Advertisment

தேசிய கீதத்தில் திராவிடம் என்கிற வார்த்தையை ஆர்.என் ரவி விட்டு விடுவாரா? அன்புமணி கேள்வி

தேசிய கீதத்தில் திராவிடம் என்ற வார்த்தை வருவதை கவர்னர் பாடாமல் விட்டு விடுவாரா ? என்று அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.

author-image
Vasuki Jayasree
New Update
தேசிய கீதத்தில் திராவிடம் என்கிற வார்த்தையை ஆர்.என் ரவி விட்டு விடுவாரா? அன்புமணி கேள்வி

தேசிய கீதத்தில் திராவிடம் என்ற வார்த்தை வருவதை கவர்னர் பாடாமல் விட்டு விடுவாரா ? என்று அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.

Advertisment

பசுமை தாயகம் அமைப்பு சார்பில் நாளை  "நொய்யல் ஆற்றை மீட்போம்" கருத்தரங்கு நடைபெற உள்ளது.இதில் கலந்துகொள்ள சென்னையில் இருந்து விமான மூலம் கோவை வந்த பாமக தலைவர் டாக்டர்.அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர் கூறியதாவது.நொய்யல் ஆற்றை மீட்டெடுக்க வேண்டும் என்ற முதற்கட்ட முயற்சி எடுக்கிறோம். அதற்கான அனைத்து முயற்சிகளும் மேற்கொள்வோம். அனைவரும் ஒன்று சேர வேண்டும்.நொய்யல் நன்றாக இருந்தால்தான் கொங்கு மண்டலம் வளர்ச்சி பெறும் .

நொய்யல் ஆற்றில் 4 அரை லட்சம் ஏக்கர் ஒரு காலத்தில் பாசனம் செய்தார்கள்.இந்த ஆற்றை காப்பாற்ற வேண்டும் என்ற நோக்கத்தில் செயல்படுகிறோம்.நொய்யலை மீட்டெடுப்பதற்கு முன் அதை தொடங்குகின்ற காடுகளை மீட்டெடுக்க வேண்டும்.அனைத்து கழிவுகளும் நேரடியாக நொய்யலுக்கு போகிறது. சாயக்கழிவுகள் கணக்கே கிடையாது.

publive-image

சவுத் கொரியாவில், லண்டனில் இதுபோன்ற பாதிக்கப்பட்ட நதிகளை மீட்டெடுத்துள்ளனர். அதேபோல மீட்டெடுக்க வேண்டும்.இந்த நீரோடைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அப்புறப்படுத்த வேண்டும். வேண்டியவர்கள் என்று பார்க்க கூடாது.காலநிலை மாற்றம் பெரிய சவாலாக இருக்கும்.

பாரம்பரிய நீரை மீட்டெடுக்க வாருங்கள்.நொய்யல் ஆற்றுக்கும் சோழர்களுக்கும் நெருங்கிய தொடர்புள்ளது.தூர் வருவதில் ஆயிரக்கணக்கான கோடி ஊழல் நடந்து வருகிறது.ஆளுநரும் அரசியல் செய்யக்கூடாது. தமிழக அரசும் ஆளுநரை மதிக்க வேண்டும். ஆளுநரும் அரசியல் சாசனத்திற்கு ஏற்ப நடந்து கொள்ள வேண்டும். வேறுவிதமான அரசியலில் ஈடுபடக் கூடாது.

தமிழ்நாட்டில் எவ்வளவு பிரச்சனை உள்ளது. இதை விட்டு தமிழ்நாடா தமிழகமா மத்திய அரசா ஒன்றிய அரச என இருக்க கூடாது.ஆன்லைன் விளையாட்டால் பல குடும்பங்கள் நடுவீதிக்கு வருகிறது. இது தமிழ்நாட்டு மக்களின் பிரச்சினை. ஏன் ஆளுநர் கையெழுத்து போடவில்லை. ஆளுநர் இதில் கவனம் செலுத்த வேண்டும். தமிழ்நாடா தமிழகமா என்பது ஆளுநரின் வேலை கிடையாது.

கவர்னர் தேசிய கீதத்தில் திராவிடம் என்று வருகிறது அதை பாடாமல் விட்டு விடுவாரா.வந்த வெள்ளத்தில் இன்னும் விவசாயிகளுக்கு நிவாரணம் கிடைக்கவில்லை.தேசிய கீதத்திற்கு முன்பு கவர்னர் வெளியேறியது மரபுக்கு மீறிய செயல்.ஒரு மாதமா இரண்டு படம் வருவதற்கு விவாதம் பண்ணுகிறீர்கள்.

108 ஆம்புலன்ஸில் ஒரு சில வாகனங்கள் பழுதடைந்துள்ளது. அதை சுகாதாரத்துறை அமைச்சர் சரி செய்ய வேண்டும்.சிறப்பாக செயல்படுகிறார். 108 ஓட்டுநர்களின் பணி நிலைப்பு பிரச்சனைகள் சரி செய்ய வேண்டும்.2026 இல் பாட்டாளி மக்கள் கட்சி தலைமையில் கூட்டணி ஆட்சி அமைப்போம். அதற்கான வியூகங்களை நாடாளுமன்றத் தேர்தலில் அமைப்போம்.

நாடாளுமன்ற தேர்தலுக்கு ஆறு மாதங்களுக்கு முன்பு நிலைப்பாடு அறிவிப்போம்.கேரளா அரசு தீவிரமாக டிஜிட்டல் சர்வேயில் ஈடுபட்டு வருகிறது. இதனால் பாதிப்பு தமிழகத்திற்கு வரும். தமிழக அரசு கவனம் செலுத்த வேண்டும். இதில் இரு மாநில பிரச்சினைகள் வரும். இருவரும் சேர்ந்து தான் சர்வே பண்ண வேண்டும். தமிழக அரசு கேரளாவுக்கு குழு அமைத்து நடுநிலையான சூழல் உருவாக்க வேண்டும்.

மகாராஷ்டிராவுக்கும் கர்நாடகாவுக்கும் நடக்கும் பிரச்சினை போன்ற சூழல் இங்கு வரக்கூடாது. கேரளா தீவிரமாக செயல்படுகிறது.திமுகவின் கூட்டணி சார்ந்த அரசு தான் அங்குள்ள அரசு.ஆயிரம் ரூபாய் அறிவித்ததை ஏன் ..?அவர்களின் அக்கவுண்டில் போடக்கூடாது.இது சாத்தியம். ஆறடி கரும்பு தான் என்ற முடிவை மாற்ற வேண்டும். அதிக ரசாயனம் கலந்தால் தான் ஆறடி வரை வளரும். அது யாருக்கும் நல்லதல்ல. தமிழக முதல்வரிடம் யார் சொன்னார்கள் என்று தெரியவில்லை.

காவேரி ரீஜினவேஷன் ஸ்கீம் மூலம் நொய்யல் ஆற்றுக்கு நிதி ஒதுக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார் பாட்டாளி மக்கள் கட்சி தலைவர்  டாக்டர் அன்புமணி ராமதாஸ்.

செய்தி: பி.ரஹ்மான், கோவை

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment