தமிழகத்தில்10 இடங்களில் அம்மா பெட்ரோல் பங்குகள் அமைக்கப்படும்: தமிழக அரசு

தமிழகத்தில் 10 இடங்களில் அம்மா பெட்ரோல் பங்க்குகள் அமைக்கப்படும் என தமிழக அரசின் கொள்கை விளக்கக் குறிப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் அம்மா பெட்ரோல் பங்குகள் அமைக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. சட்டமன்றத்தில் இதற்கான அறிவிப்பை உணவுத் துறை அமைச்சர் காமராஜ் தெரிவித்தார். அதன்படி தமிழகத்தில் 10 இடங்களில் அம்மா…

By: June 16, 2017, 4:31:30 PM

தமிழகத்தில் 10 இடங்களில் அம்மா பெட்ரோல் பங்க்குகள் அமைக்கப்படும் என தமிழக அரசின் கொள்கை விளக்கக் குறிப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் அம்மா பெட்ரோல் பங்குகள் அமைக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. சட்டமன்றத்தில் இதற்கான அறிவிப்பை உணவுத் துறை அமைச்சர் காமராஜ் தெரிவித்தார். அதன்படி தமிழகத்தில் 10 இடங்களில் அம்மா பெட்ரோல் பங்க்குகள் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்திய எண்ணெய் நிறுவனங்களுடன் இணைந்து தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் இந்த பெட்ரோல் பங்குகளை அமைக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அம்மா பெட்ரோல் பங்க்குகள் அமைக்கப்படும் இடங்கள் குறித்தும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில், சேலம் மாவட்டம் எடப்பாடி, சென்னை நந்தனம், தஞ்சை மாவட்டம் இரும்புத் தலை, திருவாரூர் மாவட்டம் சுந்தரக்கோட்டை, வேலூர் மாவட்டம் வாணியம்பாடி, நாகை மாவட்டம் கோவில்பத்து, மதுரை மாவட்டம் கப்பலூர், விழுப்புரம் மாவட்டம் வானூர், கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் மற்றும் திருச்சி மாவட்டம் மணப்பாறை ஆகிய 10 பகுதிகளில் அம்மா பெட்ரோல் பங்க்குகள் தொடங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the Tamilnadu News by following us on Twitter and Facebook

Web Title:Amma petrol bunk will be started in 10 places says tamilnadu government

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

இதைப் பாருங்க!
X