடத்தி வருகிறோம்” என்று கூறினார்.
எனவே அமெரிக்க பத்தியாளரை இந்தியா விட்டு அனுப்பி வைக்கும் பணியில் போலீசார் தீவிரமாக இறங்கியுள்ளனர்.