Advertisment

குழந்தைகளை பிற குழந்தைகளோடு ஒப்பிட்டு பார்க்க கூடாது; அன்பில் மகேஷ் பொய்யாமொழி

ஒவ்வொரு பள்ளி குழந்தைகளும் நேர்த்தியாக தங்கள் அறிவியல் படைப்புகளை இங்கு காட்சிப்படுத்தினர். குழந்தைகளை பிற குழந்தைகளுடன் ஒப்பிட்டு பார்க்கக் கூடாது.

author-image
WebDesk
New Update
Anbil Magesh says Children should not be compared to other children

மாணவ- மாணவியருடன் அன்பில் மகேஷ் பொய்யாமொழி

அறிவியல் தொழில்நுட்ப பொறியியல் மற்றும் கணிதவியல் விழா

சலேசிய அருட்சகோதிரிகளின் திருச்சி மாநிலம் சார்பில் மணிகண்டத்தில் உள்ள ASSIST சமூக மேம்பாட்டு தொண்டு நிறுவனம் சார்பாக புதன்கிழமை (டிச.28) பஞ்சப்பூர் கிறிஸ்துராஜ் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடந்தது.

Advertisment

இந்நிகழ்வில் 10 தனியார் மற்றும் அரசுப்பள்ளிகளைச் சார்ந்த 25 குழுவினர் தாங்கள் தயாரித்த அறிவியல் சார்ந்த படைப்புகளை கண்காட்சியில் காட்சிப்படுத்தினர்.

அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பார்வையிட்டு மாணவர்களின் விளக்கங்களை கேட்டு அறிந்தார். இந்நிகழ்வில் சலேசிய துணை மாநில தலைவி அருட்சகோதிரி மரிய புஷ்பம் தலைமை வகித்தார். திட்ட ஒருங்கிணைப்பாளர் கிப்ட்டா சுபாஷினி வரவேற்புரையாற்றினார்.

அசிஸ்ட் தொண்டு நிறுவன இயக்குனர் அருட்சகோதிரி. ஆரோக்கிய மேரி செல்வி அறிமுக உரையாற்றினார். முன்னதாக, அன்பில் மகேஷ் பொய்யாமொழி நிகழ்வை குத்து விளக்கேற்றி தொடங்கி வைத்தார்.

பின்னர், பரிசு பெற்ற பள்ளிகளின் குழந்தைகளை பாராட்டி , விருது , சான்றிதழ் மற்றும் ஊக்கத்தொகைகளை வழங்கினார்.

அப்போது அவர் பேசுகையில், “தகைசால் தமிழர் அய்யா நல்லகண்ணு கேட்டுக்கொண்டதற்கு இணங்க இந்த நிகழ்வில் கலந்து கொள்கிறேன்.

அசிஸ்ட் நிறுவனம் இவ்வளவு சமூக பணிகளை செய்யும் செய்யும் என நான் எதிர் பார்க்கவில்லை. நேரில் அதை பார்த்து மகிழ்ச்சி அடைகிறேன். ஒவ்வொரு பள்ளி குழந்தைகளும் நேர்த்தியாக தங்கள் அறிவியல் படைப்புகளை இங்கு காட்சிப்படுத்தினர்.

குழந்தைகளை பிற குழந்தைகளுடன் ஒப்பிட்டு பார்க்கக் கூடாது. குழந்தைகள் திறமைகளை ஊக்கப்படுத்தும் நோக்கில் தமிழ்நாடு முதல்வர் "வானவில் மன்றத்தை" உருவாக்கினார்.

மாணவர்கள் புத்தகத்தில் படிக்கும் படிப்போடு நின்றுவிடாமல் , அதை செயல்படுத்த STEM கல்வி தேவை. இதை வலியுறுத்தும் வகையில் வானவில் மன்றத்தை செயல்படுத்தி வருகிறோம்.

குழந்தைகளின் திறமைகளை ஆசிரியர் மற்றும் பெற்றோர்கள் ஊக்கப்படுத்த வேண்டும். குழந்தைகள் பேரார்வத்தோடு (Passionate) செயல்படும் போது வெற்றி பெற முடியும்.

விஞ்ஞானிகள் சர்.சி.வி.ராமன் , டாக்டர். அப்துல்கலாம் ஆகியோர் பிறந்த மண்ணில் இன்னும் பல விஞ்ஞானிகள் உருவெடுத்து புகழ் சேர்க்க வேண்டும் என மாணவர்களை கேட்டுக் கொண்டார்.

இந்த நிகழ்வில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில நிர்வாகக் குழு உறுப்பினர் தோழர் இந்திரஜித் , சமூக செயற்பாட்டாளர் யா. அருள் , கிறிஸ்துராஜ் கல்லூரி செயலாளர் முனைவர் சீதா அருணாச்சலம் ஆகியோர் கலந்து கொண்டு பள்ளி குழந்தைகளை உற்சாகப்படுத்தி பேசினார்கள்.

Propeller Technology நிறுவனர் ஆஷிக் ரகுமான் நடுவராக இருந்து மாணவர்களின் வெற்றி படைப்புகளை தேர்வு செய்ததோடு இல்லாமல் வாழ்த்திப் பேசினார்.

இந்த நிகழ்வு வெற்றிபெற இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணும் வாழ்த்து தெரிவித்தார்.

இறுதியில் Assist தொண்டு நிறுவன நலிந்தோருக்கான திட்ட ஒருங்கிணைப்பாளர் சின்னராசு நன்றியுரை ஆற்றினார்.

இந்த நிகழ்வில் சுமார் 300 க்கும் மேற்ப்பட்ட பள்ளி குழந்தைகள் கலந்து கொண்டனர். பெற்றோரும் , சலேசிய சகோதிரிகளும் , கிறிஸ்துராஜ் கல்லூரி மாணவர்களும் , திரளாக வந்திருந்தனர்.

செய்தியாளர் க. சண்முகவடிவேல்

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/

Tamil Nadu
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment